Sunday, June 21
Shadow

‘நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ ஜிம்ப்ரானிடம் உறுதியளித்த தல அஜீத்

நேர் கொண்ட பார்வை படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைப்பர் என்று முதலில் தெரிவிகப்பட்டது. இந்நிலையில் நடிகர் அஜீத் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வேண்டும் என்று விரும்புயதாக தகவல்கள் வெளியானது. அஜீத் யுவன் இணைந்து பில்லா, ஆரம்பம், தீனா மற்றும் மங்காத்தா போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் ஜிப்ரான் நடிகர் அஜீத்தை நேர் கொண்ட பார்வை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பேசிய அஜீத் எதிர்காலத்தில் நம்ம ரெண்டும் பேரும் சேர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஜிப்ரான், தான் அஜீத் உடன் எடுத்து கொண்ட போட்டோவையும் பதிவு செய்துள்ளார்.

அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ள நிலையில், அந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.