Sunday, November 8
Shadow

Top Highlights

அழகென்ற சொல்லுக்கு அமுதா- திரைவிமர்சனம்

அழகென்ற சொல்லுக்கு அமுதா- திரைவிமர்சனம்

Review, Top Highlights
சினிமா வேலை நிறுத்தம் பல சிறு தயாரிப்பாளர்களுக்கு கைகொடுத்து இருக்கு என்று தான் சொல்லணும் ஆம் மறு ரிலீஸ் செய்ய ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது அந்த வகையில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் அழகென்ற சொல்லுக்கு அமுதா இந்த படத்தில் நாயகனாக ரிஜன் சுரேஷ், ஆர்ஷிதா, பட்டிமன்றம் ராஜா, போராளி திலீபன், வளவன், தாட்சாயணி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை நாகராஜ் என்பவர் இயக்கியுள்ளார். அறிமுக நடிகர்கள் நடித்திருக்கும் இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானாலும், முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் உள்ளிட்ட சில காரணங்களால் ரசிகர்களின் பார்வையில் படமாலே திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டது. ஆனால், படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் இப்படத்தை வெகுவாக பாராட்டினார்கள். அதன் காரணமாகவே, தற்போது இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். சரி கதைக்கு வருவோம். கதை என்றால் வித்த...
என்னது இவருக்கு ஜோடி அக்ஷரஹாசன் நம்பமுடியவில்லை

என்னது இவருக்கு ஜோடி அக்ஷரஹாசன் நம்பமுடியவில்லை

Latest News, Top Highlights
கமல்ஹாசனிடம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ் எம் செல்வா, ‘தூங்காவனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் தற்போது தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விக்ரம் ஜோடியாக கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். அக்‌ஷரா, ஏற்கெனவே அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ளார். வேலை நிறுத்தம் முடிந்தபிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது...
வெப் சீரீஸ்யில் நடிக்கும் பாபி சிம்ஹா

வெப் சீரீஸ்யில் நடிக்கும் பாபி சிம்ஹா

Latest News, Top Highlights
தொடர்ந்து வாழ்வது என்பது ஒரு சின்ன ஃபார்முலா தான், மாற்றங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பது. மாறிய பிறகு தொடர்ந்து பரிமாணங்களை மாற்றிக் கொள்வது என்பது இன்றியமையாதது. குறிப்பாக அரிதாரம் பூசிய கலைஞர்களுக்கு ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் வித்தியாசத்தை காட்ட வேண்டிய சவால் இருக்கிறது. தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவுக்கும் இது பொருந்துகிறது. அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் மலையாள படமான கம்மரசம்பவம் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார். இந்த படத்தில் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீதா பிரமோத் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட சிறந்த நடிகர்களோடு இணைந்து நடித்திருப்பதால் அவரின் கதாபாத்திரத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அதை பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்று அவர் இருந்தாலும், "என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய கூற முடியாது. ஆனால் என்னுடைய கேரியர...
அஜித், விஜய் பற்றி சூடான கருத்துச் சொன்ன கஸ்தூரி!

அஜித், விஜய் பற்றி சூடான கருத்துச் சொன்ன கஸ்தூரி!

Latest News, Top Highlights
சும்மாவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அடித்து கொள்வார்கள் அவர்களை மேலும் சூடு எற்றி உள்ளார் பிரபல நடிகை கஸ்தூரி என்று தான் சொல்லனும் ஆம் சின்ன விஷ்யம் என்றாலே சோசியல் மீடியாகளில் சண்டை போடுவார்கள் இப்ப சொல்லவா வேணும் . நடிகை கஸ்தூரியிடம் அஜீத், விஜய் ஆகியோரின் பிளஸ், மைனஸ் பற்றி துணிச்சலாக கருத்து தெரிவிக்குமாறு ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். இதற்கு கஸ்தூரி, விஜய்க்கு பிளஸ் எவர்கிரீன் லுக், அருமையான டான்ஸர், மைனஸ் ஸ்கிரிப்ட் தேர்வு, வெறித்தனம் ரசிகர்கள் என்று ரீட்வீட் செய்திருக்கிறார். இதேபோல் அஜித்துக்கு மைனஸ் ஒரே தயாரிப்பாளர், ஒரே இயக்குனர், ஒரே ஸ்கிரிப்ட் என்று ட்வீட் செய்திருக்கிறார் கஸ்தூரி. இதனால் இரு ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்...
மணிரத்னம்  அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் – ஸ்வாதிஷ்டா

மணிரத்னம் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் – ஸ்வாதிஷ்டா

Latest News, Top Highlights
திரைத்துறையில் வெற்றி பெறுவதற்கு ஒருவர் தனக்குத்தானே அளித்துக் கொள்ளும் போஷாக்கின் சிறந்த கூறு என்ன தெரியுமா? 'ஒருவரை அருகில் வைத்துக் கொண்டு சவாலை எதிர்கொண்டு அவைகளை தகர்த்தெறிதல். நடிகை ஸ்வாதிஷ்டா இந்த நிலையில் அதை உள்ளூர உணர்ந்தே இருக்கிறார். "திரைத்துறையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒரு பயணத்தை தொடங்கி நடப்பது சவாலான விஷயம். நான் தேர்ந்தெடுத்த இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க எனக்கு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்த என் பெற்றோருக்கு நன்றி" எனக் கூறும் ஸ்வாதிஷ்டா தன் ஆரம்பத்திலேயே சவரக்கத்தி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டார். இளங்கலையில் எஞ்சினியரிங்கும், முதுகலையில் ஜர்னலிஸமும் படித்து, தொலைக்காட்சி தொகுப்பாளராக துவங்கிய ஸ்வாதிஷ்டாவுக்கு நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். நான் ஜர்னலிஸம் படிக்கும்போதே எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன, நான் தான் நடிக்க தயங்கினேன். ஆனால், மி...
ஆடையே இல்லாமல் வீடியோவுக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை- ரசிகர்களிடம் வைரலாகும் வீடியோ

