பாப் பாடகர் மற்றும் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைந்த தினம்
அமெரிக்கத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் மேடைச் சிரிப்புரைஞராவார். சிகாகோவில் பிறந்த இவர் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் நகரங்களில் 1970 ஆம் ஆண்டு கலகட்டங்களில் மேடைச் சிரிப்புரைஞராக இருந்தார். மோர்க் அண்ட் மைன்டி எனும் சூழ்நிலைக்கேற்ற நகைச்சுவை செய்யும் ஒரு நிகழ்ச்சியில் மோர்க் எனும் வேற்றுலக உயிரியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்பு மேடைச் சிரிப்புரைஞராகவும், துரைப்படங்களிலும் நடித்தார். இவரின் முன்னேற்பாடின்றித் திடிரென்று செய்யும் திறனால் இவர் பரவலாக அறியப்படுகிறார்.
1980 இல் வெளிவந்த பாபேய் எனும் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். வில்லியம் திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரங்களிலும், துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் வியாபார ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குட்மார்னி...









