
தமிழ் சினிமாவில் எப்பதாவது தான் நல்ல கதைகள் வரும் ஆனால் 2௦16ம் ஆண்டு மிக சிறந்த கதைகளுடன் வந்தது என்று தான் சொல்லணும் இந்த வருடத்தின் முதல் படம் என்றால் அது அழகு குட்டி செல்லம் மிக சிறந்த படங்களில் ஒன்று ஆனால் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை குழந்தைகளின் முக்கியத்தை சொன்ன படம். அதே போல தான் இந்த வருட இறுதியில் மிக சிறந்த படம் என்று ஆணித்தரமாக சொல்லும் படமாக “அச்சமின்றி” படம் அமையும் என்பதி எந்த வித சந்தேகம் இல்லை, முதல் இந்த வருடத்தின் முதல் படம் குழந்தைகளை பற்றி இந்த வருடத்தின் இறுதி படம் அச்சமின்றி கல்வியை பற்றி அதில் நடக்கும் ஊழலை பற்றி மிகவும் ஆழமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
அச்சமின்றி ராஜபாண்டி இயக்கத்தில் விஜய் வசந்த், சமுத்திரகனி,பரத் ரெட்டி, கருணாஸ், சிருஷ்டி டாங்கே, தலைவாசல் விஜய், ராதா ரவி, பிரியதர்ஷினி மற்றும் பலர் நடிப்பில் பிரேம்ஜி இசையில் ராதாகிருஷ்ணன் வசனத்தில் வெளிவந்துள்ள படம்.
படத்தில் வரும் சில கதாபாத்திரங்களை பற்றி விவரமாக சொன்னால் படம் பார்க்கும் விறுவிறுப்பு குறையும் ஆகவே சில விஷயங்கள் கதையும் முழுமையாக சொல்ல முடியாத சூழ்நிலை என்று தான் சொல்லணும்
கல்வித் துறையில் இன்றைக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதைதான் இந்த ‘அச்சமின்றி’ திரைப்படம்.
ஹீரோ விஜய் வசந்த் ஒரு பக்கா லோக்கல் பிக்பாக்கெட் ரவுடி. தன்னுடன் கருணாஸ், தேவதர்ஷிணி ஆகியோரை கூட்டணி வைத்து பஸ்களில் பிக்பாக்கெட் அடித்து பொழுதைக் கழிப்பவர். இவருக்குள்ளும் ஒரு காதல் பொங்கி வழிகிறது. பேருந்தில் பார்த்த மலர் என்னும் சிருஷ்டி டாங்கேயை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். அவரது காதலுக்கு இவரது பிக்பாக்கெட் டீமே விழுந்து, விழுந்து வேலை செய்கிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் விஜய் வசந்திடம் இருக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் பர்ஸை பார்த்துவிட்டு விஜய் வசந்த் போலீஸ் என்று நினைக்கும் சிருஷ்டி டாங்கே உண்மையாகவே விஜய் வசந்தை காதலிக்கத் துவங்குகிறார்.
இன்னொரு பக்கம் அந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கிறார் சமுத்திரக்கனி. என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். இவருக்கு லஞ்சம் வாங்குவது.. ஊழலில் ஈடுபடுவது.. திருட்டுக்கு துணை போவது இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது.
இந்த நேரத்தில் இவரது கல்லூரி கால காதலியும், வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியுமான வித்யாவை சந்திக்கிறார். வித்யாவின் தம்பி தான் படித்த பள்ளிக்கூடத்தில் ஏதோ பிரச்சினை என்று தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் வித்யாவின் தாய், தந்தை இருவரும் தொடர்ந்து இறந்துவிட்டதையும் கேட்டு அதிர்ச்சியாகிறார் சமுத்திரக்கனி.
தான் அப்போது பார்த்த அதே வித்யா இப்போது தனி மரமாக இருப்பதை உணர்ந்த சமுத்திரக்கனிக்கு இப்போது வித்யா மீது ஒரு பரிவு ஏற்படுகிறது. கான்ஸ்டபிள் கும்கி அஸ்வின் அந்தப் பரிவை பேசி பேசியே காதலாக்கிவிடுகிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று ஒரு விபத்தில் வித்யா இறந்து போகிறார். வித்யாவின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னால் அவர் பயன்படுத்திய ஸ்கூட்டருக்கு அபாரதத் தொகை கட்டச் சொல்லி போக்குவரத்து போலீஸிடமிருந்து தகவல் வருகிறது.
