Thursday, March 20
Shadow

Tag: #Ghibran

சர்வதே விருதை வென்றார்  இசையமைப்பாளர் ஜிப்ரான்

சர்வதே விருதை வென்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்

Latest News, Top Highlights
இசையமைப்பாளர் ஜிப்ரான், தனது அதீதமான இசையால் நம் மனதை துளையிட்டு அதன் அடி ஆழத்துக்கு இழுத்து செல்வார். பல அடுக்குகளை கொண்ட அவரது பாடல்கள் மிக சிறப்பாக இசை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. கொண்டாட்டங்கள் என்பது தாய்நாட்டில் மட்டுமல்ல, அவை நாடு மற்றும் மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது மிக மகிழ்ச்சியான, கொண்டாட்டமான ஒரு தருணம். ஏனெனில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் இசை துறையில் அவரது சேவையை பாராட்டி, 'ASIAN ARAB AWARD 2019' என்ற விருதை அவருக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறும்போது, "எல்லா புகழும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கே. எனது வேலைக்கு சர்வதேச தளத்தில் அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு கௌரவம். பஹ்ரைன், சௌதி அரேபியா, இந்தோனேசியா, ஐக்கிய...
‘நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ ஜிம்ப்ரானிடம் உறுதியளித்த தல அஜீத்

‘நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ ஜிம்ப்ரானிடம் உறுதியளித்த தல அஜீத்

Latest News, Top Highlights
நேர் கொண்ட பார்வை படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைப்பர் என்று முதலில் தெரிவிகப்பட்டது. இந்நிலையில் நடிகர் அஜீத் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வேண்டும் என்று விரும்புயதாக தகவல்கள் வெளியானது. அஜீத் யுவன் இணைந்து பில்லா, ஆரம்பம், தீனா மற்றும் மங்காத்தா போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். சமீபத்தில் ஜிப்ரான் நடிகர் அஜீத்தை நேர் கொண்ட பார்வை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பேசிய அஜீத் எதிர்காலத்தில் நம்ம ரெண்டும் பேரும் சேர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஜிப்ரான், தான் அஜீத் உடன் எடுத்து கொண்ட போட்டோவையும் பதிவு செய்துள்ளார். அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ள நிலையில், அந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது....
சென்னை 2 சிங்கப்பூர் ரசிகர்கள் நல்ல இசைப்பயணத்தை கொடுக்கும்: ஜிப்ரான்

சென்னை 2 சிங்கப்பூர் ரசிகர்கள் நல்ல இசைப்பயணத்தை கொடுக்கும்: ஜிப்ரான்

Latest News
ஒரு நல்ல இசையமைப்பாளரின் தனித்தன்மை என்பது படத்தின் கதைக்கு சில அம்சங்களை சேர்த்து இசையமைப்பது மட்டுமல்ல, அதற்கு உயிர் கொடுப்பதும் தான். திரைப்படங்களுக்கு இசையின் மூலம் உயிர் கொடுப்பது என்பது ஒரு கலை, அந்த கலையில் வல்லுனராக உருவாகி வருபவர் தான் இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரது பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. அவரது இசையின் மூலமான கதை சொல்லலில் படத்துக்கு உயிர் கொடுத்து, ரசிகர்களுக்கு நல்ல, மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அவரின் 'அறம்', தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் திரைப்படமாகவும், நல்ல இசையாகவும் சிறப்பானவையாக அமைந்தவை. "எந்தவொரு நல்ல திரைப்படத்திலும் உயிர் இருக்கிறது, அதை என் இசையின் மூலம் வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை. இயக்குனரின் தெளிவான சிந்தனை, சிறப்பான திரைக்கதை, திறமையான தொழில்நுட்ப கலைஞர்க...