Sunday, November 8
Shadow

Top Highlights

இருமுகன் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் ரெட்டி நாயகன்

இருமுகன் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் ரெட்டி நாயகன்

Latest News, Top Highlights
‘அரிமா நம்பி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். அதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கினார். இரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கும் இந்த படத்தில், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ரசிகர்களிடையேயும், வணீக ரீதியாகவும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும், அதனை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகன் யார் என்பதில் புதிர் வைத்திருந்தார் ஞானவேல் ராஜா. இந்த புதிருக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தெலுங்க...
டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் !

டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் !

Latest News, Top Highlights
க்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்டு வரும் படம் 'டிராபிக் ராமசாமி'. இந்தப் படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்படும் படமாகும். இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய மனைவியாக ரோகினி நடிக்கிறார் . இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியவரும் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெளரவதோற்றத்தில் பங்குபெறுகிறார்கள். இவர்கள் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக இருக்கும். பிரகாஷ் ராஜ் இப்போது ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷ்னராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இத...
அடுத்தடுத்து பிசியான காலா பட நாயகி

அடுத்தடுத்து பிசியான காலா பட நாயகி

Latest News, Top Highlights
மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ‘யோகன்’ படத்தில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். தொடர்ந்து திருட்டு விசிடி, அத்யன், க க க போ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிக்கிற குதிர படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இதுதவிர பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திலும் நடித்திருக்கிறார். ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவ்வாறாக பிசியாக இருக்கும் சாக்ஷி அடுத்ததாக மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ‘ஓராயிரம் கினாக்களாள்’ என்ற படம் மூலம் மலையாள சினிமாவிலும் அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனரான ப்ரமோத் மோகன் இயக்கும் இந்தப் படத்தில் பிஜு மேனன் ஜோடியாக சாக்‌ஷி நடிக்கிறார். இப்படத்தில் இவரே சொ...
நெப்போலியன் படத்தின் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ்

நெப்போலியன் படத்தின் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ்

Latest News, Top Highlights
தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், தற்போது நடிகராகவும் வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக `பில்லா பாண்டி' படம் உருவாகி உள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர வேட்டைநாய், தனிமுகம், முகம், வர்கம் உள்ளிட்ட படங்களிலும் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். விக்ரமின் ஸ்கெட்ச், விஜய் ஆண்டனியின் காளி படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் டிராபிக் ராமசாமி, ஷைக்கரி சாம்பு, கரும்புள்ளி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'நெப்போலியன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றியிருக்கிறார். தனதுன் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெற்றிப் படமான 'தர்மதுரை'க்குப் பிறகு வித்தியாசமான நல்லதொரு கதைக்குக் காத்திருந்த ஆர்.கே.சுரேஷுக்கு ‘நெப்போலியன்’ படத்தின் கதை மிகவும...
ஜெய்யின் பலூனுக்கு கிடைத்த வரவேற்பு: சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

ஜெய்யின் பலூனுக்கு கிடைத்த வரவேற்பு: சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கியிருக்கும் படம் 'பலூன்'. ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், யோகி பாபு, கார்த்திக் யோகி, ராஜ் தருண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' நிறுவனம் சார்பில் திலீப் சுப்பராயன் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் திரையரங்கு உரிமையை ஆரா சினிமாஸ் கைப்பற்றியிருந்த நிலையில், தொலைக்காட்சி உரிமையை (Satellite Rights...
‘கோலி சோடா 2’ – கடையை மூடினார் விஜய் மில்டன்

‘கோலி சோடா 2’ – கடையை மூடினார் விஜய் மில்டன்

Latest News, Top Highlights
சில படங்கள் மட்டும் தான் நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும் கதை பலத்தால் பெரும் வெற்றி பெற்று அடுத்த பாகங்களுக்கு வழி வகுக்கும். இது போன்ற ஒரு படம் தான் 'கோலி சோடா'. சில வருடங்களுக்கு முன்பு ரிலீசான இப்படம் அசத்தலான வெற்றியை பெற்றது. இப்படத்தின் அடுத்த பாகம் 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. 'கோலி சோடா 2' படத்தின் நடிகர்கள் மற்றும் கதை பின்னணி வேறாக இருந்தாலும், 'கோலி சோடா' முதல் பாகத்தின் சாராம்சம் இப்படத்தில் நிச்சயம் இருக்கும் என இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் கூறியிருந்தார். தற்போது, 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட பணிகளை விரைவில் முடிக்க படக்!குழு திட்டமிட்டுள்ளது. படம் குறித்து இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில், '' நாங்கள் திட்டமிட்டபடியே 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பை தொடங்கி...
விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு எப்போது எங்கே விவரம் உள்ளே

