
சந்தானம் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
சந்தானம் சென்னையில் பொழிச்சலூர் என்ற ஊரில் பிறந்து, பின் பல்லாவரம் என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தார்.
இவர் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, கண்ணா லட்டு தின்ன ஆசைய என்ற திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார். பிறகு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தி ல் கதனயகனகவும் நடித்துள்ளார்.
சந்தானம் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தன் நகைச்சுவை திறமைக்கு பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் நடித்த படங்கள்
மத கஜ ராஜா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு 2, பைரவா, சக்க போடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் – 2017, நம்பியார், தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும், வாலிப ராஜா, தில்லுக்கு துட்டு, இது நம்ம ஆளு, நண்பேன்டா, வாலு, ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, ஐ, ஆம்பள, இனிமே இப்படித்தான், வானவராயன் வல்லவரையன், லிங்கா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வீரம், இது கதிர்வேலன் காதல், பிரம்மன், இங்க என்ன சொல்லுது, யா யா, ராஜா ராணி, வணக்கம் சென்னை, 555, தலைவா, சிங்கம் 2,
பட்டத்து யானை, தில்லு முல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆல் இன் ஆல் அழகு ராஜா, சேட்டை, அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, நீ தானே என் பொன்வசந்தம், போடா போடி, தாண்டவம், மிரட்டல், நான் ஈ, சகுனி, கலகலப்பு, ஒரு கல் ஒரு கண்ணாடி, லீலை, முப்பொழுதும் உன் கற்பனைகள், வானம், சிங்கம் புலி, சிறுத்தை, யுவன் யுவதி, ஒஸ்தி, வேலூர் மாவட்டம், தெய்வத்திருமகள், அய்யனார், சிக்கு புக்கு, மந்திர புன்னகை, பாஸ் என்கிற பாஸ்கரன், எந்திரன், தில்லாலங்கடி, மாஞ்சா வேலு, தீராத விளையாட்டுப் பிள்ளை, மலை மலை, ஜெயம் கொண்டான், அழகிய தமிழ் மகன், கிரீடம், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சில்லுனு ஒரு காதல், மன்மதன்
இவர் தயாரித்த படங்கள்
தில்லுக்கு துட்டு 2, கண்ணா லட்டு தின்ன ஆசையா
இவர் பாடிய பாடல் இடம் பெற்ற படங்கள்
அறை எண் 305ல் கடவுள்
