Sunday, November 8
Shadow

Top Highlights

ரஜினியின் கட்சி, சின்னம் மதுரையில் அறிவிக்கப்படலாம் – ராகவா லாரன்ஸ்!

ரஜினியின் கட்சி, சின்னம் மதுரையில் அறிவிக்கப்படலாம் – ராகவா லாரன்ஸ்!

Latest News, Top Highlights
மதுரை: டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். இந்நிலையில் மதுரை மாவட்ட, மாநகர் தலைமை நற்பணி மன்றங்கள் சார்பில் ரஜினியின் 68-வது பிறந்த நாள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஒன்றிய-நகர நிர்வாகிகளுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா அழகர்கோவிலில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: 12 வயதில் இருந்து ரஜினியின் ரசிகராக உள்ளேன். மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு ஒன்று நடத்தும் திட்டம் உள்ளது. அதில் கட்சியின் பெயர், சின்னம், கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை மண் அரசியல் பிரவேசத்துக்கு முக்கியமான தளமாக இருப்பதால் அவர் மதுரையில் இருந்து அரசியல் தொடங்குவார் எனக் கருதுகிறோம். அவரது ஆன்மிக அரசியல் என்பது தனிப்பட்ட மதத்தை முன்னிலை...
சூர்யாவின் 37-வது படத்தை இயக்குவது யார்?

சூர்யாவின் 37-வது படத்தை இயக்குவது யார்?

Latest News, Top Highlights
ஹரியின் ‘சிங்கம் 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இதனையடுத்து செல்வராகவன் இயக்கவிருக்கும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள். இதன் படப்பிடிப்பை இம்மாதம் (ஜனவரி) இறுதியில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, சூர்யாவின் 37-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். இதை சூர்யாவே ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘கேங்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது உறுதிபடுத்தியுள்ளார். ஏற்கெனவே, இவர்கள் கூட்டணியில் ‘அயன், மாற்றான்’ ஆகிய 2 படங்கள் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது....
விக்ரம் நடிப்பில் 300 செலவில் கோடியில் உருவாகும் புதிய படம்

விக்ரம் நடிப்பில் 300 செலவில் கோடியில் உருவாகும் புதிய படம்

Latest News, Top Highlights
விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அடுத்ததாக விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், விக்ரம் அடுத்ததாக ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு `மஹாவீர் கர்ணா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை நியூயார்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டம் என்ற தயாரிப்பு நிறுவனம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக...
ஜீவா மற்றும் நிக்கிகல்ராணி நடிக்கும் கீ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜீவா மற்றும் நிக்கிகல்ராணி நடிக்கும் கீ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
குளோபல் இன்போடெய்ன்மெண்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கீ’. செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காலீஸ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனைகா சோதி, ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் சந்திர சேகர் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனிஷ் தருண் குமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். தணிக்கை குழு சான்றிதழ் கிடைத்ததை அடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பி...
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கிய Wonder Women நாயகி!

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கிய Wonder Women நாயகி!

Latest News, Top Highlights
ஹாலிவுட்டில் சில மாதங்களுக்கு முன் வெளியானது ’'Wonder Women'. இப்படம் உலகளவில் நல்ல வசூலை ஈட்டிக் கொடுத்தது. மேலும் அப்படத்தில் நாயகியாக தோன்றிய 'Gal Gadot' அனைவரின் கவன ஈர்ப்பையும் பெற்றார். இந்நிலையில் இவரின் நிர்வாண படம் ஒன்று இணையத்தில் வெளிவந்து செம்ம வைரலாகி வருகின்றது, இவை பழைய புகைப்படம் என்றாலும் தற்போது ட்ரெண்டாக வலம் வருகின்றது....
விக்னேஷ் சிவனின் புது காதல் ஆட்டம் கடுப்பில் நயன்தாரா

