
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்திற்கான அடுத்த கட்ட சூட்டிங் டெல்லியில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ள நிலையில், டெல்லியில் இப்படத்தின் முக்கிய காட்சிகளை இரண்டு வாரங்கள் படமாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜயுடன், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் முக்கிய காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இயக்குனர் அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டேயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லூக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் நடிகர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியாக உள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாக்கி வரும் இந்த படத்தை வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
