Friday, April 19
Shadow

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இணைந்த மிக முக்கிய பிரபலம்

அஜித்தின் விசுவாசம் திரைப்படம் எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்து ஆகவேண்டும் என்று படபிடிப்பு மிக மும்முரமாக நடந்து வருகிறது அஜித் தன் முதல் கட்ட படபிடிப்பை முடித்து விட்டார்.

அஜித் சிவா மீண்டும் கூட்டணியில் இணைந்து நடித்து வருகிறார். விசுவாசம் என பெயரிப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது.

ஹைதராபாத்தில் இதற்கான ஷூட்டிங்ஸ் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விரைவில் மும்பையில் தொடங்கவுள்ளது.

இமான் முதன் முதலாக அஜித்தின் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தற்போது காலா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள சாக்க்ஷி அகர்வால் இந்த விசுவாசம் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.