Saturday, April 18
Shadow

அஜித்தின் விவேகம் படத்தின் பாடல் வரிகள் இணையத்தளதில் கசிந்தன

வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுக்க சிறுத்தை சிவாவுடன் இணைந்து விவேகம் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தல அஜித். பல்கேரியாவைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்ஸ் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

வெளியான நேரத்தில் இருந்தே இணையம் முழுவதும் “விவேகம்” பற்றிய பேச்சு வைரலானது. அஜீத் 6 பேக் வைத்திருக்கும் இந்த ஃபோட்டோவை பார்த்து அனைவரும் பிரமித்துப்போனார்கள். இதற்கு முந்தைய பல சாதனைகளை விவேகம் ஃபர்ஸ்ட் லுக் பெற்று இருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் அஜீத்தை பாராட்டி வருகின்றனர். தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், அதர்வா, குஷ்பூ என கோலிவுட் பிரபலங்கள் அஜீத்தை புகழ்ந்துள்ளனர். இப்படியிருக்கும் போது படத்தில் தல எண்ட்ரியாகும் சாங் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சால்ட் அண்ட் பேப்பர் அட்ரா…
லோடு ஆன புல்லட் போடுறா…
அனல் பறக்கும் வேகம் வெறிடா…
அந்தர் மாஸ் தான் இவன் தேகம் வாடா…
படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு பாடல் காட்சி அமைந்துள்ளதால், இது போன்ற பாடல் வரிகள் எதுவும் படத்தில் இல்லை என்று மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply