Sunday, November 8
Shadow

Top Highlights

முக்கிய கதாபாத்திரத்தில் ஹரிஷ் உத்தமன் நடிக்கும் “மாயநதி”

முக்கிய கதாபாத்திரத்தில் ஹரிஷ் உத்தமன் நடிக்கும் “மாயநதி”

Latest News, Top Highlights
ட்ரீம் மில் சினிமாஸ் மற்றும் மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் குருவில்லா தயாரிப்பில் ஆஷிக் அபு இயக்கத்தில், டொவினோ தாமஸ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்திருக்கும் படம் 'மாயநதி'. கிருஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பற்றிய தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா கூறும் போது, "மாயநதி எங்கள் நிறுவனத்தின் 6வது படம். ஆஷிக் அபுவுடன் இணைந்து படம் தயாரித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கிருஸ்துமஸ் சீசன் என்பதால் தமிழகத்தில் நாங்கள் எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சென்னையிலும் கூட 6 திரையரங்குகள் தான் கிடைத்திருக்கின்றன. ஆனால் படத்திக்கு கிடைக்கும் வரவேற்பால் திரையரங்குகள் அதிகரிக்கும் என நம்புகிறோம்" என்றார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஹரிஷ் உத்தமன்,...
‘டாவு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவேறியது

‘டாவு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவேறியது

Latest News, Top Highlights
'தில்லுக்கு துட்டு' படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை தொட்ட இயக்குனர் ராம் பாலா நடிகர் 'கயல்' சந்திரனுடன் இணைந்து 'டாவு' படம் பண்ணுவது அனைவரும் அறிந்த செய்தியே. இந்த காமெடி கலந்த காதல் படத்தில் சந்திரனுக்கு ஜோடியாக ரேபா நடிக்கின்றார். இப்படத்தை 'Two Movie Buffs' நிறுவனம் தயாரிக்கின்றது. 'டாவு' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. எடுத்த காட்சிகளை போட்டு பார்த்த பிறகு 'டாவு' அணி மிகுந்த சந்தோஷமடைந்துள்ளது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ரகுநாதன் பேசுகையில் , '' முதல் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்கள் அணியின் திட்டமிடலும் அதனை சிறப்பாக செயல்படுத்தும் விதமும் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை எடுத்துள்ள காட்சிகள் அனைத்துமே சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை மிகவும் எதிர்நோக்கியுள்ளேன் '' கதாநாயகன்...
கவர்ச்சி கன்னி சன்னி லியோன்! வீரமாதேவி ஆகிறார்

கவர்ச்சி கன்னி சன்னி லியோன்! வீரமாதேவி ஆகிறார்

Latest News, Top Highlights
கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சன்னி லியோன் முதன் முறையாக வரலாற்று பின்னணி கொண்ட, தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தின் தலைப்பை சரியாக யூகித்து சொல்லும் ரசிகர்கள் பட பூஜை அன்று சன்னி லியோனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தியும் இணையதளங்களில் பரவி மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியது. இதனை தொடர்ந்து Sunny Leone in South என்ற ஹேஷ்டேக் நேற்று இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. லட்சக்கணக்கான ரசிகர்கள் தலைப்பை யூகித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 'வீரமாதேவி' என்ற படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். இந்த பெயர் தென்னகத்தின் வரலாற்று பின்னணியை கொண்ட மிக முக்கியமான வீரமங்கையின் பெயர் ஆகும்...
ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும் – விஷால்

ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும் – விஷால்

Latest News, Top Highlights
வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கும் உதவித்தொகை திட்டம் முக்கிய இடம் பெறுகிறது. புரட்சித்தலைவி அமரர் ஜெயலலிதா அவர்கள் முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார். 2011 இல் அவர் ஆட்சியமைத்தபோது 500 ரூபாயாக இருந்த இந்த உதவித்தொகையை ரூபாய் ஆயிரமாக உயர்த்தினார். 2016 இல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு முழுக்க சுமார் 21 லட்சம் முதியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுவதை உறுதி செய்தார். ரூபாய் 4 ஆயிரத்து 600 கோடி இந்த திட்டத்துக்காக மட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால் தமிழ்நாடு முழுக்கவே முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விதவைகளுக்கு வழங்கப்பட்ட உதவி தொகை கூட முறையாக கிடைக்கவில்லை. பிள்ளைகள் ஆதரவு இல்லாமல் தனியாக வசிக்கும் லட்சக்கணக்கான ஆண...
முடிவுக்கு வந்த விஷாலின் `இரும்புத்திரை’

