Friday, September 11
Shadow

`நட்பே துணை’ திரை விமர்சனம் (நண்பர்களின் வெற்றி) Rank 4/5

நடிகர் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஆதி முதல் படத்தில் தன் சொந்தகதையை மீசைய முறுக்கு என்று  படமாக கொடுத்து மிக பெரிய வெற்றிபெற்றார் தன் இரண்டாம் படத்தில் சமுக சிந்தனையோடு ஹாக்கி விளையாட்டுயை மையபடுத்தி களம் இறங்கி இருக்கிறார் இதில் எப்படி விளையாடியுள்ளார் என்பதை பார்ப்போம் . இதுவும் ஒரு உண்மை சம்பவம் தான் கதை களம் பாண்டிசேரியை மைபடுத்தி எடுத்துள்ளார். அதுவும் மிகவும் உணர்வுபூர்வமாக திரைகதை அமைத்து ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார் .

இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு ஹாக்கி மற்றும் நட்பு இந்த இரண்டையும் கலந்து ஒரு சிறப்பான படத்தை கொடுத்துள்ளார் நடிகர் ஆதியின் பலம் அறிந்து அருமையான ஒரு திரைகதை அமைத்து மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். என்று சொன்னால் மிகையாகது முதல் பாதி காதல் காமெடி என்று விளையாட்டு தனம் உள்ள ஒரு திரைகதை மூலம் ரசிக்க வைத்த இயக்குனர் இரண்டாம் பகுதியில் ரசிகர்களை மிகவும் சீரியஸ் திரைகதை அதோடு அருமையான திரைகதை விளையாட்டில் உள்ள அரசியல்தனம் இதனால் மாணவர்களின் இன்னல்கள் இவை மிகவும் தெளிவாக கூறியுள்ளார் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு.

சரி இந்த படத்தின் கதை மற்றும் நடிகர்களை பற்றி பார்ப்போம்

ஆதி ,கரு பழனியப்பன் ,கௌசல்யா ஹரிஸ் உத்தமன்,எருமசாணி விக்னேஷ் அனக்னா மற்றும் பலர் நடிப்பில் ஹிப் ஹாப் ஆதி இசையில் வெளிவந்து இருக்கும் படம் நட்பே துணை

படத்தின் கதையைபடி, கௌசல்யா மகன் ஆதி இவருக்கு பிரான்ஸ் நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆனால் அவரின் தயாருக்கு மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது ஆசை இதற்கு நடுவில் ஹாக்கி வீரர் அரங்கநாதன் விளையாட்டு மைதானத்துக்கு அமைச்சர் கரு பழனியப்பனால் ஆபத்து ஏற்படுகிறது இந்த மைதானத்தை காப்பாற்ற பாடுபடும் ஹரீஸ் உத்தமன் இந்த மைதானம் காப்பாற்ற பட்டதா இல்லையா என்பது தான் மீதி கதை

பிரபாகரன் எனும் பாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி பிரமாதமாக நடித்திருக்கிறார். அதில் முரட்டு சிங்கிள் பாடல் தியேட்டரை விட்டு வெளி வந்த பின்பும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அனகா எனும் புதுமுக நாயகி ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக பக்காவாக நடித்திருக்கிறார்.

வில்லனாக வரும் கரு பழனியப்பன், நான் என் முதல் முறை கிடைத்த மந்திரி பதவியிலேயே எனக்கு 100 கோடி, என் மனைவிக்கு 100 கோடி, என் பிள்ளைக்கு 100 கோடி.. என 300 கோடி சம்பாதித்து ஒதுக்கி விட்டேன். இப்போது சம்பாதிப்பதெல்லாம் மக்கள் உங்களுக்கு ஒவ்வொரு முறை தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது… அதற்காக தான் ஓட்டுக்கு பணம் வாங்கும் பொதுமக்கள் தான் எங்களை ஒவ்வொரு முறையும் ஊழல்வாதிகளாகவே வைத்திருக்கின்றனர் என்று கிளைமாக்சில் பேசுவது எதிர்த்தமாக உள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை பலம் .இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியை இதுவரை எந்த தமிழ் சினிமாவும் பேசாத அளவுக்கு இப்படம் பேசியிருப்பது பெரும் பலம். ஹிப் ஹாப் ஆதிக்கு இசை மற்றும் இயல்பான நடிப்பிற்காக ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்.