Tuesday, October 27
Shadow

நடிகை நிவேதா தாமஸ் பிறந்த தினம் இன்று

இவர் தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும், மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகின்றார்.

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003ம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 2008ம் ஆண்டு வெருதே ஒரு பார்யா திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது வென்றார். அதே ஆண்டில் குருவி என்ற தமிழ்த் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமானார். 2009ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் அரசி என்ற தொடரில் ராதிகாவின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஆனார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

குருவி, ராஜாதி ராஜா, போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா