Sunday, November 8
Shadow

Top Highlights

இந்திய சினிமாவின் மிக சிறந்த சாதனையாளரை இழந்துவிட்டோம் – சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த்

இந்திய சினிமாவின் மிக சிறந்த சாதனையாளரை இழந்துவிட்டோம் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் நம்பர் ஓனே நடிகை அதோடு அழகு திறமை இவை அனைத்திலும் மிக சிறந்த நடிகை அதோடு மிகவும் நேர்த்தியான நடிகை குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகம் ஆகி பின்னர் நாயகி அவதாரம் தென் இந்தியாவில் பெரும் புகழும் இருந்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகம் செல்லும் போது அவரை நகைத்தவர்கள் அதிகம் அதை பொய்யாக்கி அவர்கள் முக்கில் விரல் வைக்கும் அளவுக்கு தன்னை ஹிந்தி உலகில் சிறந்த நாயகி என்றும் தன்னை வெல்ல யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு புகழ் வாங்கியவர் தமிழில் அதிக படங்கள் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தான் அதிகம் நடித்தவர் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இகவும் நெருங்கிய தோழி அதோடு குடும்ப நண்பும் ஏன் ஸ்ரீதேவி திருமணத்தில் சிக்கல் ஏற்ப்பட்டபோதும் சூப்பர் ஸ்டார் தான் முன் இருந்து அவை அனைத்தையும் தீர்த்து வைத்தவர் அவர் முன்னிலையில் தான் திருமணம் ...
நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !

நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !

Latest News, Top Highlights
குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ , ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன் , ஸ்ரீ தேவி. அதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் இட்டுக்கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிரிக்கிறது. 16வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது அதன் பிறகு மூன்று முடிச்சு , வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள். நானும் ஸ்ரீதேவியும் கவிகுயில் , மச்சான பார்த்திங்களா , சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம். ஹிந்தியில் உச்சம் தொட்ட நடிகை சிவகாசி பக்கம் அவரின் பூர்விகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்....
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.

ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.

Latest News, Top Highlights
பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது... " தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி. தனது நான்காம் வயதில் 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி .தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்து வந்த ஸ்ரீதேவி தனது பதிமூன்றாவது வயதில் 'மூன்று முடிச்சு' படத்தின் மூலமாக கதாநாயகியானார் .தொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார்,ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு ,கன்னட முன்னணி நடிகர்களின் கதாநாயகியாகவும் உலா வந்தார்....
கேணி – திரைவிமர்சனம் ( சுவையான ஊற்று நீர் ) Rank 4/5

கேணி – திரைவிமர்சனம் ( சுவையான ஊற்று நீர் ) Rank 4/5

Review, Top Highlights
தமிழில் பலநேரங்களில் மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வரும் அந்த படங்கள் சமுக அவலங்களை சொல்லும் கதையாக பல நேரங்களில் அமைத்துள்ளது சில சமயம் மக்களுக்கும் மட்டும் இல்லை அரசியல்வாதிகளுக்கும் சவுக்கடி போல இருக்கும் இந்த முறை மக்களுக்கு மக்களுக்குள் மதம் மொழி இல்லை மனிதர்கள் மனிதர்கள் தான் எல்லோருக்கும் ஒரே உணர்வுகள் தான் தண்ணீருக்கு இன்று நாம் ஒரு பக்கம் கேரளா ஒருபக்கம் கர்நாடாக இந்த இருவரிடும் மண்டியிட்டு கொண்டு இருக்கிறோம் அதே போல இந்த படம் இரண்டு மாநிலங்களின் மக்களுக்கான போராட்டம் தான் இந்த கதை இந்த படத்தை நிஷாத் இயக்கியுள்ளனர் இந்த இவர் மலையாளத்தில் பிரபலமான இயக்குனர் இவர் இயக்கம் முதல் தமிழ் படம் இந்த படத்தில் பார்த்திபன், அனுஹாசன்,ரேகா,ரேவதி நாசர்,இவர்களுடன் நீண்ட இடைவெளிக்கு பின் ஜெயபிரதா மற்றும் பலர் நடிப்பில் இந்த படத்துக்கு இசை சாம் மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ளனர் சரி ...
ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த ஸ்ரீதேவி இன்று மாரடைப்பால் காலமானார்

ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த ஸ்ரீதேவி இன்று மாரடைப்பால் காலமானார்