ஆடையே இல்லாமல் வீடியோவுக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை- ரசிகர்களிடம் வைரலாகும் வீடியோ

Latest News, Top Highlights
சமீபகாலமாக நடிகைகள் கண்ணியம் இல்லாமல் போயிவிட்டது என்று தான் சொல்லனும் ஆம் வாய்ப்புக்கா என்ன செய்வது என்று தெரியாமல் செய்து வருகின்றனர். டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று மொழிகளிலும் படங்கள் நடித்து பிரபலமானவர் ஷெர்லின் சோப்ரா. இவர் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனிலும் கலந்து கொண்டார். ஷெர்லின் சோப்ராவின் புகைப்படங்கள் எப்போதுமே ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெறும். அப்படி அவர் சமீபத்தில் ஆடையே இல்லாமல் ஒரு வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/Bg7lGUThySO/...
இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல்

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல்

Latest News, Top Highlights
இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு தமிழ்நாட்டுக்கு ஒரு கலை இழப்பு. இளமையும் அழகியலும் கொஞ்சிக் குலாவிய கலைஞன் சி.வி.ராஜேந்திரன். இயக்குநர் ஸ்ரீதருக்குத் தொழில்நுட்பக் கண்ணாகத் திகழ்ந்தவர். அறுபதுகளில் முதுமைத் தோற்றத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியை எழுபதுகளில் இளமைத் தோற்றத்திற்கு அழைத்து வந்த பெருமை அவரைச் சாரும். ராஜா – சுமதி என் சுந்தரி போன்ற படங்கள் இன்னும் கண்ணைச் சுற்றிச் சுற்றி வரும் வண்ணக் கனவுகளாகும். அவரோடு நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பது என் நினைவுகளின் கருவூலமாகும். ஒரு குளிர்ந்த சந்திப்பில் ‘வாரம் ஒருமுறையாவது உங்களை நினைத்துக்கொள்கிறேன்’ என்றேன் நான். ‘நித்தம் ஒரு முறையாவது உங்களை நினைத்துக்கொள்கிறேன்’ என்றார் அவர். கலையும் பண்பாடும் கலந்து நின்ற இயக்குநர் அவர். ஒரு குறிப்பிட்ட கால வெளியைச் சிறகடிக்கும் உற்சாகத்தோடு வைத்திருந்ததில் சி.வி.ஆருக்குப் பெ...
திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
திறமை மற்றும் ஆற்றல் வளத்தை தாண்டி கவர்ந்து இழுக்கும் ஆளுமை எல்லோரையும் தன் வசம் வசியப்படுத்தும். அந்த மாதிரி உதாரணங்கள் மிகவும் அரிது, அதில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பை பார்த்தவுடன் அவர் கலைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது நடிப்பு பயிற்சி பெற்றவராக இருப்பார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், "நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது" என சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அம்ரிதா. மேலும் விரைவில் வெளியாக இருக்கும் காளி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்...
ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் அபி சரவணன்!

ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் அபி சரவணன்!

Latest News, Top Highlights
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்ட அபி சரவணனின் பேட்டி... தூத்துகுடியில் நாற்பத்திஎட்டு நாட்களாக போராடி கொண்டிருக்கும் எமது மக்களை காண #JOINTFORCARE TEAM தூத்துகுடி பயணமானோம்... நமது குழுவை சார்ந்த செலவம் ராமசாமி மற்றும் நண்பர்கள் கணேஷ் மலைராசாவுடன் தேவையான உணவுபொருட்களான பிஸ்கட் பிரட் பழங்கள் போன்றவற்றை வாங்கி கொண்டு சென்றோம் . பிரிடடிஷ் பேக்கரி உரிமையாளர் பிரட்களுக்கு பணம் வாங்க மறுத்துவிட்டார்... செல்லும்வழியில் காரின் கண்ணாடிகதவுகளை இறக்கிவிட்டு சென்றபோது ஸ்டெர்லைட் பணியை நிறுத்தி இரு நாட்களாகியும் காற்றின் நெடி கண்களில் எரிச்சலையும், தொண்டை நமச்சலையும் இரண்டு நிமிடங்களில் பரிசளித்தது எனில் இருபத்திஇரண்டு வருடங்கள் இந்த மக்களின் வாழ்க்கை? போராட்டகளத்தை அடைந்தபோது ஒரு வேம்பு மரத்தின் கீழ் மக்கள் அமர்ந்திருந்தனர்...ஸ்டெரலைட் எதிரான போராட்டத்தில் அவர்களுடன் ந...
அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தேவகோட்டை காதல் என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன் மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள் எழுதி இயக்குகிறார் - A.R.K. இவர் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். படித்த பணக்கார அழகான பெண்ணுக்கும் படிக்காத அழகில்லாத ஏழை பையனுக்கும் ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் கலவரங்களும் தான் கதை முடிச்சு. படப்பிடிப்பு மதுரை ஆலப்புழை மற்றும் பாலக்காடு அருகில் எம்.ஜி.ஆருக்கு உறவினர் வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றிருக்கிறது என்றார் இயக்குனர்....