Sunday, November 8
Shadow

Top Highlights

சத்ரு படத்தின் Motion போஸ்டரை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார்

சத்ரு படத்தின் Motion போஸ்டரை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார்

Latest News, Top Highlights
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டான் இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம். இந்த படத்தின் MOTION போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது....
ரஜினியுடன், தமிழரசன் சந்திப்பு…  தலித் அரசியல் குறித்து விவாதம்!

ரஜினியுடன், தமிழரசன் சந்திப்பு… தலித் அரசியல் குறித்து விவாதம்!

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த மாதம் அறிவித்தார். அதிலிருந்து பல கட்சித் தலைவர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இந்நிலையில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் தமிழரசன் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இது குறித்து பேசிய தமிழரசன், ‘ அடித்தட்டு மக்களிடம் ​செல்வாக்கை பெற்றவர் ரஜினி. மக்களுக்கு உழைக்க ரஜினி அதிக ஆர்வத்துடன் உள்ளார். தலித் அரசியல் குறித்து ரஜினியுடன் பேசினேன்.’ என்று கூறீனார்....
இந்தியாவின் குடியரசு தினத்தை போற்றும் விதமாக ‘Face Of India’ என்ற மியூசிக் வீடியோவை தயாரித்த பிரபுதேவா ஸ்டுடியோஸ்

இந்தியாவின் குடியரசு தினத்தை போற்றும் விதமாக ‘Face Of India’ என்ற மியூசிக் வீடியோவை தயாரித்த பிரபுதேவா ஸ்டுடியோஸ்

Latest News, Top Highlights
எல்லா துறைகளிலும் உலக அளவில் சாதனை படைத்தவர்களை கொண்டுள்ள நாடுதான் நமது இந்தியா. இது போன்ற நமது நாட்டின் ஒரு பொக்கிஷம் தான் பிரபுதேவா. அவரது நடனத்தினாலும் சாதனைகளிலாலும் கடந்த இருபதும் மேற்பட்ட ஆண்டுகளாக நமது நாட்டின் ர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் ஊந்துதலாகவும் அவர் இருந்து வருகிறார்.இளைஞ இந்தியாவின் குடியரசு தினத்தை போற்றும் விதமாக 'Face Of India' என்ற மியூசிக் வீடியோவை வேல்ஸ் யூனிவெர்சிட்டியின் தலைவரும் ,பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான Dr.K.கணேசனுடன் இணைந்து பிரபுதேவா தயாரித்துள்ளார். நாட்டுப்பற்றை மையமாக வைத்து இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களும் மொழிகளிலும் இருக்கும் சிறப்பம்சங் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் போஸ்டர் இன்று வெளியிடப்படவுள்ளது. இப்பாடலின் டீசரை இன்று மாலை 8 மணிக்கு RJ பாலாஜி வெளியிடவுள்ளார். ...
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் 2 பூஜையுடன் துவங்கியது

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் 2 பூஜையுடன் துவங்கியது

Latest News, Top Highlights
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் "நாடோடிகள் – 2 " உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்....
இளையராஜாவுக்கு கவிதையாக பாராட்டிய சிவகுமார்

இளையராஜாவுக்கு கவிதையாக பாராட்டிய சிவகுமார்

Latest News, Top Highlights
பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது பவிபூஷத்மண். 68 ஆண்டுகளில் 100 பேர் இந்த விருது வாங்கியிருந்தால் அதிகம். ராகதேவன் இளையராஜாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இல்லை. அந்த விருதுக்கு ராஜாவால் கௌரவம் கிடைத்துள்ளது. பஞ்சு அருணாசலம் அவர்களால் 'அன்னக்கிளி'- படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கிடைத்த புதையல் அவர். அப்படத்தின் கதாநாயகனாக நான் நடித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். 50-க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்து படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்திருக்கிறார் . எனது 100-வது படம் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி '-' சிந்துபைரவி '- படங்களின் வெற்றியில் பெரும் பங்கு அவருடையது. தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்த அபூர்வ கலைஞர். அவரால் கலையுலகும் தமிழகமும் இந்த விருது மூலம் கௌரவிக்கப் பட்டிருக்கிறது. எத்தனை விருதுக...
இளையராஜாவுக்கு வைரமுத்துவின் கவிதை வாழ்த்து

இளையராஜாவுக்கு வைரமுத்துவின் கவிதை வாழ்த்து

Latest News, Top Highlights
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு கமல், ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் கவிதை வாழ்த்து பின்வருமாறு.. பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை “காற்றின் தேசம் எங்கும் - உந்தன் கானம் சென்று தங்கும் வாழும் லோகம் ஏழு...
தயாரிப்பாளர் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு ‘வேலைக்காரன்’ இலவச காட்சி…

தயாரிப்பாளர் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு ‘வேலைக்காரன்’ இலவச காட்சி…

Latest News, Top Highlights
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்த வேலைக்காரன் படம் கடந்த மாதம் வெளியானது. மோகன்ராஜாவின் முந்தைய படம் போல மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட இந்தப்படத்தில் ரசாயனம் கலக்கப்பட்ட உணவுப்பொருட்கள் குறித்து சொல்லப்பட்ட கருத்து மக்களை வெகுவாக கவர்ந்தது.. ஊடகங்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்தநிலையில் உணவுப்பிரச்சனையின் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என பல பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களும் சமூக நல ஆர்வலர்களும் தயாரிப்பு நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்தனராம். இதனையடுத்து பள்ளி மாணவர்கள் பார்க்கும் விதமாக படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்கிவிட்டு மாணவர்களுக்கு வரும் பிப்-1ஆம் தேதி முதல் பிப்-15ஆம் தேதி வரை இலவசமாக வேலைக்காரன் படத்தை திரையிட்டு காட்ட தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா முடிவுசெய்துள்ளார். இந்த...
நாடோடிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

நாடோடிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் "நாடோடிகள் - 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்... இப்படத்தின் போட்டோ ஷுட் திருவள்ளூர் அருகே (26/01/18) அன்று நடைபெறுகிறது... இசை -ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஏகாம்பரம், கலை - ஜாக்கி, எடிட்டிங் - ரமேஷ், பாடலாசிரியர்- யுகபாரதி, சண்டை பயிற்சி- திலீப் சுப்புராயன், நடனம் - திணேஷ், ஜானி, தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது...
இளையராஜாவுக்கு பத்ம விபூஷன்..

இளையராஜாவுக்கு பத்ம விபூஷன்..

Latest News, Top Highlights
இந்தியாவின் இரண்டாவது முக்கிய சிவில் விருதான பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமசந்திரன் நாகசுவாமிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதற்கும் மொத்தம் மூன்று பத்மவிபூஷண் விருதுகளையும், ஒன்பது பத்மபூஷண் விருதுகளையும், 73 பத்மஸ்ரீ விருதுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்திருப்பதைப் பற்றி கேட்டபோது, இது தமிழகத்துக்கே கிடைத்த விருது என்று இளையராஜா...
நடிகர் ஆரியின் “நாகேஷ் திரையரங்கம்” படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி ரிலீஸ்

நடிகர் ஆரியின் “நாகேஷ் திரையரங்கம்” படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி ரிலீஸ்

Latest News, Top Highlights
ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின்திரு.இராஜேந்திர எம்.இராஜன்அவர்களின்தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக்இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை”, “மாயா” படப்புகழ் ஆரிகதாநாயகனாகநடிக்கும் இந்த படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படி தான்” படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர்மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பின் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில்எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகைசித்தாராவும்நடித்திருக்கிறார்கள். நௌஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில்,தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள “நாகேஷ் திரையரங்கம்” வரும்பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும்...