Latest News, Top Highlights
1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் -ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தஸ்ரீதேவி தனது நான்கு வயதிலேயே ஏ.பி.நாகராஜன் இயக்கிய கந்தன் கருணை திரைப் படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1967ஆம் ஆண்டு வெளியான அப்படம் தெலுங்கு, கன்னடம் மலையாளம் என்று வல்ல தென்னிந்திய மொழிகளிலும் குழந்தைநட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை இவருக்குப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம்ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம்கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றி படமாக அமையவே இவரது சினிமாவாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழியிலும...
லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் ‘கரு’ இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் ‘கரு’ இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Latest News, Top Highlights
லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் 'கரு'. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 2014ல் கத்தி என்ற பெரிய படத்தை கதையை நம்பி எடுத்தோம். அதை தொடர்ந்து பிரமாண்ட படங்களையும், கரு மாதிரி சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறோம். வினியோகம், தயாரிப்பு என எல்லாவற்றிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்து வருகிறோம். இது எங்களுக்கு பெருமையான ஒரு படம் என்றார் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிஷாந்தன். விஜய் எனக்கு கிடைத்த பொக்கிஷம். கடந்த 10 ஆண்டுகளாக விஜய் படங்களில் வேலை செய்து வருகிறேன். இயக்குனர் ஆனாலும் அவருடன் தொடர்ந்து வேலை செய்வேன் என்றார் வசனகர்த்தா அஜயன் பாலா. லைகாவோடு எனக்கு 15 வருட தொடர்பு இருக்கிறது....
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கம் வாய்ப்பு எப்படி கிடைத்தது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கம் வாய்ப்பு எப்படி கிடைத்தது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு

Latest News, Top Highlights
தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் வசூல் நாயகனாக பார்க்கப்படுபவர் ரஜினிகாந்த். மாநில மொழி சார்ந்த படங்களில் அவருடைய படங்களின் வசூல் ஹிந்திப் படங்களை விடவும் அந்தக் காலத்திலேயே தனி சாதனை படைத்தவை. திரையுலகிற்கு வரும் பலரின் கனவு, அவருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் அல்லது இயக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இன்றைய இளம் நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு என்பது பெரிய ஒன்றாகும். அவர்களுடைய இமேஜ், சம்பளம் ஆகியவை இதன் மூலம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். 'கபாலி, காலா' என அடுத்தடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து ஆச்சரியப்படுத்திய ரஜினிகாந்த், அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கார்த்திக் சுப்பராஜ் கடைசியாக இயக்கிய 'இறைவி' படம் சரியாகப் போகவில்லை. மேலும்...
தமிழக தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்ட  ‘மனுசனா நீ’  திருட்டு விசிடி!

தமிழக தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்ட ‘மனுசனா நீ’ திருட்டு விசிடி!

Latest News, Top Highlights
இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவரக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு உரிமை, மற்ற மாநிலங்களில் திரையிட உரிமை என்று எதுவும் கொடுக்காமல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டேன். ஆனாலும் தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து நெட்டில் திருட்டுத்தனமாக வலையேற்றி விட்டனர். ஃபாரன்சிக் வாட்டர்மார்க் கொண்டு எந்தத் தியேட்டர், எத்தனை மணிக்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெகு விரைவில் கிடைக்கும். கிடைத்தவுடன் அந்தத் தியேட்டர்மேல் போலீஸில் புகார் கொடுக்கவும், வழக்குத் தொடுக்கவும், முதல் அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து இடங்களிலும் மனு அளிக்க உள்ளேன். இந்த திருட்டு தனமான டிஜிட்டல் வெளியீட்டினால் ஆண்டிற்கு 500 முதல் 600 கோடி வரை தமிழ் சினிமாவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த எங்கள் நடவடிக்கைக்கு ஊடக நண்பர்கள் ஒத்துழைத்து செய்தியை அனைத்...
நடிகர் ஆர்கேவின் புதிய கண்டுபிடிப்பு..! விவேக் ஓபராய், சமீர் கோச்சர் கலந்துகொண்ட அறிமுக விழா!!

நடிகர் ஆர்கேவின் புதிய கண்டுபிடிப்பு..! விவேக் ஓபராய், சமீர் கோச்சர் கலந்துகொண்ட அறிமுக விழா!!

Latest News, Top Highlights
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக... தயாரிப்பாளராக.... அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தினார் வி கேர் நிறுவனத்தின் சேர்மனான ஆர்கே.. இந்த நிகழ்ச்சியில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் நிறுவன தூதராக இணைந்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கலந்துகொண்டு இந்த புதிய ஷாம்பூவை அறிமுகப்படுத்தினார...
காலா படத்தின் டீசர் எப்போ தனுஷ் அறிவிப்பு

காலா படத்தின் டீசர் எப்போ தனுஷ் அறிவிப்பு

Latest News, Top Highlights
தமிழ் சினிமா இன்று மிகவும் மகிழ்ச்சியில் நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட அறிவிப்பவு இன்று தலைவர் காலா படத்தின் டீசர் தேதி அறிவிப்பை குட்டி தலைவர தனுஷ் அறிவித்துள்ளார். ரஜினியின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக அவருடைய அடுத்த படத்திற்காக வெயிட்டிங். 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து VFX வேலைகள் நடந்து வருகிறார். அப்படம் தயாராக நேரம் தேவைப்படுவதால் அவருடைய அடுத்த படமான காலா ஏப்ரலில் வெளியாகும் எனப்படுகிறது. இந்த நிலையில் மாஸாக தயாராகி இருக்கும் காலா படத்தின் டீஸர் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாக இருப்பதாக தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்....