
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ — டாக்டர் டூமாக திரும்பும் ராபர்ட் டவுனி ஜூனியர்; புதிய புரோமோவில் அதிரவைக்கும் மார்வெல் உலகம்!
மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிரம்மாண்டமான திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் புதிய சிறப்பு புரோமோ வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ராபர்ட் டவுனி ஜூனியர் ஏற்றுள்ள விக்டர் வான் டூம் எனும் டாக்டர் டூம் கதாபாத்திரத்தை மையப்படுத்திய காட்சிகள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற D23: The Ultimate Disney Fan Event நிகழ்ச்சியில், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ஃபீஜ், ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ் மற்றும் ஹேலி அட்வெல் ஆகியோர் மேடையில் இந்த சிறப்பு புரோமோவை அறிமுகப்படுத்தினர்.
‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்துடன் டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்திற்கு விடை கொடுத்த ராபர்ட் டவுனி ஜூனியர், தற்போது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திலும், புதிய கதாபாத்திரத்திலும் மார்வெல் உலகிற்குள் மீண்டும் நுழைகிறார். இந்த முறை அவர் சூப்பர் ஹீரோவாக அல்லாமல், மார்வெல் உலகின் மிக முக்கியமான எதிரியாக கருதப்படும் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
புதிய புரோமோவில் டாக்டர் டூமின் பின்னணி மற்றும் அவரது கதாபாத்திரத்தைச் சுற்றி உருவாகும் மிகப்பெரிய மோதலுக்கான சில முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் மையப்புள்ளியாக டாக்டர் டூம் இருப்பது மேலும் தெளிவாகியுள்ளது.
வனேசா கிர்பி நடிக்கும் சூ ஸ்டார்ம் கதாபாத்திரமும் இந்த புதிய கதை உலகில் முக்கியப் பங்கு வகிக்கிறது. டாக்டர் டூமின் கதைக்களம் எந்த திசையில் நகர்கிறது என்பதற்கான முக்கியமான பின்னணியையும் இந்த புரோமோ ரசிகர்களுக்கு உணர்த்துகிறது.
அதேபோல், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்கும் தோர் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் ஏற்றுள்ள டாக்டர் டூம் ஆகியோருக்கு இடையேயான மோதலும் படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என புரோமோ சுட்டிக்காட்டுகிறது. இதனால், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இதுவரை காணாத அளவிலான சூப்பர் ஹீரோ மோதலை ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ஆண்டனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். கெவின் ஃபீஜ், லூயிஸ் டி’எஸ்போசிடோ மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், ஆண்டனி மேகி, ஃப்ளாரன்ஸ் பக், வனேசா கிர்பி, எபான் மோஸ்-பேக்ராக், வயாட் ரஸ்ஸல், சானிங் டாட்டம், சிமு லியு, இயான் மெக்கெல்லன், ஹேலி அட்வெல், டாம் ஹிடில்ஸ்டன், ஜேம்ஸ் மார்ஸ்டன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ஜோசப் க்வின், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், லெட்டிடியா ரைட், லூயிஸ் புல்மேன், கெல்சி கிராமர், கேத்ரின் நியூட்டன், டேனி ராமிரெஸ், வின்ஸ்டன் டியூக், ஆலன் கம்மிங், ஹன்னா ஜான்-காமன், ரெபெக்கா ரோமிஜன், மேபெல் கேடனா மற்றும் டெனோச் ஹுவேர்டா மெஜியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மூன்று வெவ்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் ஒரே இடத்தில் சந்திக்கும் சூழ்நிலையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ஒன்றுக்கொன்று மோதத் தொடங்கும் பிரபஞ்சங்களால் உருவாகும் பேரழிவைத் தடுக்கவும், தங்களது உலகங்களை காப்பாற்றவும் சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இதுவரை எதிர்கொண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும் டாக்டர் டூமை எதிர்த்து அவெஞ்சர்ஸ் மற்றும் பல்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதே படத்தின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
குறிப்பாக, டோனி ஸ்டார்க்காக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், தற்போது அதற்கு நேர்மாறான ஒரு சக்திவாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுவது ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘Avengers: Doomsday’ — Robert Downey Jr. Returns as Doctor Doom; New Promo Teases a Massive Marvel Showdown
Marvel fans have yet another reason to be excited as Marvel Studios has unveiled a new special promo for the highly anticipated blockbuster ‘Avengers: Doomsday’. The promo, which offers a closer look at Robert Downey Jr.’s much-awaited portrayal of Victor von Doom, aka Doctor Doom, has further heightened expectations surrounding the film.
The special footage was unveiled at D23: The Ultimate Disney Fan Event, where Marvel Studios President Kevin Feige, Academy Award-winning actor Robert Downey Jr., Chris Evans and Hayley Atwell took the stage to introduce the exclusive promo.
After bidding farewell to the iconic Tony Stark/Iron Man character in Avengers: Endgame, Robert Downey Jr. is returning to the Marvel Cinematic Universe in a completely different avatar. This time, he is not playing a superhero but one of the most formidable villains in the Marvel universe — Doctor Doom.
For the first time, the new promo puts Doctor Doom firmly in the spotlight, offering glimpses into his character and the larger conflict that forms the heart of Avengers: Doomsday. The footage makes it clear that Doom is set to play a central role in the next major chapter of the Marvel Cinematic Universe.
Vanessa Kirby’s Sue Storm also appears to have an important role in the unfolding storyline. The promo hints at the circumstances surrounding Doctor Doom and provides glimpses of the narrative that could shape his journey as the film’s major antagonist.
The footage also teases a massive confrontation between Chris Hemsworth’s Thor and Doctor Doom, promising another spectacular superhero clash for Marvel audiences. The prospect of these two powerful characters facing each other has already added to the anticipation surrounding the film.
Produced by Marvel Studios, Avengers: Doomsday is directed by brothers Anthony Russo and Joe Russo. Kevin Feige, Louis D’Esposito and Jonathan Schwartz serve as producers.
The film features an impressive ensemble cast, including Robert Downey Jr., Chris Evans, Chris Hemsworth, Pedro Pascal, Paul Rudd, Anthony Mackie, Florence Pugh, Vanessa Kirby, Ebon Moss-Bachrach, Wyatt Russell, Channing Tatum, Simu Liu, Ian McKellen, Hayley Atwell, Tom Hiddleston, James Marsden, Patrick Stewart, Joseph Quinn, Sebastian Stan, David Harbour, Letitia Wright, Lewis Pullman, Kelsey Grammer, Kathryn Newton, Danny Ramirez, Winston Duke, Alan Cumming, Hannah John-Kamen, Rebecca Romijn, Mabel Cadena and Tenoch Huerta Mejía, among others.
Avengers: Doomsday brings together iconic superheroes from three different universes as they face a threat capable of causing destruction on an unprecedented scale. As their worlds begin to collide, the heroes are forced to unite and fight for their survival.
At the centre of this massive conflict stands Doctor Doom, whose emergence as a formidable threat is expected to reshape the future of the Marvel Cinematic Universe.
Robert Downey Jr.’s return is undoubtedly one of the biggest attractions of the film. Having become synonymous with Tony Stark/Iron Man, his transformation into a powerful Marvel villain marks a dramatic new chapter and has made Avengers: Doomsday one of the most eagerly awaited films among Marvel fans worldwide.
‘Avengers: Doomsday’ will release in theatres across India in English, Hindi, Tamil and Telugu on December 18, 2026.
