Sunday, November 8
Shadow

Top Highlights

பார்ட்டியில் டிடி போட்ட செம ஆட்டம் – வைரலாகும் வீடியோ!

பார்ட்டியில் டிடி போட்ட செம ஆட்டம் – வைரலாகும் வீடியோ!

Latest News, Top Highlights
டிவி தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சர்ச்சையிலும் மிக பிரபலமான டிடி, சமீபத்தில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், நடன இயக்குநரும் நடிகருமான சதீஷ் என்பவருடன் இரவு நேர பார்ட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள டிடி, அவருடன் சேர்ந்து செம டான்ஸும் ஆடியுள்ளார். தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர் டிடி-யின் நடன திறமையை பாராட்டினாலும், பலர் அவரை விமர்சிக்கவும் செய்கின்றனர்...
புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் –  தருஷி நடிக்கும் “ செயல் “

புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் “ செயல் “

Latest News, Top Highlights
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.. இந்த படத்திற்காக கேரளாவில் பாபா பாஸ்கர் நடன அமைப்பில் “ நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா “ என்ற பாடல் காட்சியில் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி இருவரும் பங்குபெற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சாலக்குடி, வாகமன் போன்ற அடர்ந்த காடுகளில் மிகவும் சிரமப்பட்டு இந்த பாடல் காட்சியை படமாக்கினோம். சென்னையில் “ டே மாமா வி...
`சாமி-2′ படத்தில் இருந்து திரிஷா விலகியதற்கு இதுதான் காரணம்?

`சாமி-2′ படத்தில் இருந்து திரிஷா விலகியதற்கு இதுதான் காரணம்?

Latest News, Top Highlights
ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும், திரிஷா ஐய்யர் வீட்டு பெண்ணாகவும் நடித்திருந்தார்கள். 14 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி. தனது கதாபாத்திரத்தில் வலுவில்லை என்று கூறி, இப்படத்தில் இருந்து திரிஷா விலகினார். த்ரிஷா விலகியதற்கான சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அதற்கான காரணம் ஒருமாதிரியாக கிடைத்திருக்கிறது. `சாமி ஸ்கொயர்' படம் சம்பந்தமான சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகின்றது. வெளியான புகைப்படங்களில் `சாமி' படத்தில் வில்லனாக நடித்த பெருமாள் பிச்சைக்கு 29-வது நினைவு நாள் என்றும், அவருக்கு சிலை வைக்கப்படுவதாகவும், அவரது மகனாக பாபி சிம்ஹா வருவதாகவும் அந்த புகைப்படத்தில் தெரிந்து கொள்ள முடிகிற...
ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன் – பிரியங்கா சோப்ரா

ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன் – பிரியங்கா சோப்ரா

Latest News, Top Highlights
இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சினிமா அனுபவம் குறித்து பிரியங்கா கூறும் போது, “நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள். அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன். என்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்பபுக்காக நான் அனுசரித்துப் போகவில்லை. நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அது தான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்” என்று பேசி பரப...
உதயநிதியின் `நிமிர்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

உதயநிதியின் `நிமிர்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

Latest News, Top Highlights
மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் ‘நிமிர்’. மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மகேஷிண்டே பிரதிகாரன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். நாயகனாக உதயநிதி ஸ்டாலிலும், நாயகியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி போட்டோகிராபராக நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகி சிவா மற்றும் அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளனர். இந்நிலையில், ‘நிமிர்’ படத்தை, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுக்கு படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படத்தை பார்த்த மோகன்லால் படத்தையும், உதயநிதியையும் பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது....
மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு?

மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு?