இதனையறியும் சமுத்திரக்கனி, வித்யா இறந்த நேரத்திற்கு பின்பே அவரது ஸ்கூட்டர் போக்குவரத்து போலீஸால் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை கண்டறிகிறார். இதில் ஏதோ சூது இருப்பதை உணர்ந்தவர் அதைக் கண்டுபிடிக்க முயல்கிறார்.
டோல்கேட்டில் இருக்கும் சிசிடிவி கேமிராவில் பார்க்கும்போது வித்யாவின் ஸ்கூட்டரை யாரோ ஒரு ஆள் தள்ளி வருவதைப் பார்க்கிறார். இதை வைத்து போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர், வித்யா இறந்த நேரத்தைத் தவறாகக் குறித்துக் கொடுத்திருப்பதை உணர்கிறார்.
இதே நேரம் சிருஷ்டி டாங்கேயின் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் 10-ம் வகுப்பு படிக்கும் பெண், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பூச்சி மருந்தை குடித்து மருத்துவமனையில் சீரியஸாக சேர்க்கப்படுகிறார். இதையறியும் சிருஷ்டி டாங்கே மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கிறார்.
இந்த மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த விவகாரம் கல்வியமைச்சரின் பி.ஏ.வுக்கு தெரிய வர.. அவர் தனது அடியாட்களுடன் சிருஷ்டி டாங்கேவின் வீட்டுக்கு வந்து அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார். அவர்களிடமிருந்து தப்பிக்கும் சிருஷ்டி டாங்கே போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் செய்ய வருகிறார். ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டரான பரத் ரெட்டி சிருஷ்டியிடம் “இது பெரிய கேஸா இருக்கு. வாங்க.. போலீஸ் கமிஷனர்கிட்ட போய் புகார் கொடுக்கலாம்…” என்று சொல்லி அவரை போலீஸ் ஜீப்பில் அழைத்து வருகிறார்.
இதே நேரம் கோவிலுக்கு வந்திருக்கும் விஜய் வசந்த், அந்த ஏரியாவின் பெரிய ரவுடியான ஆர்.கே.வின் பர்ஸை அபேஸாக்குகிறார். தனது பர்ஸ் பறி போனதை உணர்ந்த ஆர்.கே. பிக்பாக்கெட் அடித்த விஜய் வசந்தை தனது அடியாட்களை வைத்துத் தூக்கி வருகிறார்.
பர்ஸை தேடி தருகிறேன் என்று சொல்லி ஆர்.கே.வின் அடியாட்களுக்கு போக்குக் காட்டி அவர்களிடமிருந்து தப்பிக்கிறார் விஜய் வசந்த். வழியில் போலீஸ் ஜீப் வர.. அதில் வாலண்டியராக சிக்கிக் கொள்கிறார். அந்த ஜீப்பில்தான் சிருஷ்டியும் இருக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் “என்னாச்சு..?” என்று கேட்டுக் கொள்கிறார்கள்.
வழியில் சமுத்திரக்கனி பரத் ரெட்டிக்கு போன் செய்து வித்யா இறப்பு சம்பந்தமாக ஒரு க்ளூ கிடைத்திருப்பதாகவும் உடனேயே அவரை கிளம்பி வரும்படிச் சொல்ல பரத் ரெட்டி பாதி வழியிலேயே இறங்கிக் கொண்டு சிருஷ்டியை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்லும்படி சொல்லிவிட்டு சமுத்திரக்கனியை தேடி செல்கிறார்.
சமுத்திரக்கனி போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டரின் வீட்டுக்குச் சென்று பொய் சொன்னதற்காக அவரைத் தாக்குகிறார். அந்த நேரத்தில் அங்கே வரும் பரத்ரெட்டி.. அந்த டாக்டரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அந்தப் பழியை சமுத்திரக்கனி மீது சுமத்தி, உடனேயே மீடியாவை அழைத்து அவர்கள் முன் சமுத்திரக்கனியை காட்டிவிடுகிறார்.
இன்னொரு பக்கம் விஜய் வசந்தையும், சிருஷ்டியையும் அமைச்சர் பி.ஏ.வின் அடியாட்களிடத்தில் ஒப்படைக்கிறார்கள் போலீஸார். அங்கே விஜய் வசந்த் கடுமையாக சண்டையிட்டு சிருஷ்டியையும் காப்பாற்றிவிட்டு ஆர்.கே.வின் பர்ஸை வைத்திருக்கும் கருணாஸை தேடி காஞ்சிபுரம் அருகேயிருக்கும் ஒரு ஊருக்குச் செல்கிறார்.
