Sunday, November 8
Shadow

Top Highlights

புரட்சி தலைவர் அமரர்  M.G.R அவர்களது 30-ஆம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் அஞ்சலி…

புரட்சி தலைவர் அமரர் M.G.R அவர்களது 30-ஆம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் அஞ்சலி…

Latest News, Top Highlights
தென்னிந்தியா நடிகர் சங்கம் சார்ப்பில் புரட்சி தலைவர் M.G.R 30-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், துணை தலைவர் கருணாஸ், செயற்குழு மற்றும் நிமான செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜூனியர் பாலையா, A.L.உதயா, அஜய் ரத்தினம், தளபதி தினேஷ், மனோ பாலா, லலிதா குமாரி, காஜா மொய்தீன், மருது பாண்டியன், ஹேமச்சந்திரன், வாசுதேவன், அயூப் கான்,ஜெரால்டு மற்றும் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்...
வசூலில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் இரண்டு நாள் வசூல் நிலவரம்

வசூலில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் இரண்டு நாள் வசூல் நிலவரம்

Latest News, Top Highlights
உலகமே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் காரணம் சிவகார்த்திகேயன் மற்றும் மோகன் ராஜா கூட்டணி அதோடு சிவகார்த்திகேயன் படம் என்றால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஒருபக்கம் அடுத்து சினிமாகாரர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் என்ன சாதிக்கிறார் என்பது தான் அதை ஈண்டும் நிருபித்துள்ளார் வெற்றியோடு வசூலிலும் மிக பெரிய சாதனை என்று தான் சொல்லணும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் படம் சமீபத்தில் வெளிவந்தது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். அவர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி படம் வந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர், முதல் நாள் மட்டுமே வேலைக்காரன் ரூ 8 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்தது. தற்போது இப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ 15.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வ...
தம்பி சிம்பு பாத்ருமை விட்டு முதலில் வெளியில வாங்க பிரபல தயாரிப்பாளர் காட்டம்

தம்பி சிம்பு பாத்ருமை விட்டு முதலில் வெளியில வாங்க பிரபல தயாரிப்பாளர் காட்டம்

Latest News, Top Highlights
தற்போது சினிமா பரபரப்பாக இருப்பது என்றால் அது வினியோகிஸ்தர் சங்க தேர்தல் இதிலும் இரண்டு அணிகளும் அரசியவாதிகளைவிட மிக மோசமாக வசை பாடுகிறார்கள் இங்கும் ஓட்டுக்கு காசு எல்லாம் இருக்கு இந்த சூழ்நிலையில் அருபதிக்கு அதரவாக செயல்படும் சிம்பு அப்பா டி.ராஜேந்தர் எல்லோரையும் எப்பவும் போல கொஞ்சம் அதிகமாகவே பேசுகிறார் இதனால் அத்திரபட்ட எதிர் அணி ஞானவேல் ராஜா வும் விடவில்லை நடிகர் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்காக பாத்ரூமில் டப்பிங் பேசினார் என இதற்குமுன் தயாரிப்பாளர் குற்றம்சாட்டியது பெரிய சர்ச்சையானது. சமூக வலைத்தளங்களில் சிம்புவை பலரும் வறுத்தெடுத்துவிட்டனர். இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பிரஸ் மீட்டில் பேசும்போது சிம்பு பற்றி விமர்சித்தார். "இவ்வளவு நடந்தபிறகும் சிம்பு மாறவில்லை.. பாத்ரூமை விட்டு வெளியே வாங்க சிம்பு! மகன் என்ன செய்கிறான் என மாடியில் இருந்து கீழே வந்து ப...
புரட்சி தலைவர் MGR டைட்டிலான மதுரவீரனில் சண்முகபாண்டியன் நடிப்பது பெருமையாக உள்ளது – திருமதி. பிரேமலதா விஜயகாந்த் !

புரட்சி தலைவர் MGR டைட்டிலான மதுரவீரனில் சண்முகபாண்டியன் நடிப்பது பெருமையாக உள்ளது – திருமதி. பிரேமலதா விஜயகாந்த் !

Latest News, Top Highlights
மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கேப்டன் விஜயகாந்த் , திருமதி. பிரேமலதா விஜயகாந்த் , L.K. சுதீஷ் , இயக்குநர் வெங்கட்பிரபு , படத்தின் தயாரிப்பாளர் சுப்புநாராயணன் , இயக்குநர் / ஒளிப்பதிவாளர் P.G. முத்தையா , கவிஞர் யுகபாரதி , இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி , படத்தொகுப்பாளர் பிரவீன் K.L , நடிகர் சமுத்திரகனி , எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி , Stunner ஷாம் , நடன இயக்குநர் சுரேஷ் , நடிகர் மைம் கோபி , தயாரிப்பாளர் / நடிகர் தேனப்பன் , நடிகர் மாரிமுத்து , நடிகர் தம்பிராமையா , நாயகி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். கேப்டன் விஜயகாந்த் பேசியது :- வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய மகன் சண்முகபாண்டியன் நடித்த படம் என்பதால் அவரை பற்றி நான் நிறைய பேச விரும்பவில்லை. என் மகனை பற்றி யாராவது குறை கூறியிருந்தால் அதற்கு நான் விளக்...
பலூனில் நடிக்க காரணம் பற்றி மனம் திறந்த அஞ்சலி

பலூனில் நடிக்க காரணம் பற்றி மனம் திறந்த அஞ்சலி

Latest News, Top Highlights
விடாமுயற்சியும் உழைப்புமே வெற்றியாளர்களை சாதாரணமானவர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது . வருடாவருடம் நூற்றுக்கணக்கான கதாநாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு சிலரே முத்திரையை பதிக்கின்றனர். அதிலும் குறிப்பிட்ட ஓரிருவர் நட்சத்திரமாக ஜொலிப்பது மட்டுமின்றி, சிறந்த நடிப்பாற்றலையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த பட்டியலில் , நட்சத்திர அந்தஸ்துக்கு தன்னை உயர்த்திக்கொண்டு , சிறந்த நடிப்புக்கும் பெயர்போனவர் நடிகை அஞ்சலி. இவரது அடுத்த படமான 'பலூன்' படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை சினிஷ் இயக்கியுள்ளார். 'பலூன்' வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. 'பலூன்' குறித்து அஞ்சலி பேசுகையில் , '' ஒரு படத்தின் முழு கதயையையும் கேட்டறிந்து, படித்த பிறகே அதில் நடிக்க ஒப்புக்கொள்வேன் . இந்த 'பலூன்' படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம், எனக்கு பேய் படங்கள் பிடிக்கும் என...
விஜயை ஓவர் டேக் பண்ண அஜித் எதில் தெரியுமா ?

விஜயை ஓவர் டேக் பண்ண அஜித் எதில் தெரியுமா ?

Latest News, Top Highlights
ஜினி - கமல் இருவருக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக திகழ்வது அஜித் மற்றும் விஜய் தான். இவர்கள் படம் மட்டும் அல்ல, இவர்கள் பற்றி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். ஆனால், இருவருக்கும் இடையே ரொம்பவே வித்தியாசம் உண்டு. ரசிகர்களை அரவனைத்து செல்லக் கூடியவர் விஜய். ஆனால், அஜித்தோ ரசிகர்கள் வேண்டாம், அவர்கள் அவர்களது வாழ்க்கையை பார்க்க வேண்டும், என்று அறிவுரை சொல்வார். ரசிகர்கள் வேண்டாம், என்று சொன்னாலும், இப்போதும் அஜித்தின் ஒவ்வொரு படத்தின் ரிலிஸின் போதும், அவரது ரசிகர்கள் பெரிய அளவில் மாஸ் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘விவேகம்’ எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், விஜயின் ‘மெர்சல்’ எதிர்பாராத வெற்றியை பெற்றுவிட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது, அஜித் ரசிகர்கள் உற்சாகமடையும் தருணம் வந்துவிட்டது. ...
விரைவில் மதுரை விநியோகஸ்தர் சங்கத் தேர்தலிலும் நம்ம அணி போட்டியிடும். ஞானவேல் ராஜா அறிவிப்பு

விரைவில் மதுரை விநியோகஸ்தர் சங்கத் தேர்தலிலும் நம்ம அணி போட்டியிடும். ஞானவேல் ராஜா அறிவிப்பு

Latest News, Top Highlights
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிந்தாமணி முருகேசனின் ஆசியுடன் , அனைத்து உறுப்பினர்களின் வாழ்வதாரத்திற்காகவும், மூத்த உறுப்பினர்களின் நலன்களுக்காக பாடுபடவிருப்பதாகவும் 2017=2019 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் தலைவர் பதவிக்கு நம்ம அணியின் சார்பாக போட்டியிடுகிறேன் என்று விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்காக 2017 =19 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் நம்ம அணி சார்பாக போட்டியிடுபவர்களின் பத்திரியகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஞானவேல்ராஜா, துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் கே ராஜன், பொருளாளர் பதவிக்கு மெட்டி ஒலி மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்காக போட்டியிடுபவர்...
அருவி திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நாயகிக்கு  தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !

அருவி திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !

Latest News, Top Highlights
அருவி திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபுவை தொலைப்பேசியில் அழைத்து ஏற்கனவே பாராட்டியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபு மற்றும் நாயகி அதீதிபாலனை நேரில் அழைத்து சிறந்த படைப்பை தந்ததற்காக இருவருக்கும் தங்க செயினை பரிசாக அளித்துள்ளார். அருவி படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரபுவையும் வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் என்ன படங்களையெல்லாம் தயாரித்துள்ளார் என்பதை கேட்டுள்ளார். அவர் தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் மாநகரம் , தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை தயாரித்துள்ளேன் என்று பதிலளித்த போது. நீங்கள் தயாரித்த எல்லா படங்களையும் நான் பார்த்துவிட்டேன் எல்லா படங்களும் தரமான படங்கள். இதை போன்ற படங்களை தொடர்ந்து தயாரியுங்கள் என்று கூறியுள்ளார். இயக்குநர் அருண்பிரபுவிடம் சூப்பர்ஸ்ட...
சக்க போடு போடு ராஜா – விமர்சனம் Rank 2.5/5

சக்க போடு போடு ராஜா – விமர்சனம் Rank 2.5/5

Review, Top Highlights
சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பரான சேதுவின் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். சேது காதலிப்பது, பிரபல ரவுடி சம்பத்தின் தங்கை. இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார். சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று பெங்களூரு சென்று விடுகிறார். அங்கு வைபவியை பார்த்தவுடன் காதல் வலையில் விழுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். வைபவியின் அண்ணன் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தானத்தை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இதற்கிடையில் வைபவியை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. இறுதியில் இந்தப் பிரச்சனைகளை சந்தானம் எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தோற்றம், ஸ்டைல், நடனம், சண்டை என அனைத்திலும் தன்னுடைய திறமையை...
சங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..!

சங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..!

Latest News, Top Highlights
குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன. இந்தமுறை குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சங்கு சக்கரம்'. இந்த சங்கு சக்கரம்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தைப்போலவே இந்தப்படம் இருப்பதையும் உணர முடிகிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற நகைச்சுவையும் கிண்டல் கேலியும் நிறைந்த படங்களை தயாரித்த லியோவிஷன் வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் சினிமா வாலா பிச்சர்ஸ் கே.சதீஷ் ஆகியோ...