Sunday, June 28
Shadow

நடிகை பிரியா ஆனந்த் பிறந்த தினம் இன்று இவரைப்பற்றிய சில வரிகள்

இவர் தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுகிறார். ஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, எசுப்பானியம் ஆகிய மொழிகளையும் பேசுகிறார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை பன்னிரண்டு தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் மூன்று தமிழ் படங்களிலும் நடித்துவருகிறார்.

இவர் நடித்த படங்கள்

வாமனன், புகைப்படம், லீடர், ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா, நூற்றெண்பது 180, இங்கிலீஷ் விங்கிலீஷ், கோ அன்டே கோட்டி, ரங்கிரீஸ், எதிர் நீச்சல், ஃபுக்ரே, வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை