Wednesday, March 26
Shadow

காயத்திரி ரகுராமால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆபத்து கண்டு கொள்ளாமல் இருக்கும் கமல்

பெண்கள் என்றால் அமைதி நாவடக்கம் தேவை என்பார்கள் அதிலும் பொது இடங்களில் அது மிகவும் தேவை நாம் செய்யும் செயல் தான் நம் குடும்பத்தின் மதிப்பு என்பார்கள் ஆனால் மிக சிறந்த பாரம்பரிய குடும்பத்தில் வந்த காயத்திரி ரகுராம் செய்யும் செயல்களும் பேசும் வார்த்தைகளும் மிகவும் மோசமாக உள்ளது என்று தான் சொல்லணும் நாவடக்கம் என்பது சுத்தமாக இல்லை என்று சொன்னால் நிச்சயம் மிகையாகது

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுக்கு தான் இந்த எச்சைகளுடன் எல்லாம் இருக்க முடியாது என்று பேசினார் இப்போது அதை விட மோசமாக பேசியுள்ளார். இவரும் ஆர்த்தியும் நடிகை என்று பாவம் அந்த ஜூலியானவை மிகவும் மோசமாக நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு மிகவும் மோசமாக இருக்கிறது கடசியின் இந்த காயத்திரி ரகுராம் என்ற பெண்ணால் நிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆபத்து ஏற்படும் போல உள்ளது .

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராமின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தி வருகின்றது. இவர் ஜுலியை கிண்டல் செய்யும் விதம் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டி வருகின்றது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அவரை பார்த்து ‘சேரி பிஹேவியர்’ என்று கூறினார், இவை சமூக வலைத்தளத்தில் பெரிய பிரச்சனையாக வெடித்தது.

பலரும் காயத்ரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இது மட்டுமின்றி இவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாயவும் வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

மேலும், சமூக வலைத்தளங்களில் கமல்ஹாசன் காயத்ரியை மட்டும் எந்த ஒரு கேள்வியும் கேட்கமாட்டுகிறார் என்ற பேச்சும் அடிப்படுகின்றது. காயத்திரி அவரின் குடும்ப நண்பரின் மகள் என்று தான் கமல் அவருக்கு துணை போகிறார் என்றும் கிசுகிசுக்கபடுகிறது

Leave a Reply