கிராமத்து பெண் கனவு, ரசிகையாக உணர்ந்த தருணங்களை பற்றி கூறும் அர்த்தனா!
நேர்மறை அதிர்வுகள் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் மூலமாகவும், உயர்வான கருணை மூலமும் நம்மை சுற்றியுள்ள இடங்களில் உணரப்படுகின்றன. நடிகை அர்த்தனா இவற்றையெல்லாம் தன்னுள்ளே கொண்டிருக்கிறார் அவரது சக நடிகர்கள் பற்றி பொழியும் பாராட்டு மழையால். கடவுளின் தேசம் கேரளாவில் இருந்து வந்திருக்கும் அர்த்தனா ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'செம' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார். செம வரும் மே 25ஆம் தேதி வெளியாகிறது.
"ஜிவி பிரகாஷ் உடன் நடிக்கும் போது ஒரு சக நடிகையாக அல்லாமல், ஒரு ரசிகையாக அந்த தருணத்தை உணர்ந்தேன். அவரின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன், இசையில் அவரது படைப்புகள் என்னை மிகவும் ஈர்த்தது. குறிப்பாக பின்னணி இசையில் அவர் ஒரு மாஸ்டர், நாங்கள் இப்போது நல்ல நண்பர்கள்" என்றார் அர்த்தனா.
'செம' படத்தில் அவரை ரொம்ப ஈர்த்தது என்ன?
"வள்ளிகாந்த் கதை சொன்ன விதமும், என்னுடைய மக...









