Tuesday, October 27
Shadow

நடிகை நேகா சர்மா பிறந்த தின பதிவு

நேகா சர்மா (Neha Sharma, பிறப்பு: 21 நவம்பர் 1987)] ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். பீகார் மாநிலத்தைச் சார்ந்த இவர் மவுண்ட் கார்மல் பள்ளியில் படித்தவர்.[2] பின்னர் தேசிய ஆடை வடிவமைப்பாளர் தொழில்நுட்பக் கல்லூரியில் (NIFT) ஆடை வடிவமைப்பாளர் பட்டமும் பெற்றவர். இவரும் இவருடைய முழு குடும்பமும் பீகாரிலிருந்து தில்லிக்கு குடிபெயர்ந்தது. திரைப்பட நடிகையாக சிறுத்த எனும் தெலுகு மொழிப்படத்தில் நடித்தார்.[3] இவர் நடித்த முதல் இந்தி மொழித் திரைப்படம் மோஹித் சூரியின் க்ரூக் திரைப்படமாகும். 2010 ஆம் ஆண்டில் இத்திரைப்படம் வெளியானது. இவர் எந்தவித திரைத்துறைப் பின்புலமும் இல்லாதவர் ஆவார். இவரது நடிப்பு இத்திரைப்படத்தில் பரவலான கவனத்தினைப் பெற்றது.

நேகா சர்மா 21 நவம்பர் 1987 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் பாகல்பூர் எனும் இடத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் அஜித் சர்மா இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் பாகல்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நேகா சர்மா தனது தந்தையாருக்காக தேர்தல் காலங்களில் பலமுறை பிரச்சாரம் செய்துள்ளார். நேகா சர்மா சிறுவயதில் ஈழை நோயால் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஹைதிராபாத்திலுள்ள ஒரு குடும்பத்தின் ஆசீர்வாதத்தால் தற்போது அந்நோயிலிருந்து முழுமையாக சுகம் பெற்றதாகத் தெரிவிக்கிறார்.

சமையல் செய்வது, இசை கேட்பது மற்றும் நடனம் ஆடுவது ஆகியன இவரது பொழுது போக்குகளாகும்.[4] இந்திய பாரம்பரிய நடனமான கதக் நடனத்தில் இவர் பயிற்சி பெற்றவர். மேலும் லத்தீன் நடனம் சல்சா (salsa), ஜிவ் (jive), ஜாஸ் (jazz), மெரின்ங் (merengue), ஹிப் ஹாப் (hip hop) ஆகியவற்றையும் கற்றுள்ளார்.

இவர் நடித்து தமிழில் வெளியான சோலோ திரைப்படம் குறித்த நாளில் தமிழகத்தில் திரையிடப்படவில்லை. இத்திரைப்படத்தில் மலையாள உருவாக்கத்திலும் நேகா சர்மா தமிழ் பேசும் பெண்ணாக நடித்திருக்கிறார். திரைப்படம் வெளியாக வேண்டிய காலத்தில் தமிழகத்தின் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு புதிய திரைப்படங்களை வெளியிடமாட்டோம் என அறிவித்ததால் ஒரு நாள் மட்டும் திரையிடப்பட்டு பின்னர் திரையரங்குகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பின் போராட்டம் முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் திரையிடப்பட்டது. நேகா சர்மாவுக்கு வரும் அனைத்து திரைப்பட வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல், வித்தியாசமான கதாப்பாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்களை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். இவர் சில குறும்படங்களிலும் பங்கு பெற்றுள்ளார். இதுவரை அவர் நடித்த திரைப்படங்களில் பட்டியல்.

இவர் நடித்த தமிழ் படம்

ஜூங்கா