72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகள்… ‘அன்னக்கிளி’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!
72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகள்… ‘அன்னக்கிளி’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!
இளம் தலைமுறையின் ரசனைக்கு ஏற்ற வகையில் உருவாகியுள்ள புதிய காதல் பாடல் ‘அன்னக்கிளி’, வெளியான மூன்றே நாட்களில் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து கவனம் ஈர்த்துள்ளது.
பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், வாகீசன் ராசையாவின் முதல் இசை ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ தொகுப்பின் முதல் பாடலாக அமைந்துள்ளது. பாடலை எழுதி, பாடி, நடித்திருக்கும் வாகீசன், தனது சிறுவயது காதலை நினைவுபடுத்தும் வகையில் ஒரு இளைஞனின் காதல் உணர்வுகளை பாடல் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.
கிராமத்து பின்னணியில் நடக்கும் இளம் காதலின் இயல்பான தருணங்கள், வெட்கம், குறும்பு மற்றும் காதல் கலந்த உரையாடல்களை மையமாகக் கொண்டு ‘அன்னக்கிளி’ உருவாகியுள்ளது. பாரம்பரிய நாட்டுப்புற இசையுடன் நவீன ராப் இசையையும் இணைத்து ப...
