
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் தவிர விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா இணைந்து நடித்துள்ள ‘ஸ்கெட்ச்’, விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் நடித்துள்ள ‘மதுரவீரன்’ ஆகிய படங்களும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.
இப்போது பொங்கல் வெளியீட்டு படங்கள் வரிசையில் சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படமும் இணைந்துள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனால் இந்த பொங்கலுக்கு 4 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமல் நடித்து, சொந்தமாக தயாரித்துள்ள ‘மன்னர் வகையறா’ திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்து விளம்பரங்கள் செய்து வந்தனர். ஆனால் இப்படம் பொங்கல் ரிலீசிலிருந்து பின் வாங்கிவிட்டது என்று கூறப்படுகிறது.
