Monday, November 9
Shadow

Top Highlights

இந்தியாவில் நூறு கோடி உலக அளவில் வசூல் சாதனை செய்த  அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி

இந்தியாவில் நூறு கோடி உலக அளவில் வசூல் சாதனை செய்த அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி

Latest News, Top Highlights
உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படம் அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் 250 மில்லியன் யுஎஸ் டாலர்கள் வசூலித்துள்ளது. 4474 தியேட்டர்களில் வெளியான இந்தப் படத்தின் வசூல் ஸ்டார் வார்ஸ் - தி போர்ஸ் அவேகன்ஸ் படத்தின் வசூலான 248 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை மிஞ்சி விட்டதாகச் சொல்கிறார்கள். சுமார் 300 மில்லியன் யுஎஸ் டாலர்கள் செலவில் உருவான இந்தப் படம் முதல் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 630 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் மூன்று நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்றும் சொல்கிறார்கள். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் உலக அளவில் வசூலில் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என்கிறார்கள்....
தமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்

தமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்

Latest News, Top Highlights
‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றி வருகிறார். இதுவரை திருவள்ளுவர் - இளங்கோவடிகள் - கம்பர் - அப்பர் – திருமூலர் - ஆண்டாள் –– வள்ளலார் – மறைமலையடிகள் - உ.வே.சாமிநாதையர் - பாரதியார் – பாரதிதாசன் - புதுமைப்பித்தன் – கலைஞர் - கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியவர்களைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இப்போது தொல்காப்பியர் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இது இவரது 16ஆவது கட்டுரையாகும். தமிழ் நூல்களில் மிகப் பழைமையானதும், தமிழ் மொழியின் ஆதி இலக்கணமாக அறியப்படுவதும் தொல்காப்பியம்தான் என்றும், இன்றுவரைக்குமான தமிழ்மொழி தொல்காப்பியத்தின் மீதுதா...
பிரியதர்ஷனின் சில சமயங்களில் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

பிரியதர்ஷனின் சில சமயங்களில் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

Latest News, Top Highlights
விமர்சகர்களால் பாராட்டப்படும் படங்களை கொடுக்கும் பிரியதர்ஷன், தனது பாணியில் நல்ல கலைப்படங்களை செதுக்குவதில் ஒரு முன்னோடி. தனித்துவமான கதை சொல்லலில் வித்தகரான பிரியதர்ஷன், அனைத்து விதமான கதைகளிலும் அவர் பெற்ற வெற்றி, அவருக்கு இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற வெற்றிகளால் உந்தப்பட்ட அவரது திரை பயண மகுடத்தில் இன்னொரு வைரக்கல் சேர்ந்திருக்கிறது. ஆம், அவர் இயக்கிய 'சில சமயங்களில்' இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உலகம் முழுக்க முதன்மையானதாக தன்னை நிரூபித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் டிஜிட்டல் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்க, பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் சில சமயங்களில், உலகம் முழுக்க சென்று சேரும் விதமான கதையை கொண்டிரு...
என் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு தான் நடிகையர் திலகம் – கீர்த்தி சுரேஷ்

என் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு தான் நடிகையர் திலகம் – கீர்த்தி சுரேஷ்

Latest News, Top Highlights
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. தெலுங்கில் இந்தப் படம் ‘மகாநதி’ என்ற பெயரில் வெளியாகிறது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும், சமந்தா, நாக சைதன்யா, ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம், வருகிற மே 9 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது எப்படி? என்பதை விளக்கினார். “தனுஷுடன் நான் நடித்த ‘தொடரி’ படம் வெளியான பிறகு, என்னுடைய கேரக்டரை சிலர் மட்டுமே பாராட்டினார்கள்; பலர் எதிர்மறையாக விமர்ச...
விஜய் 62  இணைய தளங்களில் கசிந்த படபிடிப்பு காட்சிகள்

விஜய் 62 இணைய தளங்களில் கசிந்த படபிடிப்பு காட்சிகள்

Latest News, Top Highlights
எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தினை ‘தளபதி 62’ என்று அழைக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ராதாரவி, எழுத்தாளர் பழ.கருப்பையா ஆகியோர் வில்லன்களாக நடிப்பதோடு நடிகை வரலட்சுமியும் வில்லியாக நடிக்கிறார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மோட்டர் சைக்கிளில் பயணிக்க, முன்னணியில் விஜய் பயணிப்பது போல நேற்று இரவு சென்னையில் படமாக்கபப்ட்டது. அந்த காட்சிகளை ரசிகர்கள் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தி...
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.

துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.

Latest News, Top Highlights
கோவையில் "பிரைஸ் பேக்டரி " என்னும் துணிக்கடை திறப்புவிழா நடைபெற்றது . இதில் நடிகை நிக்கி கல்ரானி கலந்துகொண்டார் அவரை பார்ப்பதற்க்கு ஏராளமானோர் வந்திருந்தனர் . ஏராளமான ஆண்களும் பெண்களும் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வத்துடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் . நிகழ்ச்சியில் பேசிய நிக்கி கல்ரானி ... கோவை எனக்கு பிடித்தமான ஊர் இந்த மக்களையும் ரொம்ப பிடிக்கும் என்றார் என்னைப்பார்ப்பதற்கு இவ்வளவுபேர் வந்திருப்பது மிகவும் சந்தோசம் , உங்கள் அன்புக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார் . நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு துணிகளை பரிசுகளாக வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் ....
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கதில்  தமிழ் மற்றும்  தெலுங்குயில்  நடிக்கிறார் டாக்டர் ராஜசேகர்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கதில் தமிழ் மற்றும் தெலுங்குயில் நடிக்கிறார் டாக்டர் ராஜசேகர்

Latest News, Top Highlights
ரஜினியின் மகளும் தனுஷ் மனைவியும் ஆன ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார்.இவர் ஏர்கனவே இரண்டு படம் இயக்கியுள்ளார். 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ். அந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அதன்பிறகு தனது அடுத்த படத்தை அவர் உடனடியாக தொடங்கவில்லை. இந்நிலையில், விரைவில் தனது புதிய படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அந்த படத்தில் டாக்டர் ராஜசேகர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதனால் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் என்று தெரிகிறது....
ஹாரர் மற்றும் திரில்லர் கதை “கா” வில் நடிக்கும் ஆண்ட்ரியா

ஹாரர் மற்றும் திரில்லர் கதை “கா” வில் நடிக்கும் ஆண்ட்ரியா

Latest News, Top Highlights
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது.அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியியக்கியுள்ள நாஞ்சில் கூறியதாவது, ”இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி உருவாக்கப் பட்டுள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்துள்ளோம்கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசய...
பிரபு தேவா பட நாயகி அடா சர்மா  படுக்கை அழைக்கும் நபர்களை பற்றி அதிரடி

பிரபு தேவா பட நாயகி அடா சர்மா படுக்கை அழைக்கும் நபர்களை பற்றி அதிரடி

Latest News, Top Highlights
பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது என்கிறார் நடிகை அடா சர்மா பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளார். தன்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தார். இந்நிலையில் சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவாவின் ஜோடியாக நடிக்கும் அடா சர்மா கூறியிருப்பதாவது, அனைத்து துறைகளிலுமே பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் சினிமா துறையைமட்டும்பூதக்கண்ணாடியால் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லை வீட்டில் இருந்து துவங்குகிறது. வீட்டில் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். கேவலமான புத்தி உள்ளவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பார்கள். அவர்களை நெருங்க விடக் கூடாது என்று பெண்கள் முடிவு செய்துவிட்டால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை...
சொர்க்கதில் இருக்கும் சமந்தா ஏன் தெரியுமா

சொர்க்கதில் இருக்கும் சமந்தா ஏன் தெரியுமா

Latest News, Top Highlights
சமந்தா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுஙுகுளிலும் நெம்பர் ஒன் நடிககை இவர் சமீபதில் பிரபல நடிகரை திருமனம் செய்தார். சமந்தாவுக்கு கணவர் மீது அதிக அன்பு என்றே சொல்லனும். நடிகை சமந்தா நேற்று தன் 31வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல முன்னணி நட்சத்திரங்கள் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சமந்தாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவரது கணவர் குல்மார்க் அழைத்து சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் பிறந்தநாள் கேக் வெட்டிய விடீயோவை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "சொர்க்கத்தில் இருக்கிறேன்" என சமந்தா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்....