Sunday, November 8
Shadow

Top Highlights

அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’..!

அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’..!

Latest News, Top Highlights
லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.. அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார். இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதை தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான். இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாய...
என்ன ஆனது விசுவாசம் ஏன் தாமதம் காரணம் சொல்ல தவிக்கும் பட குழு

என்ன ஆனது விசுவாசம் ஏன் தாமதம் காரணம் சொல்ல தவிக்கும் பட குழு

Latest News, Top Highlights
தல அஜித்தின் விசுவாசம் படபிடிப்பு இப்ப அப்போ என்று தள்ளி கொண்டேபோகிறது காரணம் என்ன எதனால் இப்படி போகிறது ஜனவரி போய் பிப்ரவரி முடிந்து மார்ச் மாதமும் வந்துவிட்டது. நட்சத்திர தேர்வு முடிந்துவிட்டது பின்ன எதுக்கு தாமதம் என்று ரசிகளுக்குள் ஒரு கேள்வி. இதற்கு பல காரணம் சொன்னாலும் ஒரு சிலர் தயாரிப்பாளருக்கும் சிவாவிற்குமே மோதல், அதனால் தான் படம் தொடங்கவில்லை என்று கூறுகின்றனர். மேலும், அஜித் சிவாவிற்கு முழு ஆதரவு தர, தயாரிப்பாளர் தரப்பு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருவதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே விவேகம் படுதோல்வியை சந்திக்க, இயக்குனரை மாற்றலாம் என சத்யஜோதி நிறுவனம் ஆரம்பத்திலேயே கூறியதாகவும், அதற்கு அஜித் மறுத்ததாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. இதனால் விசுவாசம் நின்று விடுமோ என்ற எண்ணம் பலருக்கும் வரத்தொடங்கியுள்ளது, சிவா அல்லது சத்யஜோதி நிறுவனம் சொன்னாலே உண்மை வெளிவரு...
‘எம்ஜிஆர் போல மிக சிறந்த ஆட்சியை கொடுப்பேன் ரஜினிகாந்த் வாக்குறுதி

‘எம்ஜிஆர் போல மிக சிறந்த ஆட்சியை கொடுப்பேன் ரஜினிகாந்த் வாக்குறுதி

Latest News, Top Highlights
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் போல தம்மால் நல்லாட்சி கொடுக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ரஜினிகாந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அதில் ''மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டோம். மக்களே எங்களை மன்னித்துவிடுங்கள். எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்று தெரியவில்லை.'' என்றார். மேலும் ''அரசியல் பேச கூடாது என்றுதான் இருந்தான். ஆனால் இப்போது என்னை அரசியல் பேச வைத்து விட்டார்கள்.கருணாநிதி, சோ ஆகியோரிடம் பேசி அரசியல் கற்றேன்.அப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்'' என்றார் மேலும் ''நான் அரசியலுக்கு வந்ததை வாழ்த்த வேண்டாம், ஏளனம் செய்யாதீர்கள். ...
சூப்பர் ஸ்டார் வரலாற்றில் முதல் முறை பயத்தில் நடுங்கும் முன்னணி நடிகர்கள்

சூப்பர் ஸ்டார் வரலாற்றில் முதல் முறை பயத்தில் நடுங்கும் முன்னணி நடிகர்கள்

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் எப்போதெல்லாம் வெளியாகிறதோ அப்போது எல்லாம் தமிழ் நாட்டு திரையரங்கில் திருவிழா கோலம் தான் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் படம் என்றால் தனி மௌசு தான். ரசிகர்கள் கையில் இருந்த மொத்த பணமும் ரஜினி படத்திலேயே கரைந்துவிடும். அதற்கப்புறம் வருகிற படங்களுக்கெல்லாம் ஆயுட்கால அவஸ்தைதான் மிச்சம். கபாலி டிக்கெட் ரெண்டாயிரம் ஏன் மூவாயிரம் போன கதையெல்லாம் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய விஷயங்கள். இந்த வருடம் எப்படி? ஏப்ரல் 27 ல் காலா. தீபாவளிக்கு 2 .0. பொங்கலுக்கு கார்த்திக் சுப்புராஜ் படம். இப்படி பத்து மாத காலத்திற்குள் மூன்று ரஜினி படங்கள் வந்தால், தியேட்டர்கள் செழிக்கும். விநியோகஸ்தர்கள் பிழைப்பார்கள். நடுநடுவே கமல் படங்கள், அஜீத், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள் என்று வரிசை கட்டி வந்து நின்றால், மிச்ச சொச்ச பணப்புழக்கமும் அங்க...
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!

இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!

Latest News, Top Highlights
கதைக்குள்ள இருக்கிற மொத்த உணர்ச்சியும் 'கருப்பி' பாடலுக்குள்ள இருக்கு! பரியேறும் பெருமாள் பாடல் பற்றி இயக்குநர் ராம் கருத்து. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல் பாடல் கருப்பி என் கருப்பி வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள கருப்பி பாடல் பற்றி பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இயக்குநரும், மாரி செல்வராஜின் குருவுமான இயக்குநர் ராம், இயக்குநர்கள் நவீன், புஷ்கர் காயத்ரி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இயக்குநர் ராம் “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” ச...
நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கான் .. ஆன்மீக அரசியலுக்கு ரஜினிகாந்த் விளக்க

நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கான் .. ஆன்மீக அரசியலுக்கு ரஜினிகாந்த் விளக்க

Latest News, Top Highlights
ஆன்மீக அரசியல் குறித்து சென்னை ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ரஜினிகாந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அதில் '' ஆன்மீக அரசியல் என்பது மக்களுக்கான அரசியல். ஊழலற்ற அரசியல்தான் ஆன்மீக அரசியல் '' என்றார். மேலும் ''சாதி, மதமற்ற நேர்மையான அரசியலே ஆன்மிக அரசியல். இனிமேல்தான் பார்க்க போகிறீர்கள் ஆன்மீக அரசியல் '' என்றார் . இவரது ஆன்மீக அரசியல் விளக்கத்திற்கு பெரிய அளவில் ரசிகர்கள் கைத்தட்டி கரகோஷம் எழுப்பினார்கள்....
” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்

” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்

Latest News, Top Highlights
தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் 'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' நிறுவனம் சார்பில் படத்தை  தயாரித்தார் வி.சத்யமூர்த்தி...இதை தொடர்ந்து  சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும்  விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக்  நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து  'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' சார்பில்  தயாரித்து வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   இதே நிறுவனம் தற்போது  கோடை கொண்டாட்டமாக  மார்ச் 29  ஆம் தேதி அன்று வெளியாக உள்ள  'கோலிசோடா 2' படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர...
ஜோதிகாவுக்கு பதில் அனுஷ்காவா – ரசிகர்கள் குஷி

ஜோதிகாவுக்கு பதில் அனுஷ்காவா – ரசிகர்கள் குஷி

Latest News, Top Highlights
  பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், டப் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குநர் பாலா படத்தை ரீமேக் செய்யலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் ஜோதிகா கேரக்டருக்கு அனுஷ்கா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவரே கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தயாரிப்பு தரப்பு அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனுஷ்கா நடிக்க மறுத்தால் பொருத்தமான வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும், மிக விரைவில்...
சரத்குமாரின் அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்

சரத்குமாரின் அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்

Latest News, Top Highlights
ஏய்', `சாணக்யா', `சண்டமாருதம்’ படங்களுக்கு பிறகு சரத்குமார் - இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ‘பாம்பன்’ படத்தின் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இப்படத்தில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் பாம்பன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இந்த படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்க...
சூர்யா படத்திற்கு வித்தியாசமான பெயரை வைத்த செல்வராகவன்

சூர்யா படத்திற்கு வித்தியாசமான பெயரை வைத்த செல்வராகவன்

Latest News, Top Highlights
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நாயகிகளாக நடிக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு `என்.ஜி.கே' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செல்வராகவன் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூர்யா, கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ போன்ற தோன்றத்தில் இருப்பது போன்று அந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும் போஸ்டரில் உரிமைக்காக ஒரு கூட்டம் போராடுவது போன்று உழைப்பாளர்களின் கைகள் ஓங்கியபடி போஸ்டர் வெளியாகி இருக்கிறத. எனவே சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ச...