Sunday, November 8
Shadow

Top Highlights

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் ரஜினி பட பிரபலங்கள்

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் ரஜினி பட பிரபலங்கள்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் தற்போது, பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் 2.0 பட பிரபலங்கள் இருவர் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி ஒளிப்பதிவு பணிகளை நிரவ் ஷாவும், கலை பணிகளை முத்துராஜும் மேற்கொள்ள இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவிக்குமார் இயக்கும் இந்த படம் விஞ்ஞானி தொடர்பான கதையாக உருவாக இருக்கிறதாம். வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானியாக சிவா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்ப...
ஜூலியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஜூலியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

Latest News, Top Highlights
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் பலனளிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும், தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என்ற வருத்தத்தில், மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார். இவரது தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. அனிதா மரணமடைந்து தற்போது ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், அவரது பெயரில் ஒரு படம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ‘டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ்’ என பெயரிட்டு, அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் அனிதா கதாபாத்திரத்தில் ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கவுள்ளாராம். அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இந்நிலையில், அனிதா கதாபாத்...
விவேக் ஜோடியாக தேவயானி நடிப்பில் உருவாகும் “எழுமின்”

விவேக் ஜோடியாக தேவயானி நடிப்பில் உருவாகும் “எழுமின்”

Latest News, Top Highlights
சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள். இந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப...
காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்!

காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்!

Latest News, Top Highlights
‘கபாலி’ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது.சந்தோஷ் நாராயணன் இப்படத்திர்ற்கு இசை அமைத்துள்ளார்.மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர்,அஞ்சலி படேல் ,சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது .டீஸர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூ- டியூபில் டாப் ட்ரெண்டிங்கில் தற்போதும் உள்ளது. இந்நிலையில் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் நானா படேகர் அவருக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணியை இன...
வெற்றிடத்தை நிரப்ப போவது யார்?. ஆண்டவரா இல்லை அருணாசலமா?

வெற்றிடத்தை நிரப்ப போவது யார்?. ஆண்டவரா இல்லை அருணாசலமா?

Latest News, Top Highlights
தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதே போல் கமல்ஹாசனும் கட்சி ஆரம்பித்துள்ளதால் வெற்றிடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் குறித்து பேசிய போதெல்லாம் தமிழகத்தில் ஜெயலலிதா இல்லாத நிலை, கருணாநிதி செயல்படாத நிலை ஆகியவற்றாலேயே இவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று பேசப்பட்டது. இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக கமல்ஹாசன் கடந்த மாதம் கட்சி ஆரம்பித்தார். இந்நிலையில் கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினிகாந்த் நேற்று மாலை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் விழாவில் கலந்து கொண்டார் அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதால் வருகிறீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். ஆமாயா வெற்றிடம் இருக்கிறது. அதனால் வருகிறேன் என்றார். கமலும், ரஜினியும் நண்பர்கள் என்றாலும் இருவரது அரசியலும் வெவ்வேறு திசையில் பயண...
பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தினை ‘பரதன் பிலிம்ஸ்’ தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தினை ‘பரதன் பிலிம்ஸ்’ தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.

Latest News, Top Highlights
மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி உள்ளார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். ஆக்‌ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களளையும் கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. 'பரதன் பிலிம்ஸ்' இப்ப...
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் பாராட்டு மழையில் ஹாட்  “எக்ஸ் வீடியோஸ்”

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் பாராட்டு மழையில் ஹாட் “எக்ஸ் வீடியோஸ்”

Latest News, Top Highlights
இருமொழிகளில் தயாராகியுள்ள "எக்ஸ் வீடியோஸ்" பார்த்தவர்கள் பாராட்டும் படமாக உருவாகி உள்ளது. சென்ஸார் போர்டு உறுப்பினரான நடிகை கௌதமி படம் பார்த்துவிட்டு இயக்குநர் சஜோ சுந்தரை அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும்... தற்போது டீப் டார்க் சீக்ரெட் படங்களில் ஜாம்பவானான இந்திப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் புகழ் மழையும் இப்படக்குழுவை குளிரவைத்துள்ளது. "எக்ஸ் வீடியோஸ்" படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர் படத்தைப் பற்றி கூறியதாவது, எக்ஸ் வீடியோஸ் என்பது முதலில் ஆபாச இணையதளம் என்று நினைத்து விட வேண்டாம். என் படத்தைப் பொருத்தவரையில், எக்ஸ் என்பது தவறு (Wrong videos) என்று அர்த்தம் கொள்ளும் வகையில்தான் தலைப்பு வைத்துள்ளேன். இது உலகெங்கும் பரவிக் கிடக்கும் ஆபாச இணைய தளங்கள் பற்றிப் பேசுகிற படம். அப்படிப்பட்ட இணைய தளங்களின் பெயரில் உலகளாவிய மாஃபியா கும்பல் செய்யும் அநியாயங...
துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

Latest News, Top Highlights
தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்கு சென்று ஜொலித்தவர்கள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. இந்த வரிசையில் தற்பொழுது தன்னை இணைத்துக்கொண்டிருப்பவர் VJ ரக்க்ஷன். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் ரக்க்ஷன் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் நடிக்கும் முதல் படமாகும். இந்த படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி. இந்த கதை கதையின் தயாரிப்பாளர் பிரான்சிஸ் கண்ணூக்கடன். தனது முதல் பட வாய்ப்பு குறித்து ரக்க்ஷன் பேசுகையில் , '' நடிப்பில் சாதிக்கவேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த வேலையில் தான் எனக்கு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற ஒரு மிகச்சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந...
தேசிய கட்சி என்பதாலேயே நாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல – ‘எழுவாய் தமிழா’ இசை விழாவில் தமிழிசை!

தேசிய கட்சி என்பதாலேயே நாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல – ‘எழுவாய் தமிழா’ இசை விழாவில் தமிழிசை!

Latest News, Top Highlights
நேற்று மாலை 'எழுவாய் தமிழா' என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் சினேகன், டி.பி.கஜேந்திரன், வ. உ.சி பேரன் முத்து குமாரசாமி, செம்மொழி சேலை நெய்து தேசிய விருது பெற்ற ஏ.ஜி.மனோகரன் ஆகியோரும், ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின்சங்கர் , ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடனம் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் உருவ சிலை திறக்க எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டிக்கு ரஜினி சென்றிருந்தார். அந்த விழாவில் அவர் பேசும்போது உயர்நிலை பள்ளிவரை 98% மதிப்பெண் எடுத்த நான் மேல்நிலைப் பள்ளி படிப்பை திடீரென ஆங்கில வழி கல்வி பள்ளியில் சேர்ந்ததால் ஆங்கிலம் தெரியாமல் 17%, 18% ம...
கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது- கமல் ஆவேசம்

கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது- கமல் ஆவேசம்

Latest News, Top Highlights
கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு டாஸ்மாக்கை அரசு நடத்தி வருவதாகவும் மாணவர்கள் விரும்பும் கல்வியை படிக்க வேண்டும் என்றும் கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார் கமல். இந்த கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சம் பேர் வரை சேர்ந்துள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைய வந்த மாணவர்களை வரவேற்றார் நடிகர் கமல். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் பேசுகையில், எதிர்காலத்தை மாணவர்கள் மாற்ற முயல வேண்டும். மாற்றத்தை கொண்டு வருவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் கடமை. நீங்கள் விரும்பும் கல்வியை படிக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். விமர்சிப்பது நம் உரிமை மாணவர்களை பார்த்து தலைவா என்று நான் கூறும் நிலை வரவேண்டும். யார் வீழ்ந்தாலும் தமிழகம் எழுந்தே தீரும...