Author: admin
வில்லனில்ருந்து நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்
God is Mother Pictures தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்
தமிழ்சினிமாவின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ஸ்டுடியோ 9. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் தொடங்கிய வெற்றிப்பயணம் சமீபத்தில் வெளியான தர்மதுரை படம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் மிரள வைக்கும் வில்லனாக நடித்து நம்மை ஆச்சர்யப்படுத்தியவர் தயாரிப்பாளர் R.K.சுரேஷ். இதனை தொடர்ந்து மருது படத்திலும் வில்லன் வேடத்தில் கலக்கியிருந்தார். இன்னும் பல படங்களில் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி ஒரு வெற்றிப் பயணத்தில் இருக்கும் R.K.சுரேஷ் தற்போது ஹிரோவாகவும் நடிக்கிறார். God is Mother Pictures தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சஜித் இயக்குகிறார்.
இப்படத்தில் சுரேஷுடன் இணைந்து தாக்்ஷா, ரியாஸ் கான், கும்கி அஸ்வின், மிப்புசாமி, சந்திரமௌலி ஆகியோர் நட...
ரஜினி – இரஞ்சித்வுடன் மீண்டும் இணைவது, மகிழ்ச்சி!. – கவிஞர் உமாதேவி
“மாயநதி இன்று மார்பில் வழியுதே”, தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணத்தில் மாயநதி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்தப் பாடலை எழுதியவர், உமாதேவி. மாயநதி பாடலை மட்டுமல்ல, கபாலியின் இன்னொரு ஹிட்டான “வீரத் துரந்தரா” பாடலை எழுதியவரும் இவரே.
மெட்ராஸ் - நான் நீ நாம், மாயா - நானே வருவேன், இனிமே இப்படித்தான் - அழகா ஆணழகா, கபாலி - மாயநதி, வீரதுரந்தரா தொடர்ந்து உங்கள் பாடல்களின் ஹிட் ரகசியம் என்ன?
ஒரு பாடலை எழுதுவதற்கு முன் அந்தப்பாடலுக்கான முன் பின் காட்சிகளின் கதாபாத்திர உணர்ச்சி நிலைகளை தெரிந்துகொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முழுக்கதையையும் கேட்கிறேன். இயக்குநர்கள் அந்த பாடலுக்கான சூழலை சொன்னதும்... என்னை பாடலுக்குள் பாடலின் கதாபாத்திரத்திற்குள் கொண்டு செல்கிறேன். அதன்பின் பாடல் எழுதுவது நிகழ்கிறது. மற்றபடி ரகசியம் என்று எதுவும் இல்லை.
நீங்கள் தமிழ் ...
நம் ஆட்கள் இடமிருந்து சுருதியை விஜய் தூண்டில் போட்டு காப்பற்றி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்!!
பெரிய ஆள் என்றால் நாலு பேரு நாலு விதமா தான் சொல்லுவான் அதுக்கு எல்லாம் அசரக்கூடாது தளபதி அசர மாட்டார் காரணம் அவர்தான் அசரா புலி ஆச்சே!!
மீம்ஸ் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கி விஜயகாந்த் முதல் விஜய் நம் ஆட்கள் வச்சு செய்து வருகிறார்கள் அந்த வகையில் பிரேமத்தால் சிக்கி சின்னா பின்னம் ஆனா சுருதியை சற்று காப்பாத்தி உள்ளார் நம் பாச தலைவன்..,
மலையாளத்தில் சக்கைபோடு போட்ட ப்ரேமம் படத்தை தெலுங்கில் வெளியிடுகின்றனர். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஒரு நிமிட பாடல் காட்சி யூடியூப்பில் வெளியிடப் பட்டது. இதில் மலர் டீச்சராக ஸ்ருதி நடித்துள்ளார் மலையாளத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவியின் நடிப்பையும், தெலுங்குப் படத்தில் மலர் டீச்சராக வரும் ஸ்ருதியின் நடிப்பையும் ஒப்பிட்டு, சமூக ஊடகங்கள் ஸ்ருதியை செம கலாய்ப்பு செய்து வந்தனர்.
அய்யோ ஆளை விடுங்க என்று ஸ்ரு...
தலைவர்கள் என்ன கடவுள்களைவிட பெரியவர்களா? சர்ச்சை கிளப்பும் ’பகிரி’ இயக்குனர்
தமிழ் சினிமாவில் முதன்முறையாக மதுபானக்கடையில் வேலை செய்பவர்களை
பின்னணியாகக் கொண்டு ஒரு படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நாயகன்,
நாயகி இருவரது குடும்பமுமே டாஸ்மாக் கடையில் பணிபுரிகிறார்கள்.
படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் மது அருந்தும் காட்சி வைத்தாலே அதற்கு
ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன இந்த சூழலில் இப்படி ஒரு ஐடியா எப்படி
உருவானது? படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணனிடம் கேட்டோம்.
‘’இன்றைய இளைஞர்கள் அரசாங்க வேலையையோ, அல்லது வொயிட் காலர் ஜாப்
எனப்படும் சொகுசான வேலையையோத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். அதில்
டாஸ்மாக் பணியும் ஒன்று.
படத்தின் நாயகனும் நாயகியும் மதுபானக் கடையாக இருந்தாலும் இதுவும்
அரசாங்க வேலை தானே என்றுதான் இந்த வேலையில் சேர்கிறார்கள். கடை
கிடைக்கவில்லை என்பதால் தங்களது வீட்டையே டாஸ்மாக்காக மாற்றி வியாபாரம்
செய்வார்கள். அந்த வகையில் டாஸ்மாக...
ஒரு கிடாயின் கருணை மனு அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா?
குற்றமே தண்டனை படத்தை அடுத்து விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஒரு கிடாயின் கருணை மனு. இந்த படத்தை காக்கா முட்டை மணிகண்டனின் அசோசியேட் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். நாயகியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நடித்துள்ளார்.
இவர் எமிஜாக்சன் உள்பட பல பிரபல நடிகை களுக்கு டப்பிங் பேசி வருபவர். இவர்களுடன் கவிஞர் விக்ரமதித்தன், ஜித்தன் மோகன், ஹலோ கந்தசாமி, சக்தி சரவணன், ஜெயராஜ், ஆரஞ்சு மிட்டாய் ஆறுமுகம் உள்பட 40 நடிகர் -நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரகுராம் இசையமைத்துள்ளார்.
இவர் மணிகண்டனின் குறும் படங்களுக்கு இசையமைத்தவர். வேல்முருகன் பாடல்கள் எழுதியுள்ள இப்படத்திற்கு சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படம் குறித்து இயக்குனர் சுரேஷ் சங்கையா கூறுகையில்,
ஒரு கிடாயின் கருணை மனு படம் ஹீரோ ஹீரோயினை மையப்படுத்தி மட்டுமே இல்லாமல் இந்த படத்தில் ந...
டாஸ்மாக் காட்சிகள் ஏதும் இல்லாமல் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் “கடவுள் இருக்கான் குமாரு “ …!
அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ கடவுள் இருக்கான் குமாரு “ இதில் நிக்கி கல்ராணி , ஆனந்தி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி ஜி.வி.பிரகாஷ் குமாரின் நண்பனாக நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரோடு பிலிமான சரோஜாவிற்கு பின் மீண்டும் ஒரு ஜாலியான ரோடு பிலிமை தயாரிக்கிறார் அம்மா கிரியேஷன் டி.சிவா. இப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காதல் , காமெடி , செண்டிமெண்ட் கலந்த அழகான ஒரு ரோடு பிலிமாக இருக்கும். ரோடு பிலிம் என்பதனால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை முக்கிய சாலைகளில் வைத்து படமாக்க வேண்டி இருந்தது. ஆதலால் சென்னை ஈ.சி.ஆர் ரோடு பாண்டிச்சேரி , கோவா போன்ற டிராபிக் இல்லாத பகுதிகளில் படமாக்கினோம். இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மிக முக்கியமா...
தல 57 படத்தின் டைட்டில் இயக்குனர் சிவாவின் புது செண்டிமெண்ட்
விஜய் 6௦ டைட்டில் வந்ததிலிருந்து அஜித் ரசிகர்களுக்கு நிலை கொள்ள முடியவில்லை என்று தான் சொல்லணும் எப்ப தல 57 டைட்டில் வரும் என்று எதிர் பார்த்து வருகின்றனர். இயக்குனர் சிவாவுக்கு செண்டிமெண்ட் அதிகம் இதுனாலே என்னவோ டைட்டில் விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறார்.
தல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னைக்கு திரும்பியுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலாவி வருகிறது. ‘துருவா’ என்றும் வேறு பல டைட்டில்களும் வதந்திகளாக பரவி வரும் நிலையில் படக்குழுவினர்களிடம் இருந்து டைட்டில் குறித்த ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.
ஏற்கனவே அஜித்-சிவா இணைந்த இரண்டு படங்களின்வீரம் வேதாளம் டைட்டில்களும் ‘V’ என்ற எழுத்தில் தொடங்கி...



