Sunday, November 8
Shadow

Top Highlights

ரசிகர்கள் முன்பு சிங்கமாகிய சூர்யா

ரசிகர்கள் முன்பு சிங்கமாகிய சூர்யா

Latest News, Top Highlights
நடிகர் சூர்யா, பொது இடங்களில் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிப்பவர். அதுபோல், தன்னுடைய ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டவர். பொது விழாக்களில் ரசிகர்களை பற்றி பேசாமல் இருக்க மாட்டார். சமீபத்தில் தன்னுடைய காலில் விழுந்த ரசிகரிடம், மீண்டும் அவர் காலில் விழுந்தார். யார் காலிலும் விழக்கூடாது என்பதற்காக சூர்யா அவ்வாறு செய்தார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்றிருந்த சூர்யா, அங்குள்ள ரசிகர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியைத் முடித்து விட்டு சூர்யா காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அப்போது, பைக்கில் வந்த ரசிகர்கள் அதி வேகத்தில் அவரை பின் தொடர்ந்திருக்கிறார்கள். இதனையறிந்த சூர்யா, காரை நடுரோட்டில் நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளார். பைக்கை வேகமாக ஓட்டாதீர்கள் என்று அவர்களை திட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங...
விஜய் 62யில் இணைந்த பிரபல நடிகர் மேலும் புது தகவல்களுடன்

விஜய் 62யில் இணைந்த பிரபல நடிகர் மேலும் புது தகவல்களுடன்

Latest News, Top Highlights
தளபதி தற்போது நடிக்கும் படம் தளபதி 62 இந்த படத்தின் பூஜை மட்டறு படபிடிப்பு இன்னும் சில நாட்கள் உன் நடந்தது இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவருடன் யோகிபாபு நடிக்கிறார் என்பது அட்டு தான் உருதிசெயயபட்டது தற்போது எழும் ஒரு நடிகர் உறுதி செய்யபட்டுள்ளது இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிகர் ப்ரேம் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதை மிகவும் மகிழ்ச்சியாக அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதற்கு முன் இவர் ப்ரியாணி, விக்ரம் வேதா ஆகிய படங்களில் போலிஸாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
பாண்டி ராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

பாண்டி ராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

Latest News, Top Highlights
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா சைகல், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கடைக்குட்டி சிங்கம்'. 2டி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவு பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ராஜத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. கார்த்திக்கு அவர் இசையமைக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. மார்ச் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் ஆகியோருடன் நடிக்கும் நடிகர் - நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது....
‘டிக்:டிக்:டிக்’ ரிலீஸ் தேதியை டக் டக் என்று தள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

‘டிக்:டிக்:டிக்’ ரிலீஸ் தேதியை டக் டக் என்று தள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

Latest News, Top Highlights
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிக்:டிக்:டிக்'. இதில் ஜெயம் ரவி மகன் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது தமிழ்த் திரையில், முழுக்க விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் த்ரில்லர் படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை ஜபக் தயாரித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். ஜனவரி 26-ம் தேதி வெளியீடாக 'டிக்:டிக்:டிக்' திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜனவரி 26-ம் தேதி படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிதிச்சுமை காரணமாக 'டிக்:டிக்:டிக்' வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தெரிவித்துள்ளார்....
இயக்குனர் R கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மற்றும்  நாயகி மேகா ஆகாஷ், நடிக்கும் ‘பூமராங்

இயக்குனர் R கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மற்றும் நாயகி மேகா ஆகாஷ், நடிக்கும் ‘பூமராங்

Latest News, Top Highlights
இளமையான, சுவாரஸ்யமான தலைப்புகள் சினிமா ரசிகர்களின் கவனத்தை என்றுமே ஈர்க்கும். இயக்குனர் R கண்ணன்- அதர்வா கூட்டணி ரசிகர்கள் மற்றும் வணிக தரப்புகளில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு 'பூமராங்' என தலைப்பிடப்பட்டுள்ளது. 'பூமராங் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. இந்த பூஜையில் இயக்குனர் R கண்ணன், இப்படத்தின் கதாநாயகன் அதர்வா, கதாநாயகி மேகா ஆகாஷ், இப்படத்தில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் சுஹாசினி மணிரத்னம் மற்றும் இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 'பூமராங்' சமுதாய கருத்துள்ள ஆக்ஷன் படமாகும். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் உபன் படேல் சுவாரஸ்யமான வில்லின் வேடத்தில் நடிக்கவுள்ளார். சதிஷ் மற்றும் RJ பாலாஜி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை இயக்குனர் R கண்ணனி...
இந்த ஆண்டின் முதல் தொடக்கமே ஒரு நல்ல நாள் பார்துசொல்லுகிறாம் விஜய் சேதுபதி

இந்த ஆண்டின் முதல் தொடக்கமே ஒரு நல்ல நாள் பார்துசொல்லுகிறாம் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அசத்தலான படங்களை தர நடிகர் விஜய் சேதுபதி தயாராகிக்கொண்டிருக்கின்றார். ஆறுமுக குமார் இயக்கத்தில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ' இந்த ஆண்டின் அவரது முதல் ரிலீசாக அமையவுள்ளது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றொரு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை '7C's Entertainment Private Limited' நிறுவனமும் 'Amme Narayana Entertainment' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ந'ல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் போஸ்டரும் டீசரும் மிகப்பெரிய ஹிட்டாகி இப்படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியுள்ளது. காயத்ரி மற்றும் நிஹாரிகா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் , கோவிந்தராஜின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது....
“குறும் படங்களை பெரிய திரையில் திரையிடப்படக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது” இயக்குநர் ராம்

“குறும் படங்களை பெரிய திரையில் திரையிடப்படக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது” இயக்குநர் ராம்

Latest News, Top Highlights
மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி குறித்த தொடக்கவிழா இன்று சென்னை ஜி ஆர் டி கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி இயக்குநர்களான ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில்,‘ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த குறும் பட போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகைத்தந்த அனைத்து இளந் தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கதை களம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டே இந்த குறும் பட போட்டியை தொடங்கியிருக்கிறோம். ...
மக்களுக்கு நல்லது செய்கிற அனைவரும் அரசியல்வாதிகள் தான்: விஷால்

மக்களுக்கு நல்லது செய்கிற அனைவரும் அரசியல்வாதிகள் தான்: விஷால்

Latest News, Top Highlights
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இரும்புத்திரை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகன் விஷால், விஷாலின் தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே. ரெட்டி, இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகை குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, கில்ட் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன், நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ஆர்.கே.செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். விழா துவங்கியதும் கிட்னி பைலியர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகனான விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகளான என். மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி அவர்களுக்கு நன்கொடையை வழங்கினார். மேடையில் அவருடன் நடிகை குட்டி பத்மினியும் இருந்தார். பின்னர் விஷால் பேசும்போது, ‘சமூக பிரச்னையை பற்றி...
கமலுடன் இணைந்த விக்ரம்

கமலுடன் இணைந்த விக்ரம்

Latest News, Top Highlights
விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும், கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து கமல் அவரது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, `திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்.' என்று கு...
நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!

நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!

Latest News, Top Highlights
சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி, கடைக்குட்டி சிங்கம் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமில்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருபவர். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரின் அன்புக்கு சொந்தக்காரரான சௌந்ததராஜா இப்போது புதுமாப்பிள்ளை. “க்ர...