Tuesday, October 27
Shadow

நடிகை மனிஷா யாதவ் பிறந்த தினம் இன்று

மனிஷா யாதவ் இந்திய நாட்டு நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் 2012ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9, என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்துக்கு 60 வது தேசிய திரைப்பட விருதுகள், 2 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய திரைப்பட விருதுகள் மற்றும் 7 வது விஜய் விருதுகள் என பல விருதுகளை வென்றது. அதன் மூலம் விஜய் விருது சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார். அதே ஆண்டில் துணிக துணிக என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பனும் பாண்டியா, ஒரு குப்பை கதை