சூப்பர்ஸ்டார் தீடீர் பட அறிவிப்பு அப்போ அரசியல் நிலை என்ன?
ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா', '2.ஓ' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை 'பீட்சா', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே, ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் இரண்டாவது முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளது.
2012-ம் ஆண்டு வெளிவந்த 'பீட்சா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். 'ஜிகர்தண்டா' படத்தின் மூலமும் பெரிதும் பேசப்பட்டார். அடுத்து, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க 'இறைவி' படத்தை இயக்கினார். அந்தப் படம் அவருக்கு சரியான படமாக அமையவில்லை
அடுத்து பிரபுதேவா நடிக்கும் மெர்குரி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ரஜி...









