Sunday, November 8
Shadow

Top Highlights

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு கிடைத்த வரவேற்பு

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு கிடைத்த வரவேற்பு

Latest News, Top Highlights
அருள்நிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்'. மு.மாறன் இயக்கும் இந்த படத்தை `ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார். அருள்நிதி ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கும் இந்த படத்தில் அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. சாம்.சி.எஸ். இசையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது....
ரஜினிகாந்த் இங்கேயும் வந்துட்டாரா! ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்த் இங்கேயும் வந்துட்டாரா! ரசிகர்கள் கொண்டாட்டம்

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ஒரு ஈர்ப்பு தான். இந்தியா முழுவதும் அவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. ரஜினிகாந்த் சமீப காலமாக சமூக வலைத்தளங்களை உற்று நோக்கி கவனித்து வருகின்றார், டுவிட்டரில் ஏற்கனவே இணைந்து தன் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றார். தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் இணைந்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார், இதோ......
மிரட்டல் விடுத்தாலும் சிறையில் அடைத்தாலும் நிறுத்த மாட்டேன்: நடிகை கஸ்தூரி

மிரட்டல் விடுத்தாலும் சிறையில் அடைத்தாலும் நிறுத்த மாட்டேன்: நடிகை கஸ்தூரி

Latest News, Top Highlights
தன் மனதில் பட்டதை தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடிய நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர். சில காலமாக ட்விட்டரில் தான் நினைத்த கருத்துகளை அவர் வெளிப்படையாகப் பதிவிட்டு வருகிறார். அதற்கான எதிர்வினைகள் அவரைத் தாக்கினாலும், மனம் தளராது தன்னுடைய கருத்துகளைப் பதிவுசெய்து வருகிறார். இந்நிலையில், ‘மிரட்டல் விடுத்தாலும், சிறையில் அடைத்தாலும் நேர்படப் பேசுதல் நிறுத்த மாட்டேன்’ என ஒரு கவிதையை(?) பதிவிட்டுள்ளார் கஸ்தூரி. அந்தக் கவிதை இதோ... மிரட்டல் விடுத்தாலும், சிறையில் அடைத்தாலும், நேர்பட பேசுதல் நிறுத்த மாட்டேன். துச்சம்மென நினைத்தெம்மை அச்சுறுத்தல் செய்வோரை போர் புரிந்தோட்டவும் தயங்கமாட்டேன். மறந்துபோன வலிகளையே மறுபடி மறுபடி விதைப்பவர்கள், துரத்தி வந்தால் துடிக்கும் ஜாதியல்ல, துணித்து திரும்பி அடிக்கும் நீதியெமது! கஸ்தூரியின் இந்தக் கவிதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
குறள் வழியாக எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்த பிரசன்னா

குறள் வழியாக எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்த பிரசன்னா

Latest News, Top Highlights
திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் திரிபுராவின் தெற்கு மாவட்டத்தில், பெலோனியா நகரில் வைக்கப்பட்டு இருந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலைகளை பாஜகவினர் மண் அள்ளும் எந்திரம் கொண்டு அகற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல்களுக்கும், லெனின் சிலை அகற்றப்பட்டதற்கும் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, 'இன்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் நாளை பெரியார் சிலை அகற்றப்படும்' என்று முகநூலில் பதிவிட்டார். இவரின் சர்ச்சை கருத்தை தமிழக தலைவர்கள் பலர் கண்டித்தனர். ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் நட...
ஸ்டாலின், வைகோவுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்

ஸ்டாலின், வைகோவுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்

Latest News, Top Highlights
திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் திரிபுராவின் தெற்கு மாவட்டத்தில், பெலோனியா நகரில் வைக்கப்பட்டு இருந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலைகளை பாஜகவினர் மண் அள்ளும் எந்திரம் கொண்டு அகற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல்களுக்கும், லெனின் சிலை அகற்றப்பட்டதற்கும் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, 'இன்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் நாளை பெரியார் சிலை அகற்றப்படும்' என்று முகநூலில் பதிவிட்டார். இவரின் சர்ச்சை கருத்தை தமிழக தலைவர்கள் பலர் கண்டித்தனர். ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இத...
ரஜினியுடன் நடித்த  நாயின் மதிப்பு இத்தனை கோடியா?