Latest News, Top Highlights
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான ‘AAA’ படம் எதிர்ப்பார்த்தளவிற்கு சரியாக ஓடவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் AAA பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய சிம்பு இனி நடிக்கவே முடியாது என்று நினைத்தவர்கள், தற்போது இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆங்கிலத்தில் ஒரு படம் தயாரித்து வருகிறார். அந்த படத்தின் படம்பிடிக்கும் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது தனி ஒருவன், வேலைக்காரன் என சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மோகன் ராஜா அடுத்து இசையை மையமாக கொண்டு ஒரு திரை படம் இயக்க உள்ளாராம். அந்த படத்தில் சிம்புவை கதாநாயகனாக போட்டால் சரியாக இருக்கும் என்பதால் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது....
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் “கொரில்லா”

சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் “கொரில்லா”

Latest News, Top Highlights
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் தான் "கொரில்லா". ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக பயிற்சிப்படுத்தப்பட்ட சிம்பன்சீயை வைத்து இப்படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் நடிக்கவுள்ள சிம்பன்சீ தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான ‘சாமுட்’ பயிற்சி மையத்தால் பயிற்றப்பட்டது. இந்த பயிற்சி மையத்தில் இருந்து பயிற்றப்பட்ட சிம்பன்சீகள்தான் ஹேங்ஹோவர்-2, ப்ளேனட்ஸ் ஆஃப் தீ ஏப்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த சிம்பன்சீகளாகும். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இத்திரைப்படம் குறித்து இயக்குனர் டான் சேண்டி கூறியதாவது: “சிம்பன்சீகள் பெரும்பாலும் மிகவும் அறிவுள்ளவையாக...
தனுஷ் நடித்து இயக்கம் அடுத்த படம் அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடித்து இயக்கம் அடுத்த படம் அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
வடசென்னை', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'மாரி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு மேல் படமொன்றை இயக்க முடிவு செய்திருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. 'ப.பாண்டி' படத்தைத் தொடர்ந்து, தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படமாக இது உருவாகவுள்ளது. இயக்குநராக மட்டுமன்றி நாயகனாகவும் நடிக்கவுள்ளார் தனுஷ். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஏற்கெனவே ஊகிக்கப்பட்டதுபோல், நான் இயக்கும் அடுத்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அதில் நான் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறேன்' இதனை தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 2018-ல் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. மேலும், தனுஷ் - கார்...
காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும்: ரஜினிகாந்த்

காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 4-வது நாளாக அவரது ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இன்று ரசிகர்கள் முன்பு ரஜினி பேசும் போது, இன்று 4-வது நாள். இன்னும் 2 நாள் தான் இருக்கிறது. கோயம்புத்தூர், எனக்கு முக்கியமான இடம். அங்கே என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். சுவாமி சச்சிதானந்தன் அவர்களின் ஊர். அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்தவர். பழனி சித்தர் ஆசிர்வாததால் பிறந்தவர். இஞ்ஜினியரிங் படித்த அவர், தனது குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன், குடும்பத்தை வாழ்க்கையை விட்டு பழனி சாமிக்கு சிசியனாக மாறினார். பின்னர் இமயமலை சென்று சிவானந்த சாமியாரிடம் தீட்சை பெற்று சச்சிதானந்தன் என்று பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து இலங்கையில...
சங்கு சக்கரம் – திரை விமர்சனம் (கொண்டாட்டம்…) Rank 3/5

சங்கு சக்கரம் – திரை விமர்சனம் (கொண்டாட்டம்…) Rank 3/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் சில மாதங்களாக பேய் படங்களின் ஆதிக்கம் குறைந்திருந்த நிலையில் மீண்டும் பேய் படங்கள் வரிசை கட்டத் துவங்கியுள்ளன. பேய் படங்கள் என்றால் பயந்து ஒடுங்குவார்கள், ஆனால், அந்த பேயையே கலாய்க்கும் விதமாக ‘சங்குசக்கரம்’ என்ற படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே மையப்படுத்தி இக்கதை உருவாகியுள்ளது. பொதுவாக பேய் படங்கள் என்றாலே பேய்கள் எப்பவும் பிளாஷ் பேக் சொல்லும் படமாக தான் வரும் படத்தி அப்படி எல்லாம் இல்லாமல் மிகவும் வித்தியாசமாக கதை காலம் அமைத்துள்ளனர் அதோடு முழுக்க முழுக்க நகைச்சுவையில் நம்மை குலுங்க குலுங்க சிரிக்கவைத்துள்ளனர் ஒரு ஊரில் ஒரு பழைய மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது. அந்த மாளிகையை விற்பனை செய்ய முயலும் தரகர் ஒருவர், அதில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயை ஓட்ட இரு மந்திரவாதிகளை அனுப்புகிறார். 500 கோடி ...