Sunday, April 19
Shadow

பாகுபலி – 2 தமிழ் நாட்டில்ரிலீஸ் உறுதிபடுத்தினார்கள்

பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை ராஜராஜனிடம் இருந்து வாங்கியிருந்தது. ஆனால் பைரவா, கட்டப்பாவ காணோம், போகன் என அடுத்தடுத்து இவர்களது படங்கள் நஷ்டம் அடைந்ததால் சொன்ன தொகையை இவர்களால் தற்போது கொடுக்க முடியவில்லையாம். எனவே பாகுபலி படத்தை தமிழகத்தில் யார் வெளியிடுவார்கள் என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது

இதனால் பாகுபலி 2 படத்தை ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வதில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது இந்த பிரச்சனை இன்று அதாவது தற்போது தான் நல்ல விதமாக பேசி தீர்த்தனர் ஆகவே பாகுபலி 2 படம் உலகம் முழுதும் எந்த வித மாற்றங்கள் இல்லாமல் ரிலீஸ் என்பது ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சரவணன் உறுதி செய்தார்.

இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் வரும் 28-ம் தேதி உலகம் முழுவதும் 9000 திரையரங்குகளில் வெளியாகிறது..

Leave a Reply