Monday, November 9
Shadow

Top Highlights

ஓட்டுக்காக கிராமங்களை தேடி வரவில்லை  கமல்ஹாசன் ஆவேசம்

ஓட்டுக்காக கிராமங்களை தேடி வரவில்லை கமல்ஹாசன் ஆவேசம்

Latest News, Top Highlights
கிராம சபை கூட்டத்தை காணவும், தத்தெடுக்கப்பட்ட அதிகத்துார் கிராமத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை ஆய்வு செய்யவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், நேற்று அங்கு சென்றார். அதிகத்துார் கிராம மக்கள் மத்தியில், கமல் பேசியதாவது: இந்த கிராமத்தில் உள்ள, அனைவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியது, என் கடமை. அரசு செய்ய முடிந்ததை, தனிக் கூட்டம் செய்ய முடியும் என்பதை காட்டப் போகிறோம். அதனால் தான், 12 ஆயிரத்து, 500 கிராமங்களையும் தத்தெடுக்கவில்லை; எட்டு கிராமங்களை மட்டுமே தத்தெடுத்துள்ளோம். உங்கள் உதவி இருந்தால், 12 ஆயிரத்து, 500 கிராமங்களிலும் பொறுப்பேற்கும் நாளும் வரும். நான், இங்கே உடனே செய்யக்கூடியதை மட்டும் சொல்கிறேன். பள்ளிக் கூடத்திற்காக, மூன்று அறைகள் கட்டித் தரப்படும். கல்விக்கு நிகரான ஆரோக்கியத்திற்காக, 100 கழிப்பறைகள் கட்டித் தரப்படும். விரைவில் இதற்கான பணிகள் ஆரம்பமாகும். கிர...
பெண்களுக்கு தேவையானதை பெண்கள் போராடினால் மட்டும் தான் பெற முடியும் – இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு

பெண்களுக்கு தேவையானதை பெண்கள் போராடினால் மட்டும் தான் பெற முடியும் – இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு

Latest News, Top Highlights
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் , பி.சி.ஸ்ரீராம் , சத்யராஜ் , ரேவதி , அதிதி மேனன் , ரோகினி, பாலாஜி சக்திவேல் , புஷ்கர் காயத்திரி , அம்பிகா , சச்சு , சரோஜா தேவி , ப்ரேம் , விவேக் பிரசன்னா , சுளில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது :- பெண்களுக்காக பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம். நமக்காக நாம பேசுகிறோம்னு பார்க்கும் போது அதை நான் ரொம்ப சூப்பரா பார்கிறேன்.ஒதுக்குதல் சாதி, மதம்னு பல்வேறு பிரிவு இருப்பதை போல் பெண்கள் மீதான ஒதுக்குதல் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவமாக இயல்பா இன்று வரையில் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக்கொண்டு ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் ஒதுக்குதலை எதிர்க்கிறார்கள் அவர்களின் வெளிப்பாடாய் தான் இந்த சங்கத்தை நான் ப...
மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!

மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!

Latest News, Top Highlights
சர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய பயமில்லை என்று 'டிராஃபிக் ராமசாமி 'அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி' . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி அவர்கள் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது . விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது " இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் . ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிட...
தனுஷ் நாயகிக்கு திருமணம் யார் தெரியுமா படம் உள்ளே

தனுஷ் நாயகிக்கு திருமணம் யார் தெரியுமா படம் உள்ளே

Latest News, Top Highlights
தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னனி ஹீரோ அதொடு சகலகலாவல்லவன் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு திறமை வாய்ந்தவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் ஒரு கலக்கு கலக்கியவர். ஹிந்தியில் தனுஷ் அறிமுகமான முதல் படம் ராஞ்ஜனா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் சோனம் கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகையான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக டில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அவுஜா என்பவரை ரகசியமாக காதலித்து வந்தார். ஆனபோதும் அதுகுறித்த செய்திகளுக்கு சோனம் கபூர் சரியான பதில்களை சொல்லாததால் ஒரு கட்டத்தில் அவரது காதல் செய்திகள் வதந்திகளாக கருதப்பட்டு வந்தன. இப்போது திடீரென்று அடுத்த வாரத்தில் மும்பையிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் காதலர் ஆனந்த் அவுஜாவுடன் சோனம்கபூரின் திருமணம் நடைபெறயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார...
ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நமீதா ஏதற்கு தெரியுமா?

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நமீதா ஏதற்கு தெரியுமா?

Latest News, Top Highlights
குஜராத் நடிகையான நமீதாவின் குண்டு உடம்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதனால் ஒரு பெரிய ரவுண்டு வந்த நமீதா, பின்னர் கதாநாயகி வாய்ப்புகள் குறைந்தபோது வில்லியாக நடித்தார். ஆனால் அது அவருக்கு கைகொடுக்கவில்லை. கடந்த ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, இன்னமும் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர், திருமணத்திற்கு பிறகு தான் எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை தற்போது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஏற்கனவே குண்டாக இருக்கும் நமீதா, இன்னும் உடல் பெருத்து காணப்படுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் தங்களது அதிர்ச்சியை கமெண்டுகளாக தெரிவித்து வருகின்றனர்....
சினிமா மீது வெறி எனக்கு “செயல்” நாயகன் புது முகம் ராஜன் தேஜேஸ்வர்

