Saturday, April 18
Shadow

“கன்னட விஜயசாந்தி” மாலாஸ்ரீ பிறந்த தினம்

பெங்களுரில் பிறந்தாஹ் இவர் கன்னட, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். “கன்னட விஜயசாந்தி’ என்று புகழப்படும் நடிகை மாலாஸ்ரீ. இவரது படங்களில் அடிதடி சற்று தூக்கலாகவே இருக்கும். குழந்தை நட்சத்திரமாக தனது திரையுல பயணத்தை துவக்கிய இவர், தமிழ் மற்றும் தெலுங்கில் 34 படங்களில் நடித்துள்ளார்.

மாலாஸ்ரீ தெலுங்கில் அறிமுகமான பிரேம கைடி படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது பிரபல இயக்குநர் சத்யநாராயணா ஆகும். அதன் பிறகு பிரபல நடிகையாக வலம் வந்த மாலாஸ்ரீ பின்னர் கன்னடத்திலும் கால் பதித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றார். அவர் தற்போது நடித்து வரும் கங்கா என்ற படத்தில் தான் ஆட்டோ ஓட்டுகிறார். சென்னையில் பிறந்து, பெங்களூரில் கன்னட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை மாலாஸ்ரீக்கு கர்நாடகம், மற்றும் ஆந்திராவில் நிறைய சொத்துக்கள் உள்ளன.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

இமயம், நீல மலர்கள், சின்ன சின்ன ஆசைகள், ஆத்த நா பாஸாயிட்டேன்