
ஹாலிவுட் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்’ திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக 3 மொழிகளிலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலிற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் இந்தி “மார்வெல் ஆன்ந்தம்” பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் “மார்வெல் ஆன்ந்தம்” பாடல் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது. இதற்கான வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.