
கமல்ஹாசனின் அடுத்த திரைப்பயணம் தொடக்கம்; எஸ்.யு. அருண்குமாருடன் முதல் முறையாக கூட்டணி
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், தொடர்ந்து புதிய முயற்சிகளைத் தேர்ந்தெடுத்து வரும் கலைஞருமான கமல்ஹாசன், தனது அடுத்த திரைப்படத்திற்காக இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கைகோர்க்கிறார்.
கமல்ஹாசன் மற்றும் எஸ்.யு. அருண்குமார் இணையும் முதல் திரைப்படமாக உருவாகும் இந்தப் புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அண்மையில் நடைபெற்ற கமல்ஹாசனின் ‘லுக் டெஸ்ட்’ தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
புதிய தோற்றங்களிலும், இதுவரை செய்யாத கதாபாத்திரங்களிலும் தன்னை தொடர்ந்து மாற்றிக்கொண்டு வரும் கமல்ஹாசனின் இந்தப் புதிய லுக், திரைப்படம் குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் தொடர்பான விவரங்களை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.
தனித்துவமான கதைக்களங்களையும், மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட படைப்புகளையும் உருவாக்கிய இயக்குநர் எஸ்.யு. அருண்குமார், கமல்ஹாசனை எந்த வகையான திரை உலகில் அறிமுகப்படுத்தப் போகிறார் என்பதே தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கியக் கேள்வியாக உள்ளது.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இணையும் இந்த முயற்சி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

‘லுக் டெஸ்ட்’ வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படத்தின் பிற விவரங்கள் குறித்து தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு புதிய அத்தியாயமாக அமையவுள்ள இந்தத் திரைப்படம், கமல்ஹாசன் – எஸ்.யு. அருண்குமார் என்ற புதிய கூட்டணியின் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.
Kamal Haasan Begins a New Chapter with Director S.U. Arun Kumar
Indian cinema icon Kamal Haasan is set to embark on a new cinematic journey as he joins hands with filmmaker S.U. Arun Kumar for his next feature film.
The upcoming project marks the first collaboration between Kamal Haasan and S.U. Arun Kumar. Early work on the film is currently underway, with the team recently completing a look test featuring Kamal Haasan.
Glimpses from the look test have generated considerable attention on social media, with audiences keenly discussing the actor’s new appearance. Known for constantly reinventing himself and taking on characters that challenge conventional boundaries, Kamal Haasan’s latest look has further fuelled curiosity about the world and character being developed for the film.
While the visuals have offered audiences an early glimpse of the project, the makers have chosen to keep details about the story and Kamal Haasan’s character under wraps.
The collaboration has also generated interest due to S.U. Arun Kumar’s distinctive body of work and his ability to create stories rooted in strong characters and human emotions. How the filmmaker will present Kamal Haasan in this new cinematic world has now become one of the key points of anticipation surrounding the project.
The film is jointly produced by Raaj Kamal Films International (RKFI) and Turmeric Media, bringing together two prominent production houses for the much-awaited venture.
With the look test successfully completed, preparations are progressing towards the commencement of principal photography, which is expected to begin soon. Further announcements regarding the cast, technical crew and other details of the project are expected to be officially revealed in the coming days.
The film is poised to mark another significant chapter in Kamal Haasan’s illustrious career, while also introducing audiences to the exciting new creative partnership between the legendary actor-filmmaker and director S.U. Arun Kumar.
