
தமிழ்நாடு அரசின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்திற்கு நடிகர் அஜித் குமார் பாராட்டு!
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகரும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று அஜித் குமார் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் ஈடுபட்டு வரும் அஜித் குமார், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வாசகத்தை சற்று மாற்றி தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில்,
“தமிழ்நாடு அரசின் ஒரு சிறிய அடி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்”
என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக முதலமைச்சரின் அனைத்து முயற்சிகளும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அஜித் குமார், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து விளையாட்டு சார்ந்த முன்னெடுப்புகளும் வெற்றிபெற வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை இந்தியாவின் முக்கிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறிவிப்புக்கு, மோட்டார் பந்தய வீரரான அஜித் குமார் தனது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar Appreciates Tamil Nadu Government’s Motorsports City Initiative
Actor and international racing driver Ajith Kumar has appreciated the Tamil Nadu Government’s announcement to establish a world-class Motorsports City in the state.
In a letter addressed to the Chief Minister of Tamil Nadu, Ajith Kumar praised the state government’s continued efforts towards the development of sports and its initiatives to identify talented youngsters and provide them with the right opportunities.
Ajith Kumar said that the announcement regarding the establishment of a dedicated Motorsports City in Tamil Nadu has brought him immense happiness.
Having been associated with the world of motorsports for several years, Ajith Kumar expressed his appreciation by adapting the famous words of astronaut Neil Armstrong.
