Friday, November 6
Shadow

Top Highlights

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்

Latest News, Top Highlights
கைபா பிலிம்ஸ் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற தனது முதல் ஹாலிவுட் திரைப்படத்தை அறிமுகபடுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. தொன்றுதொட்டே தமிழனுக்கும் கலைக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. நம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்க்கும் வகையில், கைபா பிலிம்சின் மூலம் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரையுலகின் மாவீரனாக அழைக்கப்படும் நெப்போலியன் இத்திரைப்படத்தின் மூலம் அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார். எதிர்நாயகனாக தனது திரைப்பயணத்தைத் துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கதாநாயகனாக உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது தளராத முயற்சியால் அரசியலிலும் களம் கண்டு, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அரசின் சமூகநீதி துறை...
சிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் பட தலைப்பு கசிந்தது!

சிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் பட தலைப்பு கசிந்தது!

Top Highlights
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய இடத்தை பிடித்தவர் என்றால் அது சிவகார்த்திகேயன் விரைவில் அவர் நடித்து வெளிவரவிருக்கும் படம் வேலைக்காரன் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ் சினிமாவே வியக்கும் அளவுக்கு இந்த விழா நடைபெற்றது. வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ராஜா தயாரிப்பில் பொன்ராம் நியக்கத்தில் சமந்தாவுடன் நடிக்கும் படம் தற்போது மிக மும்முரமாக படப்பிடிப்பு நடந்து கொன்று இருக்கிறது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த பொன்.ராம் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்....
போஸ்டரின் மூலம் சர்ச்சையை கிளப்பிய ரஜினி படம்

போஸ்டரின் மூலம் சர்ச்சையை கிளப்பிய ரஜினி படம்

Latest News, Top Highlights
ரஜினியின் தீவிர ரசிகரான கபாலி செல்வா இயக்கத்தில் உருவாகியிருக்கும் '12-12-1950' படத்தின் போஸ்டரால் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ரஜினியின் தீவிர ரசிகரான கபாலி செல்வா இயக்கி நடித்திருக்கும் '12-12-1950' படம் வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்கு சர்ச்சை மிக அவசியம் என கருதப்படும் இந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் பற்றிய இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான சில போஸ்டர்களும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயில் 'பரோல்' என்பதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் சமீபத்தைய போஸ்டரில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றியும், பரோல் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் 'பரோல்' என்ற வார்த்தையை விரும்பாத சிலர் இப்பட தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி மிரட்டியுள்ளனர். அதேபோல், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தி...
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த கமலின் `விஸ்வரூபம்-2′

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த கமலின் `விஸ்வரூபம்-2′

Latest News, Top Highlights
கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் `விஸ்வரூபம்-2' படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'. இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாவது பாகத்திற்கான 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், மீதமிருக்கும் காட்சிகள் சில வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் கமல் ஹாசன், ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். சென்னை ஓ.டி.ஏ இராணுவ முகாமில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வரும்...
ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் வேட்பு மனுத்தாக்கல்

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் வேட்பு மனுத்தாக்கல்

Latest News, Top Highlights
காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் ஆர்.கே.நகரில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று ஆர்.கே.நகர் சென்ற விஷால் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக காமராஜர், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஷால் அண்ணா, ஜெயலலிதா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். பின்னர், ஆர்.கே.நகர் சென்ற விஷாலுக்கு 68வது டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து 4.20 மணியளவில் தேர்தல் அதிகாரிய...
உழைக்கும் வர்க்கத்தை பற்றிய ஒரு படம் தான் இந்த வேலைக்காரன். – மதன் கார்க்கி.

உழைக்கும் வர்க்கத்தை பற்றிய ஒரு படம் தான் இந்த வேலைக்காரன். – மதன் கார்க்கி.

Top Highlights
24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயனின் அப்பா இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை ஆர் டி ராஜா செய்து வருகிறார். ஒரு பிரமாண்ட படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் அவர் சாப்பிடுவது சாதாரண சுந்தரி அக்கா கடையில் தான். உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் தங்கக் காசு கொடுத்த இந்த உள்ளத்துக்கு நன்றி. மொழிமாற்று படம் தான் எடுப்பார் ராஜா என பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தனி ஒருவன் என்ற படத்தை கொடுத்து மிரட்டியவர் ராஜா. ராஜாவும், ராஜாவும் சேர்ந்து மக்கள் செல்வனாக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு உன்னத படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்...
அஜித்தின் விஸ்வாசம் வீரம் இரண்டாம் பாகமா கசிந்த தகவல்

