
நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விவேகம் திரைப்படம் பெரிய தோல்வியை தழுவியது.இதற்கு பிறகும் இயக்குனர் சிவாவுடன் சேரமாட்டார் என்று நினைத்தனர்.பிறகு நடிகர் அஜித்குமாரும் இயக்குனர் சிவாவும் நான்காவது முறையாக இணைகின்றனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிறகு இந்த படத்திற்கு விசுவாசம் என்று பெயர் அறிவித்துள்ளனர் இதுவரை நாம் அனைவரும் அறிந்ததே.
இயக்குனர் சிவா ஒரு பேட்டியில் கூறியதாவது தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு வீரம் படத்தின் கதையை கூற போனேன்.
அப்போது அவர்கள் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து ஒரு மணிநேரம் வரை சினிமாவை பற்றி பேசினோம் பிறகு கைகொடுத்து நாம் இருவரும் படம் பன்றோம் என்று கூறினார்.
நடிகர் அஜித்குமார் என்னிடம் கடைசிவரை வீரம் படத்தின் கதையை கேட்கவில்லை.