இன்னொரு பக்கம் சமுத்திரக்கனியை என்கவுண்ட்டரில் போட பரத் ரெட்டி திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டத்தை சமுத்திரக்கனி முறியடித்து அவரிடமிருந்து தப்பித்துச் செல்கிறார்.
விஜய் வசந்தும், சிருஷ்டியும் அந்தக் கல்யாணத்திற்கு வர.. அங்கே கல்வி அமைச்சரும் வருவதை தெரிந்து அவரிடத்தில் இது பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அந்த நேரத்தில் அமைச்சருடன் அவரது பி.ஏ.வும் உடன் இருக்க.. அதை சிருஷ்டி பார்த்துவிட்டு விஜய் வசந்திடம் சொல்ல.. இருவரும் இங்கேயிருந்தும் தப்பிக்கிறார்கள்.
சிருஷ்டியை கொலை செய்ய முயற்சிப்பது கல்வியமைச்சரின் பி.ஏ. இதே பி.ஏ.தான் வித்யாவின் கொலைக்கான காரணத்தை கண்டறிய நினைக்கும் சமுத்திரக்கனியையும் கொலை செய்ய முயல்கிறார். இதற்கென்ன காரணம்..? சிருஷ்டி டாங்கேவின் புகார் பின்னணி, வித்யாவின் கொலைக்கான பின்னணி என்ன என்பதெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..!
என்னமோ நடக்குது திரைப்படம் பிறகு இந்த கூட்டணி மீண்டும் முழு நம்பிக்கையோடு இணைந்து இருக்கிறது. அந்த படத்தின் வெற்றியை விட இந்த பாடத்தின் வெற்றி மிக பிரகாசமாக இருகிறது காரணம் படத்தின் இயக்குனரின் கதையும் திரைக்கதையும் தான் அந்த அளவுக்கு மிகவும் சுவாரிசயமாக கலப்பாகவும் கொடுத்துள்ளார். இயக்குனர் படத்தின் மிக முக்கிய பலம் என்றால் கதை அடுத்து நட்சத்திர தேர்வு யாருக்கு எதுவருமோ அதை இயக்குனர் சரியாக தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும். விஜய்வசந்த் வைத்து அதிகமா சண்டை எல்லாம் வைக்காமல் அவரின் பலம் தெரிந்து கதை காட்சிகள் அமைத்துள்ளது பாராட்ட வேண்டும். விஜய் வசந்த் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக ரசிக்கும் படி நடித்துள்ளார் .
சமுத்திரகனி என்றாலே நேர்மையான பாத்திரம் என்று நமக்கு தெரியும் அதே போல மேர்மையான இன்ஸ்பெக்டர் அவருக்கு முதல் முறையாக காதல் காதலி என்று கதையமைப்பு அதுக்காக இயக்குனர் அவரை டூயட் எல்லாம் பாடவிடவில்லை ஆடவும் விடவிடாமல் செய்தது சிறப்பு தன் பலம் அறிந்து மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் சமுத்திரகனி.
சிருஷ்டி டாங்கே எப்பவும் போல தான் பெரிதாக ஒன்னும் சொல்லும் படி இல்லை ஆனால் இந்த படத்தில் சண்டை எல்லாம் போட்டு இருக்காங்க
படத்தின் மிகபெரியபலம் என்றால் அது படத்தின் வசனங்கள் நீண்ட நாளுக்கு பிறகு படத்தின் வசனங்கள் அனல் பறக்குது அது மட்டும் இல்லை நம்மை யோசிக்க வைக்கிறது வசனம் எழுதிய ராதா கிருஷ்ணனை பாராட்டவேண்டும்.
இதுவரை அழகான அன்பான அம்மாவாக வந்த சரண்யா பொன் வண்ணன் இந்த படத்தில் மிக பெரிய வில்லியாக நடித்துள்ளார் பள்ளி முதல்வராக வரும் சரண்யா தான் படத்தின் முதுகு எலும்பு கதை இவரை நோக்கிதான் அமைதியாக பார்த்த நாம் இதில் இவரை புயலாக பார்க்க முடிந்தது இவருக்குள் எத்தனை திறமை எது கொடுத்தாலும் செய்வேன் என்று நிருபித்துள்ளார்.
படத்துக்கு இசை பிரேம்ஜி அவரின் பங்கு இன்னும் கொஞ்சம் இருந்து இருக்கலாம் பாடல்களும் சரி பின்னணி இசையும் சுமார்தான்
மொத்தத்தில் அச்சமின்றி இந்த ஆண்டின் சிறந்த படபட்டியலில் இடம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை
அச்சமின்றி பார்க்கவேண்டிய படம்
RANK 5/3.5