அஜித்தின் விஸ்வாசம் வீரம் இரண்டாம் பாகமா கசிந்த தகவல்

Top Highlights
தமிழ் சினிமாவில் தல என்று செல்லமாக அழைக்கும் அஜித் அடுத்த படம் என்னவென்று அவரது ரசிகர்களுகள் மிகவும் ஆவலோடு இருந்த நேரத்தில் அதிரடி அறிவிப்பை அறிவித்தார் தல அஜித் அதுவும் படத்தின் தலைப்புடன் இதனால் அஜித் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார் என்றும் சொல்லலாம் தற்போது அஜித் ரசிகர்கள் காத்திருப்பு எதுக்கு என்றால் மற்ற நட்சத்திரங்கள் யார் என்றும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது தற்போது தமிழ் சினிமாவில் அதிக அளவில் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிகொண்டிருக்கும் தல அஜித்குமார் படம் விஸ்வாசம்.தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த 4 பேரில் ஒருவரான பாலா தலயின் விஸ்வாஸம் படத்தில் நடிக்க உள்ளார்.இதை அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் கூறினார்.விஸ்வாஸம் திரைப்படம் 2018 தீபாவளி அன...
தளபதி 62யில் தளபதி விஜய்யுடன் நடிக்க ஒரு அறிய வாய்ப்பு

தளபதி 62யில் தளபதி விஜய்யுடன் நடிக்க ஒரு அறிய வாய்ப்பு

Top Highlights
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இளைய தளபதி விஜய்.இவருக்கு பலமே இவரது ரசிகர்கள் தான்.இவரை ஒருபோதும் ரசிகர்கள் விட்டுகொடுத்தில்லை.இவரது கலைபயணம் தொடங்கி இன்றுடன் 25 வருடம் நிறைவடைகிறது.இவரது கலைபயணத்தை சிறப்பிக்கும் விதமாக டிவிட்டரில் இன்று ஸ்பேஷல் டேக் செய்து உலகளவில் டிரெண்ட் செய்ய முடிவெடுத்துள்ளனர்.இந்நிலையில் தளபதி விஜயுடன் "தளபதி62" படத்தில் நடிப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.தங்கள் புகைப்படம் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் teammurugadoss.actors@gmail.com....
பட வாய்ப்பு இல்லாதால் வெளிநாட்டு காதலனை திருமணம் செய்ய போகும் சுருதி ஹாசன்

பட வாய்ப்பு இல்லாதால் வெளிநாட்டு காதலனை திருமணம் செய்ய போகும் சுருதி ஹாசன்

Top Highlights
தமிழ், தெலுங்கு, இந்தியில் பிசியாக நடித்தவர் சுருதிஹாசன். கடைசியாக அவருடைய தந்தையுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வந்தார். தற்போது அந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. வேறு படங்களிலும் நடிக்கவில்லை. விரைவில் 2 படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சுருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த அவருடைய நண்பர் மைக்கேல் கார்சல் என்பவருடன் பழகி வருகிறார். இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. அவரை சுருதிஹாசன் காதலிப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வலம் வருகின்றன. இந்த நிலையில், நண்பர் மைக்கேல் கார்சலை தனது தாயார் சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரை சரிகா பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. இது, இந்தி ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சுருதிஹாசன் விரைவில் மைக்கேலை திருமணம் செய்ய இருக்கிறார். அதற்காகத்தான் இந்த சந்திப்...
லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ் கலக்கல் பேட்டி !

லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ் கலக்கல் பேட்டி !

Top Highlights
"சத்யா" திரைப்படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் சத்யராஜ் பேசியது :- நான் பாகுபலி படத்தின் படபிடிப்பில் இருந்த போது சிபி என்னை தொடர்பு கொண்டு ஷணம் படத்தை பற்றி விசாரிக்கும் படி கூறினார். நான் பிரபாஸிடம் ஷணம் படத்தை பற்றி கேட்டேன். என்னிடம் அவர் “ ஷணம் “ நல்ல படம் எதற்காக கேட்குக்றீங்க என்றார். அதற்கு நான் என் மகன் சிபிராஜ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா என்று கேட்கிறார் என்றேன். ஷணம் தரமான படம் கண்டிப்பாக வாங்கலாம் என்று சிபிராஜ் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன் பின் தான் நாங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம். ந...