Sunday, November 8
Shadow

Top Highlights

ரஜினியை வைத்து `முதல்வன்-2′ படத்தை இயக்கும் ஷங்கர்

ரஜினியை வைத்து `முதல்வன்-2′ படத்தை இயக்கும் ஷங்கர்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் `2.0' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள `காலா' படம் ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். விரைவில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற தலைப்பில் இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் மாற்றத்தை விரும்புகிறவர்களை இணையும்படி தெரிவித்திருந்தார். தற்போது வரை அதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ரசிகர்கள் சந்திப்பின் போது, `காலா' படத்திற்கு என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது. ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார...
மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் நடிகர் ஆரிக்கு பலத்த காயம்

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் நடிகர் ஆரிக்கு பலத்த காயம்

Latest News, Top Highlights
கோலாலம்பூர் மலேசியா,ஜனவரி 6th 2018 நேஷனல் புகிட் ஜலில் ஸ்டேடியத்தில், நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் மலேசிய பிரதமர் முன்னிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்ட அணைத்து திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று கூடி நட்சத்திர விழா நடைபெற்றது, இவ்விழாவில் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் உடன் மலேசிய கலைஞர்கள் இணைந்து நடிகர் ஆர்யா தலைமையில் ஒரு அணியும் அதர்வா தலைமையிலான கால்பந்து அணியும் பங்குபெறும் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அதர்வா அணி சார்பாக விளையாடிய நடிகர் ஆரி தன் அணிக்கு வலு சேர்க்கும் விதமாக கோல் போட முயற்சியில் ஈடுபட்ட போது எதிரணியின் கால்பந்து வீரர் பந்தை தடுக்க முயற்சிக்க எதிர்பாராதவிதமாக ஆரி மீது விழ காலில் பலத்த காயம் ஏற்பட்டது, விறுவிறுப்பாகச் சென்ற ஆட்டக்களத்தில் பதட்டம் நிலவியது தொடர்ந்து விளையாடுவார் என எதிர்ப்பார்த்த ரசி...
மலேசியா வெளியிடப்பட்ட ஜுங்கா ’ டைட்டில் டீஸர் வெளியீடு

மலேசியா வெளியிடப்பட்ட ஜுங்கா ’ டைட்டில் டீஸர் வெளியீடு

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் டீஸர் இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் கலையரங்கில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் புதிய கெட்டப்பில் தோன்றுகிறார். இவருடன் சயீஷா சைகல், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல். இதைப் பற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்ட போது,‘ படத்தின் டைட்டிலுக்காக டீஸர் வெளியிடப்பட்டது இது தான் முதன்முறை. ‘ஜுங்கா ’ என்ற டைட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வைக்க எடுக்கப்பட்ட புதிய முயற்சி இது. விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்த ப...
இயக்குனர் சற்குணதுடன் இணையும் மாதவன்

இயக்குனர் சற்குணதுடன் இணையும் மாதவன்

Latest News, Top Highlights
இறுதி சுற்று படத்துக்கு பிறகு மாதவன் மீதான மரியாதையும், நம்பிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் நம்பிக்கையில் இருக்கும் சிறந்த நடிகரான மாதவன், இயக்குனர் சற்குணம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் பல்வேறு அழகான இடங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. மிக பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தை 'ஆரஞ்சு மிட்டாய்', 'றெக்க' படங்களை தயாரித்த காமன்மேன் கணேஷ் தயாரிக்க இருக்கிறார். மஞ்சப்பை, நயன்தாராவின் டோரா படங்களை தன் பேனர் மூலம் தயாரித்த இயக்குனர் சற்குணம் இந்த படத்தை இயக்குவதோடு இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். "இந்த படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியது, தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஜிப்ரான் இசையம...
ரஜினி சிறந்த அரசியல்வாதியாக வலம் வருவார்… சொன்னவர் யார் தெரியுமா..??

ரஜினி சிறந்த அரசியல்வாதியாக வலம் வருவார்… சொன்னவர் யார் தெரியுமா..??

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 31 அன்று அறிவித்தார். இது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்கள் என பலருக்கும் மகிழ்ச்சியை தந்தது. ரஜினிகாந்தின் நடிப்பில் நடிப்பில் அடுத்த படமாக ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2.0 வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். இவரது பேட் மேன் படம் வரும் ஜனவரி 26 ல் வருகிறது. இந்நிலையில் ரஜினியின் அரசியல் பற்றி அகஷ்ய் குமாரிடம் மும்பை நிருபர்கள் கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு அவர் ரஜினி நிச்சயமாக சிறந்த அரசியல் அதிகாரியாக வலம் வருவார் என கூறியுள்ளார்....
ஏ ஆர் ரகுமானோடு கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

ஏ ஆர் ரகுமானோடு கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து இப்போது பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு ‘சீமத்துரை’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் இந்த படத்தை தயாரிக்கும் ‘24 AM STUDIOS’ நிறுவனம் வெளியிடவில்லை. இந்த படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பும் முடிந்து விட்டது என்று கூறப்படுகிற நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சம்பந்தமான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. பொன்ராம் இயக்கி வரும் படத்தின் வேலைகளை முடித்ததும் சிவகார்த்திகேயன், ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். ‘இன்று நேற்று நாளை’ படத்தை TIME TRAVEL கதை பின்னணியில் இயக்கிய ரவிக்குமார் தனது அடுத்த படத்தை சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை பின்னணியில் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தி...
விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் – விமர்சனம்

விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் – விமர்சனம்

Review, Top Highlights
ஆந்திரா அமராவதி மாகாணத்தில் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்படுகிறது. இதில் அழகான தங்க சிலை ஒன்றை ஷாயாஜி ஷிண்டே கண்டெடுக்கிறார். மிகவும் அற்புதமான இந்த சிலையை பல கோடி ரூபாய்க்கு விலை பேசி விற்க முயற்சிக்கிறார். அதன்படி, நாயகன் நாக அன்வேஷ் மற்றும் அவரது நண்பர் சப்தகிரி மூலம் சென்னைக்கு வேன் மூலம் அந்த சிலையை அனுப்பி வைக்கிறார் ஷாயாஜி ஷிண்டே. மர்ம பார்சல் என்று நினைத்து கொண்டு செல்லும் நாக அன்வேஷ்க்கும் வழியில் போலீஸ்க்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. போலீசில் இருந்து தப்பிக்கும் நாக அன்வேஷின் வேன் விபத்துக் குள்ளாக, அதிலிருந்து சிலை வெளியே வந்து விழுகிறது. சிலையை பார்த்த நாக அன்வேஷ் பிரமித்துப்போய், சிலையை வர்ணிக்க ஆரம்பிக்கிறார். நாக அன்வேஷின் புகழ்ச்சி உரையாடலால் அந்த சிலை அழகிய பெண்ணாக மாறுகிறார். பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நாக அன்வேஷ், அவருடன் பழக ஆரம்பிக்கிறார். நாளடவைவில் இவ...
விஸ்வாசம் உண்மை நிலைவரும் என்ன ஏன் ரசிகர்களை குழப்புகிறார் இயக்குனர் சிவா

விஸ்வாசம் உண்மை நிலைவரும் என்ன ஏன் ரசிகர்களை குழப்புகிறார் இயக்குனர் சிவா

Latest News, Top Highlights
சமீபகாலமாக அஜித் அவர்களின் விஸ்வாசம் படத்தை பற்றி பல தகவல்கள் வெளியாகிறது அனால் எல்லாத்துக்கும் அமைதிகாக்கும் இயக்குனர் சிவா மற்றும் படக்குழு யார் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று சொவாதில் ஏன் இப்படி ஒருதயக்கம் என்று தெரியவில்லை படத்தின் டைட்டில் அறிவித்த இவர்களுக்கு யார் யார் என்று சொல்லவதில் இன்னும் தயக்கம் ஏன் என்றும் புரியவில்லை சிவா இயக்கத்தில் அஜித் அடுத்ததாக விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட வேலைகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றன. இதில் முன்பு கமிட்டாகியிருந்த யுவன் விலகினார் என சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் விசுவாசம் படத்திற்கு இசையமைக்க போவதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் அதனை மறுத்துள்ளார். ட்விட்டரில்...
தளபதயின் கடந்த ஆண்டில் வெளியான மெர்சல் பண்ணிய மேலும் ஒரு சாதனை

தளபதயின் கடந்த ஆண்டில் வெளியான மெர்சல் பண்ணிய மேலும் ஒரு சாதனை

Latest News, Top Highlights
விஜய் என்றாலே வெற்றி மற்றும் சாதனை நாயகன் என்று ஆகிவிட்டது காரணம் கடந்த வருடம் வெளியான மெர்சல் தளபதி விஜய்க்கு அப்படி ஒரு மணிமகுடம் அணிவித்த படம் என்று தான் சொல்லணும் ஆம் வசூலில் முதல் முதலில் 200 கோடி வசூல் பட்டியல் அதோடு சமுக வலைதளங்களில் அனைத்திலும் உலக சாதனை ட்விட்டர் கொடுத்த எமோஜி கௌரவம் இப்படி அடுக்கி கொண்டே போகலாம் அந்த வருசையில் அடுத்து சாதனை உலகம் முழுவதும் பிரபலமான விக்கீபீடியா இணையதளம் சென்ற வருடத்தின் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட பக்கங்களில் மெர்சல் படம் முதலிடம் பிடித்துள்ளது. அது 26 லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது. அடுத்த இடத்தை அஜித்தின் விவேகம் படம் பிடித்துள்ளது. அதற்கு 20.9 லட்சம் ஹிட்ஸ் மட்டுமே கிடைத்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பைரவா, விக்ரம் வேதா மற்றும் சிங்கம் 3 ஆகிய படங்கள் உள்ளன....
கமல் சிஷ்யன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் விக்கரம் இணையும் புதிய படம்

கமல் சிஷ்யன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் விக்கரம் இணையும் புதிய படம்

Latest News, Top Highlights
இந்திய சினிமாவின் கலை சிற்பி என்றால் அது கமல்ஹாசன் தான் என்று தெரியும் இதுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் மிக வித்தியாசமாக அதிக ரிஸ்க் எடுக்கும் நாயகன் என்றால் அது விக்ரம் அதாவது குட்டி கலை சிற்பி என்று கூட சொல்லலாம் இந்த இருவரில் ஒருவர் நடித்தாலே அந்த படத்தில் நடிப்புக்கும் விதியாசதுக்கும் பஞ்சம் இருக்காது ஆனால் இந்த இருவரும் ஒரு படத்தில் இருந்தால் எப்படி இருக்கும் சொல்லுங்க அதே போல இந்த இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று பல சினிமா விமர்சர்களின் எண்ணமும் அதே போல கவனும் அது இப்போது நிறைவேரபோகிறது. கமல்ஹாசன்- திரிஷா கூட்டணியில் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் வெளியான படம் தூங்காவனம். இப்படத்திற்கு பிறகு அவர் விக்ரமை வைத்து ஒரு புதிய படம் இயக்க, படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் பேனர் தான் தயாரிக்க இருக்கிறதாம். படத்தில் சின்ன வேடத்திலும் கமல்ஹாசன் நடிக்கலாம் என்றும் ...