முடிவுக்கு வந்த விஷாலின் `இரும்புத்திரை’

Latest News, Top Highlights
`துப்பறிவாளன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்திலும், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிதுள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6-ல் மலேசியாவில் நடைபெற உள்ளது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். வருகிற ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்த...
`தாதா 87′ படத்தில் பிரியங்கா பாடிய பெண்மையை உணர்த்தும் பாடல்

`தாதா 87′ படத்தில் பிரியங்கா பாடிய பெண்மையை உணர்த்தும் பாடல்

Latest News, Top Highlights
தாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகி பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார். லியாண்டர் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாருஹாசன், சரோஜா (கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் `தாதா 87' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2018-ல் படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் ‘கலை சினிமாஸ்’ முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி படத்தின் முதல் சிங்கிள் `ஆறடி ஆண்டவன்' பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது....
‘பலூன்’ படத்தில் எனது கிளவுன் வேடம் நிச்சயம் ரசிக்கப்படும் – நடிகர் ஜெய்

‘பலூன்’ படத்தில் எனது கிளவுன் வேடம் நிச்சயம் ரசிக்கப்படும் – நடிகர் ஜெய்

Latest News, Top Highlights
சுய விளம்பரங்கள் அவசியம் என கருதப்படும் சினிமாத்துறையில் ஒரு சில நடிகர்களே தாங்கள் பேசுவதை விட தங்கள் படங்கள் பேசுவதையே விரும்புவார்கள். அப்படியான ஒரு நடிகர் தான் ஜெய். அவரது அடுத்த படமான 'பலூன்' படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை சினீஷ் இயக்க, '70mm Entertainment' நிறுவனம் தயாரித்துள்ளது. 'பலூன்' படத்தை ''Auraa Cinemas' தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளது. இப்படத்தில் மூன்று வித்தயாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடித்துள்ளனர். 'பலூன்' படம் குறித்து ஜெய் பேசுகையில், '' 'பலூன்' தான் எனது முதல் திகில் படம். இதற்கு முன்பு நிறைய திகில் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை சுவாரஸ்யமானதாக இல்லாததால் மறுத்துவிட்டேன். இந்த 'பலூன்' பட கதையை இயக்குனர் சினிஷ் என்னிடம் சொன்னபொழுது, அது என்னை மிகவ...
`மாரி-2′ படக்குழுவில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

`மாரி-2′ படக்குழுவில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா' என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கின்றனர். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது கு...
புத்தாண்டுக்கு இசை விருந்தளிக்கும் `டிக் டிக் டிக்’ படக்குழு

புத்தாண்டுக்கு இசை விருந்தளிக்கும் `டிக் டிக் டிக்’ படக்குழு

Latest News, Top Highlights
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் உள்ளிட்டோர் டப்பிங் பணியை முடித்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கின்றனர். டி.இமான் இசையில் உருவாகியுள்ள இப்...
எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர் சுடுவது போல காட்சி படமாக்கப்பட்டது!

எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர் சுடுவது போல காட்சி படமாக்கப்பட்டது!

Latest News, Top Highlights
காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த தமிழக முதலவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. 1967 ஆம் ஆண்டு தமிழகத்தை அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்திய நிகழ்வு எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட சம்பவம். எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக அந்த சம்பவம் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி, அன்றைய திரைப்பட இயக்குனர்கள் பி.ஆர்.பந்துலு, கே.சங்கர் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், பி.ஆர்.பந்துளுவாக Y.G.மகேந்திரன், ஜானகி அம்மாவாக ரித்விகா, எம்.ஜி.சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, மற்றும் வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை,...