விக்னேஷ் சிவனின் புது காதல் ஆட்டம் கடுப்பில் நயன்தாரா

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவனை இயக்குநராக அறிந்ததை விட நயந்தாராவின் காதலராக தான் பலர் அறிந்துள்ளார்கள். ஆனால், இவர் பற்றி அறியாதவை பல என்கிறது கோடம்பாக்க வட்டாராம். நயந்தாராவுக்கு விக்னேஷ் சிவன் மூன்றாவது காதலர் என்பது போல, விக்னேஷ் சிவனும் பெண்கள் விஷயத்தில் லேசு பட்டவர் இல்லையாம். வரலட்சுமியுடன் இவருக்கு இருந்த நட்பின் காரணமாகத்தான் ‘போடா போடி’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பே கிடைத்ததாம். இதற்கு முன்னதாக பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய போது, கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் செல்லப்பிள்ளையாக இருந்து வந்த விக்னேஷ் சிவன், எப்படியோ தனுஷின் நட்பாகி அவரது தயாரிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார். அப்படத்தின் மூலம் நயந்தாராவுக்கு காதலராக மாறியவர், சோனாவை கை கழுவிவிட்டாராம். சொகுசு கார், அடுக்குமாடி குடியிருப்பு என்று நயந்தாராவிடம் பல பரிசுகளை பெற்றவர், நயந்தாரா தன்னிடம் இருந்து விலகிச்ச...
மலேசியா மருத்துவமனையில் ஜெயம் ரவி அனுமதி

மலேசியா மருத்துவமனையில் ஜெயம் ரவி அனுமதி

Latest News, Top Highlights
ரஜினி, கமல உள்ளிட்ட சுமார் 340 நடிகர் நடிகைகள் நேற்று மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒட்டு மொத்த கோடம்பாக்கமே பங்குபெற்ற இதில் கிரிக்கெட், கால்பந்து என்று நடிகர்கள் பலவிதமாக மக்களை எண்டர்டெயின்மெண்ட் செய்தனர். இதற்கிடையே, கலை நிகழ்ச்சியில் பங்கேற்று கால்பந்து போட்டியில் கலந்துக்கொண்ட நடிகர் ஆரி கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ஜெயம் ரவியும் மலேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரித்ததில், உடல் நிலை சரியில்லாமல் மலேசியாவுக்கு சென்ற ஜெயம் ரவி கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டாராம். அதனால், அவரை மலேசியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். விரைவில் குணமாகி சென்னைக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது....
மலேசிய மண்ணில் பிச்சை எடுக்க சென்ற தமிழ்  நடிகர்கள் என்று வெளுத்து வாங்கிய மலேசியப் பத்திரிக்கை

மலேசிய மண்ணில் பிச்சை எடுக்க சென்ற தமிழ் நடிகர்கள் என்று வெளுத்து வாங்கிய மலேசியப் பத்திரிக்கை

Latest News, Top Highlights
பாத்திரம் நிரப்ப பாத்திரம் ஏந்தும் தமிழ் நட்சத்திரங்கள் என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டு மலேசியாவில் நடைபெறும் தமிழ் நட்சத்திர கலை விழாவிற்கு மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைமையிலான உறுப்பினர்கள் பதவி வகிக்கின்றனர். இவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அளித்த முக்கிய வாக்குறுதியான நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகர் சங்கம் கட்டட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட திரைநட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். முன்னதாக நேற்று கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நடிகை ஷோபனா குழுவினரின் நாட...
எனக்கு தல தான் பிடிக்கும் – ரஜினிகாந்த் ஓபன் டாக்

எனக்கு தல தான் பிடிக்கும் – ரஜினிகாந்த் ஓபன் டாக்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவைத் தொடர்ந்து தற்போது அரசியலிலும் ஈடுபட இருக்கிறார். விரைவில் இவரது கட்சி குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நட்சத்திரக் கிரிக்கெட் விழாவில் பங்கேற்க மலேசியா சென்றிருக்கிறார். அவருடன் தமிழ் சினிமாவைச் சேர்ந்த 340-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர். அங்கு சினிமா பிரபலங்கள் பங்கேற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சூர்யாவின் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டியின் போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் தற்போதைய இந்திய அணியில் தல டோனி தான் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு எப்போதுமே பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் என்றும் தெரிவித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனும் மலேசியா சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
வைரலாகும் ஸ்ரோயவின் அரை நிர்வாண படம் உள்ளே

வைரலாகும் ஸ்ரோயவின் அரை நிர்வாண படம் உள்ளே

Latest News, Top Highlights
‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியின் ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். தெலுங்கிலும் அவரது மார்க்கெட்டை தக்கவைத்து வந்தார். தற்போது, தமிழில் ‘நரகாசுரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஸ்ரேயா இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்குள்ள பன்டா கடல் பகுதியில் கடலுக்குள் ‘டூபீஸ்’ நீச்சல் உடையில் கடல் கன்னி போல் நீந்தியதை புகைப்படமாக எடுத்து, அதை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வைரலாகிய நிலையில், தற்போது அரை நிர்வாண புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். ஸ்ரேயாவிற்கு படவாய்ப்புகள் அதிகமாக இல...