
இயக்குனர் சிவா இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வந்த அஜித்துக்கு அடுத்த இயக்குனர் சிவா இல்லை என்று ஒரு வித சந்தோசம் ரசிகர்களுக்கு காரணம் ஈண்டும் ஒரு புது இயக்குனருடன் எப்போது சேருவார் என்று ரசிகர்களுக்கு மிக பெரிய ஒரு ஏக்கமாக இருந்தனர் அவர்களுக்கு அடுத்த படம் இயக்குனர் வினோத் என்றது மிக பெரிய சந்தோஷம்
அஜித் இரு விதத் தோற்றங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு தற்போது ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறது.
ஐதராபாத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து படக்குழு மும்பை சென்று பாடல் காட்சியை படமாக்கிவருகிறது. இதைத் தொடர்ந்து புனேவில் படப்பிடிப்பு நடத்தப்படஉள்ளது.
இதைத் தொடர்ந்து அஜித் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அது பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் எனவும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி மாதம் வினோத் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
