Sunday, November 8
Shadow

Top Highlights

திருமணத்திற்குப் பிறகு அனுஷ்கா ஷர்மாவிற்கு கிடைக்கும் சிறப்பு விருது

திருமணத்திற்குப் பிறகு அனுஷ்கா ஷர்மாவிற்கு கிடைக்கும் சிறப்பு விருது

Latest News, Top Highlights
பிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சா்வமாவுக்கு பீட்டா அமைப்பு இந்த ஆண்டின் சிறந்த நபர் என்ற விருதை அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சா்மா ஒரு சைவ பிரியர். இவா் வான வேடிக்கைகள், பட்டாசுகளின் தாக்கங்களில் இருந்து நாய்களை காப்பாற்றியதற்காகவும், வண்டிகளில் குதிரையைப் பூட்டி இழுக்கும் முறைக்கு எதிராகப் போராடியதற்காகவும் விலங்குகள் நல வாரியமான பீட்டா அமைப்பு இந்த ஆண்டின் சிறந்த நபர் என்ற விருதை அறிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பின் இணை இயக்குநா் ஒருவா் கூறுகையில், அனுஷ்கா சா்மாவின் ஆரோக்கியமான சைவ உணவுப் பழக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதேபோல் முடியும் நேரங்களில் எல்லாம் விலங்குகளுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்....
தமிழ்ப் புத்தாண்டை குறி வைத்த விஷால்

தமிழ்ப் புத்தாண்டை குறி வைத்த விஷால்

Latest News, Top Highlights
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் `இரும்புத்திரை'. இதில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மித்ரன் இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 26ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் `சண்டக்கோழி-2' படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்தார். `சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜ்கிரன், சதீஷ், சூரி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்....
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு  நான் நல்லது செய்யவேண்டும் – விஷால்

சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் – விஷால்

Latest News, Top Highlights
விஷால் நடிப்பில் , விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா , இயக்குநர் P.S. மித்ரன் , இயக்குநர் சுசீந்திரன் , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன் , இயக்குநர் திரு , நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விஷால் பேசியது :- இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம். பாண்டிய நாடு தொடங்கி நிறைய படங்களை தயாரித்துள்ளோம். இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம் ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை கட்டாயம் அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது. R.K நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக்கொண்டதில் மித்...
நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும்: ரஜினிகாந்த்

நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போது எனக்கு பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான். மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ராகவேந்...
“பேய் இருக்கா இல்லையா..?”; ஆறாம் திணை’ விழாவில் லாஜிக் சொன்ன பாக்யராஜ்..!

“பேய் இருக்கா இல்லையா..?”; ஆறாம் திணை’ விழாவில் லாஜிக் சொன்ன பாக்யராஜ்..!

Latest News, Top Highlights
MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ் கே .சோழன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, திரையரங்குகள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன், மறைந்த அப்துல் கலாம் அவர்களின் உதவியாளரான பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இசைத்தகட்டை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட திரு. அபிராமி ராமநாதன் பெற்றுக்கொண்டார். இந்தப்படத்தில் முக்கிய ...
விஷால் பற்றி சமந்தா சொன்ன ரகசியம் கோலிவுட்யில் பரபரப்பு

விஷால் பற்றி சமந்தா சொன்ன ரகசியம் கோலிவுட்யில் பரபரப்பு

Latest News, Top Highlights
விஷால் சமந்தா முதல் முறையாக இணையும் படம் இரும்பு திரை இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று மிக பிரமாண்டமாக சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது இதில் சினிமாவின் முக்கிய வி,ஐ.பி.கள் கலந்துகொண்டனர் விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘இரும்புத்திரை’. அர்ஜுன் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க, நடிகை சமந்தாவும் கலந்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சமந்தா தமிழ் சினிமாவில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது தான். நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, “விஜய் அல்லது சூர்யா என்றால் காலையில் முதல் முறை பார்க்கும் போது நான் பணிவாக வணக்கம் சொல்வேன், ஆனால் விஷால் என்றால் அது தலைகீழாக இருக்கும். விஷாலுககு என்னை விட ...
இயக்குனர் மகேந்திரன் என் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை இயக்குனர் -ப்ரியதர்ஷன்

இயக்குனர் மகேந்திரன் என் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை இயக்குனர் -ப்ரியதர்ஷன்

Latest News, Top Highlights
பொதுவாக ஒரு படம் எந்த வகையை சேரும் ,அப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் ஆகிய அம்சங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க அப்படத்தின் தலைப்பு உதவியாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் , நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடிப்பில் , பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் , சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'நிமிர்'. இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் M S பாஸ்கர் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'நிமிர்' என்ற தலைப்பை குறித்து இயக்குனர் ப்ரியதர்ஷன் பேசுகையில் , '' எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பெரிய ரசிகன் நான். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் 'நிமிர் ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிக பெருமையான விஷயம். நான் பல கா...
சன்னி லியோன் நடிக்கும் வரலாற்று படத்தின் தலைப்பு அறிவிப்பு

சன்னி லியோன் நடிக்கும் வரலாற்று படத்தின் தலைப்பு அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகை சன்னிலியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து உள்ளவர். வெளிநாட்டைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இந்தி சினிமாக்களிலும் நடித்தார். ‘ஜிஸ்ம்-2’ என்ற என்ற இந்திப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. இதனால் அவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் தமிழில் `வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம்பிடித்தார். இந்நிலையில், தென்னிந்திய படம் ஒன்றில் நடிகை சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். வி.சி.வடிவுடையான் இயக்கும் வரலாற்று படத்தில் சன்னி லியோன் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு குறித்து படக்குழு புதிர் வைத்திருந்த நிலையில், இந்த படத்திற்கு `வீரமாதேவி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ள...
காதலருடனான நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

காதலருடனான நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஸ்ருதிஹாசனுக்கும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலுக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. இருவரும் ஒன்றாக ஒருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்நிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் தந்தை கமல்ஹாசனுக்கு மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, சமீபத்தில் தாய் சரிகாவுக்கும் தனது காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். அதேபோல் ஆதவ் கண்ணாதாசனின் திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தனது காதலருடன் ந...
புத்தாண்டில் விஜய் 62 படத்தின் புதிய அறிவிப்பு?

புத்தாண்டில் விஜய் 62 படத்தின் புதிய அறிவிப்பு?

Latest News, Top Highlights
‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார். `துப்பாக்கி', `கத்தி' படங்களை தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். சமூக அக்கறை கொண்ட படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு வருகிற ஜனவரி இரண்டாவது பாதியில் அல்லது பிப்ரவரியில் தொடங்குகிறது. படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்த படத்திற்கு தலைப்பு இன்னமும் வைக்கப்படாத நிலையில், புத்தாண்டை முன்னிட்டு விஜய் 62 படத் தலைப்பு வெளியாக இருப...