ரஜினியுடன் நடித்த நாயின் மதிப்பு இத்தனை கோடியா?

Latest News, Top Highlights
இந்திய சினிமாவையே அசர வைக்கும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் காலா. மும்பை டானாக வரும் இவர் கூட ஒரு நாய் வலம் வருகிறது. இது தெருவில் வளரும் நாட்டு நாய் வகையைச்சேர்ந்தது தானாம். இதை வளர்ப்பவர் புற சென்னையில் தெருவில் கண்டெடுத்து இந்த படத்தில் நடிக்க டிரைனிங் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்ததையடுத்து இந்த நாயை ரூ. 2 கோடி வரை கொடுத்து வாங்க வெளிநாட்டில் சிலர் தயாராக இருக்கிறார்களாம். ஆனால் இதை வளர்க்கும் சைமன் தன்னுடைய பிள்ளை போல் வளர்ப்பதால் கொடுக்க மனமில்லை என்று மறுத்துள்ளாராம். வெளிநாட்டு நாய்களை பயன்படுத்தாமல் நாட்டு நாய்களை பயன்படுத்திய ரஞ்சித்தை பாராட்டலாம். இந்த முயற்சி தெரு நாய்களை புறம்தள்ளாமல் வளர்க்க ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்...
சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் இணைகிறார  விஜய் ?

சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் இணைகிறார விஜய் ?

Latest News, Top Highlights
இன்று தமிழகத்தில் அரசியல் மிக பெரிய அளவில் சூடுபிடித்து இருக்கிறது அதற்க்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் வந்தது தான் இதனால் தினமும் ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளது. நேற்று விஜய் அப்பா பேசும் போது விஜய் அரசியல் குறித்து பேசினார் அப்போது சூப்பர் ஸ்டாருடன் இணைவதை பற்றியும் பேசினார் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் தளபதி 62 இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்க இருக்கிறது இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார்கள். ரஜினி,கமல் என அனைவரும் அரசியலுக்கு வந்துள்ளதால் தளபதி விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கூறிவருகிறார்கள், இந்த நிலையில் இவர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதாக தகவல் வைரலாகி வருகிறது. இதை பற்றி செய...
கிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாபெரும் நலத்திட்ட உதவிகள் !

கிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாபெரும் நலத்திட்ட உதவிகள் !

Latest News, Top Highlights
கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் தளபதி விஜய்.தளபதி ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் செய்து வருவது வழக்கம். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது.இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு P.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை சார்பாக ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகள் : *தையல் மிஷன்கள் 15 , *200 வேஷ்டிகள் மற்றும் 550 சேலைகள் , *சில்வர் குடங்கள் 100 , *ஸ்கூல் பேக்ஸ் 50 , *அரசு மருத்துவமனைக்கு வீல் சேர் 2 , *சர்க்கரை சரிபார்க்கும் மிஷன்கள் 10 , *பெட்சீட் 100, *உணவு 2000 பேருக்கும், கல்வி உதவிதொகை 20 பேருக்கும் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு. புஸ்ஸி.N....
விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகி இருக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியிருக்கிறது. இதில் இயக்குநர் கோகுல், நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சமீபத்தில் வெளியான ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக்குக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜுங்கா என்ற கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் டானாக நடிக்கிறார். சித்தார்த் விப்பின் இசையமைக்கும் இந்த படம் கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்கும் பிரபல நடிகர்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்கும் பிரபல நடிகர்

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது. ரஜினி அடுத்ததாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் ரஜினி தனது அரசியல் பணிகளை ஓரளவு முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘இறைவி’ படங்களில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். எனவே, ரஜினி நடிக்கும் இந்த படத்திலும் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று செய்தி வெளியாகியது விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், ரஜினியின் தம்பியாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக புதிய தகவ...