Thursday, September 24
Shadow

72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகள்… ‘அன்னக்கிளி’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!

72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகள்… ‘அன்னக்கிளி’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!

இளம் தலைமுறையின் ரசனைக்கு ஏற்ற வகையில் உருவாகியுள்ள புதிய காதல் பாடல் ‘அன்னக்கிளி’, வெளியான மூன்றே நாட்களில் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து கவனம் ஈர்த்துள்ளது.

பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், வாகீசன் ராசையாவின் முதல் இசை ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ தொகுப்பின் முதல் பாடலாக அமைந்துள்ளது. பாடலை எழுதி, பாடி, நடித்திருக்கும் வாகீசன், தனது சிறுவயது காதலை நினைவுபடுத்தும் வகையில் ஒரு இளைஞனின் காதல் உணர்வுகளை பாடல் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.

கிராமத்து பின்னணியில் நடக்கும் இளம் காதலின் இயல்பான தருணங்கள், வெட்கம், குறும்பு மற்றும் காதல் கலந்த உரையாடல்களை மையமாகக் கொண்டு ‘அன்னக்கிளி’ உருவாகியுள்ளது. பாரம்பரிய நாட்டுப்புற இசையுடன் நவீன ராப் இசையையும் இணைத்து பாடலுக்கு புதுமையான இசை அனுபவத்தை இசையமைப்பாளர் சிவ பத்மயன் வழங்கியுள்ளார்.

‘Top Cooku Dupe Cooku’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான மோனிஷா பிளெஸ்ஸி, வாகீசனுடன் இணைந்து பாடலில் நடித்திருப்பதுடன், இருவரின் திரை கெமிஸ்ட்ரியும் பாடலின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

சமீபத்தில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் Gen Z மாணவர்களிடம் ‘அன்னக்கிளி’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பு, பாடல் குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

இயக்குநர் கிரிபாகர்ஜெய் ஜெ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த இசை வீடியோ, கிராமிய காதல் கதையை வண்ணமயமாகவும் கலகலப்பாகவும் இளமைத் துள்ளலுடனும் காட்சிப்படுத்துகிறது.

‘தமிழ் கிறுக்கன்’ ஆல்பத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களில் முதல் பாடலாக வெளியாகியுள்ள ‘அன்னக்கிளி’, பழைய கால காதலின் உணர்வுகளை இன்றைய தலைமுறையின் இசை ரசனையுடன் இணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

டாக்டர் ஜெ.பி. லீலாராம், ராஜீ.க, சரவணன்.பா மற்றும் ரேகா.லீ ஆகியோர் தயாரித்துள்ள ‘அன்னக்கிளி’ பாடலை தற்போது Brand Blitz Entertainment YouTube சேனலில் காணலாம்.

‘Annakili’ Crosses 3 Million Views in Just 72 Hours, Wins Over Audiences!

Brand Blitz Entertainment’s latest musical release, ‘Annakili’, has created a strong buzz by crossing 3 million views within just 72 hours of its release.

The song marks the first release from Vagheesan Rasaiya’s debut music album, Tamil Kirukkan, which features five songs. Written, sung and performed by Vagheesan, ‘Annakili’ presents a sweet and innocent love story about a young man expressing his feelings for his childhood sweetheart.

Set against the colourful backdrop of rural Tamil Nadu, the song captures the innocence, shyness and playful moments of young love. The relatable romantic theme, combined with a vibrant visual presentation, has helped the song connect with audiences, particularly younger viewers.

Popular through the show Top Cooku Dupe Cooku, Monisha Blessy shares the screen with Vagheesan in ‘Annakili’. Their charming chemistry adds to the appeal of the song.

Music for the track has been composed by Siva Padmayan, who blends the traditional folk sounds of Tamil Nadu with energetic rap elements, giving the song a contemporary musical flavour while retaining its rural roots.

The music video is directed by Kribagar Jay J and presents the love story in a colourful, fun-filled and youthful manner.

The song recently received an enthusiastic response from Gen Z students at Ethiraj College in Chennai, further boosting the excitement surrounding the track.

For Vagheesan and Brand Blitz Entertainment, ‘Annakili’ marks an exciting beginning to the five-song musical journey of Tamil Kirukkan. With its blend of fresh music, youthful romance and folk influences, the song brings a traditional love story to today’s young audience.

Produced by Dr. J.P. Leelaram, Rajee K, Saravanan P and Rekha L, ‘Annakili’ is now available on the Brand Blitz Entertainment YouTube channel.