Sunday, April 19
Shadow

பிரமாண்டமாக துடங்கிய விஜய் 63 படத்தின் பூஜை

விஜய் 63 படத்தின் பூஜை வீடியோவை ஏஜிஎஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு இயக்குநர் அட்லி, நடிகர் விஜய் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

ஏராளமான முன்னணி நடிகர்கள், இந்தியாவின் தலை சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் தளபதி 63 விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். மாபெறும் பொழுதுபோக்கு திரப்படமாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

இன்று பூஜையுடன் தொடங்கிய இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் பூஜைக்கான புகைப்படங்கள் இன்று காலை வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது படத்திற்கு புஜை போடப்பட்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது