Friday, January 17
Shadow

தனுஷ் மற்றும் கஜோல் மோதல் நான் நல்லவர்கள் என்று நினைத்தேன் ஆனால் – கஜோல்

தனுஷ் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.கஜோல் முதலில் இந்த படம் தமிழ் மட்டும் என்று தான் எடுத்தார்கள் ஆனால் திடீர் என்று ஹிந்தி என்று சொன்னதும் பிரச்சனைகள் ஆரம்பம் படப்பிடிப்பு முடியும் வரை தனுஷுக்கும் கஜோலுக்கும் எந்த பிரச்சனையும் இல்லையாம். ஆனால் தற்போது ஹிந்தி டப்பிங் விஷயத்தில் இவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

இப்படத்துக்கு தனுஷ் கதை, வசனம் எழுதியுள்ளார். இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகிறது.

எனவே முதல் பாகத்தில் நடித்த அமலா பால், சமுத்திரக்கனி, விவேக், ரிஷிகேஷ் ஆகியோர் இதிலும் நடிக்கிறார்கள். இவர்கள் போக ஹிந்தி நடிகை கஜோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நடந்த இப்படத்தின் இசை விழாவில் பேசிய கஜோல், ” முதலில் தனுஷும் சௌந்தர்யாவும் என்னிடம் தமிழில் டயலாக் இருக்காது என கூறினார்கள். நானும் இவர்கள் ரொம்ப நல்லவர்கள் என நினைத்தேன்.

ஆனால் முதல் நாளே இரண்டு பக்கத்துக்கு தமிழில் டயலாக் கொடுத்தார்கள். எனினும் எனக்கு படப்பிடிப்பில் பக்க பலமாக இருந்தார்கள்” என்றார்.

Leave a Reply