சினிமா மீது வெறி எனக்கு “செயல்” நாயகன் புது முகம் ராஜன் தேஜேஸ்வர்

Latest News, Top Highlights
ஒரு புதுமுக நடிகருக்குள் சினிமா ஆசை இருக்கலாம். ஆனால் வெறி இருக்குமா என்று யோசித்தால் கேள்விக்குறியே... ஆனால் செயல் படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் உள்ளத்துக்குள் அவ்வளவு வெறி இருக்கிறது.. அவரிடம் பேசிய போது..... எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது.. அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாக மாறுச்சி அந்த நேரத்தில் டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்த போது அவர் ஒரு கதையை சொன்னார். எனக்கு எந்த மாதிரியான கதையில் நடிக்கனும்னு ஆர்வம் இருந்ததோ அதற்கு ஏற்ற மாதிரியான கதையாக இருந்ததால் நடிக்க ஓ கே சொன்னேன். சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே தயாரிக்க முன் வந்தார். அப்படி ஆரம்பித்த செயல் படம் இந்த மாதம் 18 ம் தேதி வெளியாக உள்ளது விஜய்யை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடத்துக்குப் பிறகு அடுத்ததாக இயக்குகிற இரண்டாவது படத்தில் நான் நடிக்க...
குற்றங்கள், ஊழல்களை தடுக்க செல்போன் செயலியை  தொடங்கிய கமல்ஹாசன்

குற்றங்கள், ஊழல்களை தடுக்க செல்போன் செயலியை தொடங்கிய கமல்ஹாசன்

Latest News, Top Highlights
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் இன்று அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது, செயல்படும் செயலியாக மையம் செயலியை உருவாக்க காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக மன்னிக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை, சாமானியர்களும் செய்யத் தூண்டும் செயலி இது. இந்த செயலி நம்மைச் சுற்றி நடக்கும், நமது சூழலில் நடக்கும் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவற்றை எல்லாம் தனி மனிதன் ஒரு அபாயச் சங்கு ஊதி தெரியப்படுத்தும் கருவி தான் இந்த விசில். அது எப்படியென்றால், உங்கள் பகுதியில் நடக்கும் தவறு, தொடர்ந்து நடக்கும் தவறுகள் அதை சொல்ல விரும்புபவர்கள், முதலில் பத்திரிகைக்கு எழுதுவார்கள். தற்போது முகநூலில் பதிவிடுகிறார்கள். அதைத்தொ...
சம்பள கட்டுப்பாடு : பின்வாங்கும் ஹீரோக்கள் தடுமாரும் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம்

சம்பள கட்டுப்பாடு : பின்வாங்கும் ஹீரோக்கள் தடுமாரும் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம்

Latest News, Top Highlights
logo திரையுலகம் நடத்திய வேலை நிறுத்தத்தின் பலனாக டாப் ஹீரோக்களுக்கு சம்பள கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருக்கிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் சம்பளம், ரூ.50 கோடி வரை உயர்ந்திருக்கிறது. சம்பளத்தில் ரஜினி நம்பர் ஒன் இடத்திலும், விஜய், அஜித், கமல் அடுத்த இடத்திலும், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள். முதல் வரிசையியில் இருப்பவர்கள் 25 முதல் 50 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள், இரண்டாவது வரிசையில் இருப்பவர்கள் 20 முதல் 25 கோடி சம்பளம் பெறுகிறார்கள், மூன்றாவது வரிசையில் இருப்பவர்கள் 10 முதல் 20 கோடி சம்பளம் பெறுகிறார்கள். படத்தின் மொத்த பட்ஜெட்டில் 50 சதவிகிதம் ஹீரோக்களின் சம்பளமாக செல்கிறது. ஆந்திராவில் இருப்பது போல் ஒரு ஹீரோவின் படம் எவ்வளவு வசூலிக்கிறதோ அதன் அடிப்படையில்தான் அவர் சம்பளம் நிர்ணயிக...
அடுத்த முதல்வர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் – கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன்

அடுத்த முதல்வர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் – கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன்

Latest News, Top Highlights
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் குதித்துள்ளனர். இதில் கமல்ஹாசன் கட்சியை தொடங்கிவிட்டார். ஆனால் ரஜினியோ அரசியலுக்கு வருவது உறுதி, கட்சி தொடங்குவது குறித்து தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன், ரஜினிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார். கமலால் அரசியலில் சாதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சாருஹாசன் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் அடுத்த முதல்வர். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்றே அழைக்கலாம்....
தமிழில் அதிரடியாக அறிமுகம் ஆகும் புதிய அதிரடி ஆக்சன் புருஷ்லீ

தமிழில் அதிரடியாக அறிமுகம் ஆகும் புதிய அதிரடி ஆக்சன் புருஷ்லீ

Latest News, Top Highlights
S.K.Aman Film Productions சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘புதிய புரூஸ்லீ’. இந்தப் படத்தில் புருஸ் சான் என்பவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு – சிவசங்கர், இசை – செளந்தர்யன், நடன இயக்கம் – ராபர்ட், மனோஜ், படத் தொகுப்பு – தங்கவேல், எழுத்து, இயக்கம் – ஏ.சோணை. இந்தப் படத்தில் உலகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான ‘புரூஸ்லீ’ மாதிரியான தோற்றத்தில் நாயகன் புரூஸ் சான் நடித்திருக்கிறார் என்பது இந்தப் படத்தின் தனி சிறப்பம்சமாகும். இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியிட்டூ விழா இன்று மதியம் ஆர்.கே.வி. தியேட்டரில் நடைபெற்றது. அப்போது படம் பற்றி இயக்குநர் முளையூர் ஏ.சோனை விரிவாகவே பேசினார். அவர் பேசும்போது, “உலக சூப்பர் ஸ்டாரான ‘புரூஸ்லீ’யின் தீவிர ரசிகனான எனக்கு அவரைப் போன்ற தோற்றத்...