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு எப்போது எங்கே விவரம் உள்ளே

Latest News, Top Highlights
விவேகம் படத்துக்கு பிறகு மீண்டும் நான்காவது முறையாக இணையும் அஜித் மற்றும் சிவா என்பது உறுதிசெய்யப்பட்டது இந்த படத்தின் டைட்டில் விஸ்வாசம் இதுவும் நாம் அறிந்த விஷயம் இந்த படத்தின் மற்ற நட்சத்திர தேர்வு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்த சூழ்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் மட்டும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இந்த படத்தில் மிக பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி இல்லாமல் நடிக்கப்போகிறார் என்பதும் நாம் அறிந்த விஷயம் இவரின் தற்போதைய லுக் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆனது ஆக இந்த படத்தின் அஜித் மீண்டும் இளமையான தோற்றத்தில் அதாவது சால்ட் அண்ட் பெப்பர் இல்லாமல் நடிக்கப்போகிறார் அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் 19ம் தேதி சென்னையில் ஆரம்பிக்க போகிறது படத்தை 20...
‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் ரிலீஸ்க்கு செக் வைத்த நடிகர் விமல் ,படம் வெளியாகுமா?

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் ரிலீஸ்க்கு செக் வைத்த நடிகர் விமல் ,படம் வெளியாகுமா?

Latest News, Top Highlights
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. ஹர்சினி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் தணிக்கைப் பணிகள் முடிவடைந்து, ஜனவரி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. தற்போது இப்படத்தின் வெளியீட்டிற்கு எதிராக நடிகர் விமல், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் தயாரிப்பாளர் முருகனின் ஹேமந்த் மூவிஸ் தயாரிப்பில் 'ஜன்னல் ஓரம்' என்ற படத்தில் நடித்திருந்தேன். இந்த பட வெளியீட்டு சமயத்தில் நிதி நெருக்கடியில் தயாரிப்பாளர் சிக்கியிருந்த காரணத்தால் திட்டமிட்ட தேதியில் படத்தைக் கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டார். அப்போது என்னை அணுகி பட வெளியீட்டிற்காக நிதியுதவி செய்யும்படியும், படம் வெளியான பிறகு ஒரே வாரத்தில் பணத்தை திருப்பித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, ...
உதயநிதியின் அடுத்த அவதாரம்

உதயநிதியின் அடுத்த அவதாரம்

Latest News, Top Highlights
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள `நிமிர்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் `கண்ணே கலை மானே' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். விவசாயத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஜனவரி 19-ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தை முடித்த பிறகு, உதயநிதி அடுத்ததாக `இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் உதயநிதி ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது....
முதல்முறையாக இந்த தோற்றத்தில் நடிக்கும் அமலாபால்

முதல்முறையாக இந்த தோற்றத்தில் நடிக்கும் அமலாபால்

Latest News, Top Highlights
தமிழ், மலையாளம், தெலுங்கு என பிசியாகி இருக்கும் நடிகை அமலாபால். இவர் அரவிந்த் சாமி ஜோடியாக நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அமலாப பால் அடுத்ததாக விஷ்ணு விஷால் ஜோடியாக ‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்க இருக்கிறார். ராம் குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ‘ஆயுஸ் மான்பவ’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் காதல் படமாக உருவாக இருக்கிறது. இதில் அமலாபால் முஸ்லிம் பெண்ணாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சரண் தேஜ் என்பவர் இயக்குகிறார். மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக `காயம்குளம் கொச்சுண்ணி' படத்தில் ஒப்பந்தமான அமலாபால் சமீபத்தில் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது....