ஜெயராம் – அஸ்வின் கூட்டணியில் ‘குட் நியூஸ்’! படப்பிடிப்பு நிறைவு… கலகலப்பான BTS வீடியோ வெளியீடு!
ஜெயராம் – அஸ்வின் கூட்டணியில் ‘குட் நியூஸ்’! படப்பிடிப்பு நிறைவு… கலகலப்பான BTS வீடியோ வெளியீடு!
நாகேந்திர முருகன் இயக்கத்தில், பாண்டிராஜ் வசனத்தில் உருவாகும் குடும்பப் படம் – இறுதிக்கட்டப் பணிகளுக்குத் தயாராகிறது!
ஜெயராம், அஸ்வின் இணைந்து நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படமான ‘குட் நியூஸ்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், நடிகர்களின் கலகலப்பான தருணங்கள் மற்றும் படக்குழுவினரின் உற்சாகத்தை வெளிப்படுத்தும் சிறப்பு BTS வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒரு திரைப்படம் திரையில் வருவதற்கு முன்பு, அதன் பின்னால் எத்தனையோ உழைப்பும், சிரிப்பும், மறக்க முடியாத அனுபவங்களும் இருக்கும். அந்த அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக வெளியாகியுள்ள இந்த வீடியோ, ‘குட் நியூஸ்’ படத்தின் உருவாக்கப் பயணத்தை நெருக்க...








