Tuesday, February 11
Shadow

நடிகை ஜெனிலியா பிறந்த தினம் பதிவு

ஜெனிலியா (ஹரிணி) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.


தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

உருமி, வேலாயுதம், சச்சின் பாய்ஸ், சத்யம், துஜே மேரி கசம், மஸ்தி, சம்பா, நா அல்லுடு, சச்சின், சுபாஷ் சந்திர போஸ், சை, ஹேப்பி, ராம், பொம்மரில்லு, சென்னைக் காதல், தீ, மிஸ்டர். மேதாவி, சத்யா இன் லவ், சந்தோஷ் சுப்பிரமணியம், மேரி பாப் பஹலி ஆப், ரெடி, ஜானே தூ யா ஜானே நா, சசிரேகா பிரயாணம், லைப் பார்ட்னர், காதா, சான்ஸ் பே டான்ஸ், உத்தம புத்திரன், ஆரஞ்சு, உறுமி, போர்ஸ், வேலாயுதம், இட்’ஸ் மை லைப், ஹூக் யா குரூக், நா இஷ்தாம், தேரே நால் லவ் ஹோ கயா, ராக் தி ஷாடி