
அஜித் இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகிவரும் நான்காவது படம் தான் ‘விஸ்வாசம்’ இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருந்தனர் ஆனால் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் எட்று சொன்னது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தும் ரசிகர்களை அடிக்கடி எதாவது இந்த படம் விருந்து கொடுத்து தான் வருகிறது அந்த வரிசையில் சமீபத்தில் இந்த படத்தின் புகைப்படங்கள் லீக்கானது தற்போது படத்தின் டைட்டில் பாடல் வரிகள் லீக்கானது.
அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வரும் இந்தப் படத்தில், விவேக், ரவி அவானா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.
‘விஸ்வாசம்’ படத்தில் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ஃபர்ஸ்ட் லுக்கில் இரண்டு விதமான அஜித்தின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததால், எந்த அஜித்துக்கு இந்தப் பெயர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இந்த ‘தூக்கு’ துரை என்ற கேரக்டர் மதுரைக்காரர் என்பதால், மதுரைத் தமிழில் பேசி நடித்து வருகிறார் அஜித் என்கிறார்கள்.
இந்தப் படத்தில், பாடலாசிரியர் அருண் பாரதி ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அந்தப் பாடலில், ‘எத்தன உயரம் இமயமல, அதில் இன்னொரு சிகரம் எங்க தல…’ என்ற வரி இடம் பெற்றுள்ளது. இந்த வரியை, அருண் பாரதியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுவே படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
